தாரை தப்பட்டை

நேற்றுத்தான் தாரை தப்பட்டை பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் ஆபாசக் குப்பை.பாலா தாரை தப்பட்டை எடுத்திருந்ததற்குப் பதில் போர்னோ படம் ஏதாவது எடுத்திருக்கலாம். அந்தளவிற்கு தாரை தப்பட்டையின் காட்சிகளும், வசனங்களும் ஒரு போர்னோ படத்திற்குரிய அம்சங்களுடனிருந்தன.

ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். அண்ணனும், தங்கையும் ஒரு காட்சியில் ஆடுகின்றார்கள். கூடவே பாடலும் பாடுகின்றார்கள். எல்லோரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டத்தில் ஒருவர் ரஜனி பாட்டுப் பாடு என்கிறார். உடனே அண்ணன் கீழ்வருமாறு ஒரு பாடலைப் பாடுகின்றான்.
Continue reading “தாரை தப்பட்டை”

Advertisements

ஒழுங்கமைப்பின் பித்தலாட்டம் அல்லது அவற்றின் சதியாட்டம்.

இருபது/பத்து அன்று, பாரிஸில் நடைபெற்ற எட்டாவது சங்கிலியன் குறும்பட நிகழ்விற்கு தோழர் கருணாகரனுடன் சென்றிருந்தேன்.விழாவில் வழக்கம்போலவே நிறைய இசகுபிசகுகள்.

ஈழத்திலிருந்து பெயம்பெயர்ந்து வாழும் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கிவித்து அவர்களின் திறமைகளை உலகமெங்கும் பரப்புவதற்கு பாரிஸ்,லண்டன்,கனடா போன்ற நாடுகளில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.அவை பெரும்பாலும்  முதலாளித்துவவர்கத்தினாலேயே நடத்தப்படுகின்றன. இதுவரை குறைந்தது நான்கு அல்லது ஐந்து குறும்பட விழாக்களுக்கு சென்றிருப்பேன்.அவையாவுமே,  “இப்படியான விழாக்களை நடத்துவதற்குப் பதிலாக நடாத்தாமலேயே இருந்திருக்கலாம்” என்கின்ற ஒருவித சலிப்பு மனநிலையையே எனக்கு அளித்திருக்கின்றது. Continue reading “ஒழுங்கமைப்பின் பித்தலாட்டம் அல்லது அவற்றின் சதியாட்டம்.”

ஜெயமோகனின் பரிந்துரை.

ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் புதியவர்களின் எழுத்தை அறிமுகப்படுத்துகின்றார் என்று தெரிந்தவுடன், எப்போதோ எழுதி என் தளத்தில் வெளியிட்டிருந்த “ஒருதாய், ஒருமகன்” சிறுகதையை கொஞ்சம் திருத்தி “மகனுமானவன்” என்கின்ற தலைப்பில் அவருடைய மின்னஞ்சலுக்கு அனுப்பியிருந்தேன்.வெளியிடுவார் என்றுதான் நினைத்தேன்.ஆனால் பதில் இவ்வாறு வந்திருந்தது. Continue reading “ஜெயமோகனின் பரிந்துரை.”

ஒரு தட்டையும்,ஒரு கொட்டையும்.

//சொன்ன மயித்தைத் தாண்டி என்ன மயித்தை இருக்கு இந்த சுஜாதா கதையில?//கதையை படித்துவிட்டு “என்னமா எழுதியிருக்கின்றார்,எங்களுக்கெல்லாம் இப்படி தோன்றவில்லையே,எப்படியாவது இப்படியொரு கதையை எழுதிவிடவேண்டும்” என்று உங்களை தூண்டிவிட்டிருக்கின்றாரே அந்த மயிரு போதாதா?

கொஞ்சம் விரிவாக பார்த்துவிடலாம்.சிலபல வருடங்களுக்கு முன்னர் மறைந்த எழுத்தாளர் சுஜாதா நிஜத்தைத் தேடி என்கின்ற கதையொன்றை எழுதியிருந்தார்.அக்கதை மனிதமனங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டிருந்தது. அதிகம் எழுதப்படாத கரு.ஆனால் உண்மையான கரு.எத்தனை மனிதர்கள் சுயகற்பனை செய்துகொள்கின்றார்கள்.அது அப்படியிருக்குமோ,இது இப்படியிருக்குமோ என்று ஏகத்துக்கும் அதிகமாய் சிந்திக்கின்றார்கள்.ஆனால் முடிவு தங்கள் கற்பனைக்கு எதிராக அமைந்துவிடும்போது…அவர்களுக்குள் எத்தனை உள்ளக்குமுறல்கள்.சிலசமயங்களில் தங்கள் தோல்வியை அவர்களால் தாங்கிக்கொள்ளவே முடியாமல் போகின்றது.இது எத்தனை நிஜம்.கதையில் வருகின்ற பிரதான கதாப்பாத்திரம் கிருஷ்ணமூர்த்தி நம் அண்டைவீட்டு மனிதனோ அல்லது நம்வாழ்வில் எப்போதாவது நம்மைகடந்துபோகின்ற மனிதனோ அல்ல. நம் எல்லோருக்குள்ளும் இருக்கின்ற, ஆனால் எப்போதாவது மட்டுமே எட்டிப்பார்க்கின்ற ஒரு மனிதன்தான் அவன்.இது எத்தனை உண்மை என்பதை அறிந்துகொள்வதற்கு முதல் சுஜாதாவின்  சிறுகதையை படித்துவிடுதல் உத்தமம். Continue reading “ஒரு தட்டையும்,ஒரு கொட்டையும்.”