என்ன வாழ்க்கைடா இது?

ஒரு பிறந்தநாள் பார்ட்டிக்கு போய் இருந்தேன் .என் மச்சானின் ஒன்றுவிட்ட முறையுள்ள அண்ணனின் மகளுக்கு அன்று முதலாவது பிறந்தநாள் .பார்ட்டி வெகு அமர்க்களமாக நடந்த்து கொண்டு இருந்தது .தனிமையான ஒரு இடத்தில் போய் அமர்ந்து கொண்டேன் .தமிழ் பெண்கள் எக்கச்சக்கம் பேர் வந்து இருந்தனர் .பதின்மூன்று,பதின் எட்டு ,இருபத்தி மூன்று என்ற வயதுக்கணக்கில் இருந்தனர் .பார்க்கவே இந்திரலோகத்து பதுமைகள் போல் இருந்தனர் .பொதுவாக எனக்கு பெண்களின் அதுவும் அழகிய பெண்களின் முன்னால் இருப்பதென்றால் ஒருவிதமான கூச்ச சுபவமாக இருக்கும்.அதனால் அவர்களை பார்க்காதது போல் இருந்து கொண்டேன்.சர்த்தப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவர்களை ஓரக்கண்ணால் அடிக்கடி பார்த்துக் கொண்டு இருந்தேன் .ஓசியில் பீர் குடிக்கலாம் என்ற நினைப்பில் போய் இருந்த  எனக்கு கொஞ்சம் ஏமாற்றமாகவே இருந்தது .பீர் கிடைக்கவில்லை .ஷிவஷ்கா என்கின்ற சாராயமே இருந்தது .எனக்கு  சாராயம் குடித்து   பழக்கம் இல்லை .ஆதலால் அன்று என் ஓசி பீர் கனவு பலிக்கவில்லை .இதில் நான் கவலை கொண்ட இன்னொரு விஷயத்தை  உங்களிடம் பகிர்ந்து கொண்டே ஆகவேண்டும் .நான் இருந்த மேசைக்கு பக்கத்தில் ஒரு சீன தம்பதியினர் வந்து அமர்ந்தனர் .அவர்களை பார்க்கும் போது ஒரு நிறுவனத்தின் பொதுமேலாளராக இருக்க வேண்டும் அல்லது ஏதாவது ஒரு கடையின் உரிமையாளராக இருக்க வேண்டும் என்பது புரிந்தது .ஃபிரெஞ்சு அவர்களுக்கு 100 விலுக்காடு தெரிந்தே இருக்கும் .ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டது தங்களின் சொந்த மொழியில் .ஆனால் நான் அடிக்கடி சைட் அடித்துக் கொண்டிருந்த அந்த அழகிய தமிழ்  பெண்கள் தங்களுக்குள் பேசிக்கொண்டது பிரெஞ்சில் .தமிழ் மீது அலாதியான அன்பு கொண்ட எனக்கு அது மிகுந்த மன வேதனையை அளித்தது என்ன வாழ்க்கைடா இது?

Advertisements

பாரிஸ்… பாரிஸ்… பாரிஸ்…. (பாகம் ஒன்று)

இன்றோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது நான் பாரிஸ் வந்து.அதைப்பற்றி சொல்லலாம் என்றுதான் முதலில் யோசித்தேன்.ஆனால் அதைப்பற்றி சொல்லாமல் முதலில் நான் மூன்று மாத பப்பி(விசா) எடுத்ததைப் பற்றி சொல்லுகின்றேன். திங்கட்க்கிழமை முந்தின இரவே சொல்லிவிட்டார் நாளைக்கு ஒரு ஐந்து மணிபோல் எழும்பு என்று.சிவனே என்று நொந்து விட்டு எப்படியோ சமாளித்துக்கொண்டு திட்டமிட்டபடியே அலாரம் வைத்து ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி விட்டேன்.குளிர் தண்ணியில் முகத்தை அலம்பிவிட்டு பல் துலக்காமல்(கவனிக்க:பல் துலக்காமல்)தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் எழும்பி விடாமல் பூனை போல் மெதுவாக சப்பாத்தையும் கோர்ட்டையும் மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு நான்கு நிமிடம் நடந்து ட்ராம் கோல்ட் சென்று ட்ராம்மிற்காக காத்திருந்து அது வந்தவுடன் அதில் ஏறியபோது மணி 5 : 45 தாண்டி இருந்தது.பப்பி என்பது இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஒரு வெளிநாட்டுப்பிரஜை தனக்கு ஒரு உண்மையான வதிவிட வசதியை குறிப்பிட்ட நாடு வழங்கும் முன்னர் அது சம்பந்தமான குறிப்பிட்ட ஒரு சில தனி மனித சுகந்திரத்திற்காக பெற்றுக்கொள்ளும் ஒரு ஆவணம்.பெயர் பிறந்த ஆண்டு பிறந்த நாடு போட்டோ எல்லாம் போட்டு தருவார்கள்.அதை எடுத்துக் கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும்.மாட்டினால் கம்பி என்னும் ஒரு மகத்தான வேலை கிடைக்கும். (மேலும்…)