ஓ,,,தாவீது ராஜாவே!

முதலில், அது மீன்தானா…! என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரவு நேரத்தில் சுறாக்களும் அலைந்துகொண்டிருக்கும். முன்னொரு தடவையும் இப்படித்தான் நிகழ்ந்தது. மீனென்று நினைத்து வலையை ஒரு திட்டமிடலின்றி இழுத்திருக்கின்றார். சுறா இவரைநோக்கி பாய்வதற்குச் சரியாக இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் வரவிருக்கும் ஆபத்துப்பற்றிச் சிந்தித்தார். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த சுறாவின் முகத்தை இரண்டு கைகளினாலும் தள்ளிவிட்டு குபீரென்று அப்பாற் பாய்ந்தார். அந்தச் சின்னப் படகின் பின்பக்கத்தில் விழுந்த சுறா, ஒரு விபரிக்க முடியாத மூர்க்கத் தனத்தோடு எம்பியெம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. முதலில் அச்சமடைந்த தாவீது பிற்பாடு ஒரு நிலைக்கு வந்தார். பலத்தில் தன்னைவிட சுறாவே பெரியது என்று தெரிந்திருந்தும் அவர் பயப்படவில்லை. சண்டைபோடும் தோரணையோடு கைகள் இரண்டையும் முன்னுக்கு நீட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருக்கும் சுறாவையே பார்த்துக் கொண்டிருந்தார். சுறாவின் துடிப்பில் படகு கவிழ்ந்து விடுமோ என்று நினைத்தார். Continue reading

Advertisements

தொலைந்துபோன சிறிய அளவிலான,கறுப்பு நிற பைபிள்.

“மூன்றாம் உலகப் போர் ஒருவேளை அணு ஆயுதங்களைக் கொண்டு போரிட்டால், நான்காம் உலகப் போரானது வில் அம்புகளைக்கொண்டு போரிட வேண்டும்.”
—லார்ட் லூயி மவுண்ட்பேட்டன்.

∙ “மூன்றாம் உலகப்போர் எதைக்கொண்டு போரிடுவார்கள் என்பது எனக்குத் தெரியாது. ஆனால் நான்காம் உலகப்போரானது வெறும் குச்சிகளும் கற்களும் கொண்டு தான் போரிடப்படும்.”
—ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

கண்ணாடி முழுவதுமாய், படர்ந்திருந்த பனிமூட்டத்தை, நான் கைகளினாற் தேய்த்து கண்களைக் கிட்டே கொண்டு போய்ப் பார்த்தேன். நெடு, நெடுவென்று வளர்ந்திருந்த ஃபைன் மரங்களும்,ஒலிவ் மரங்களும் அந்தக் கும்மிருட்டிலும் பச்சையாகத் தெரிய, மற்றைய பகுதிகளனைத்தும் பனிக் காடாய் கிடந்தது.அந்தக் காட்சி, தாங்க முடியாத குளிரில் பூமியானது, வெள்ளை நிறப் போர்வையொன்றை தன் உடல் முழுவதும் போர்த்திக் கொண்டு துயில் கொள்வதைப் போல் தோன்றியது. இன்னும் சில நிமிடங்களில், முழு வேகத்துடன் சென்று கொண்டிருக்கும் இந்த ரயிலானது, வேகம் குறைக்கப்பட்டு; மாஸ்கோ நகரத்தில் நிறுத்தப்படும்.

இராணுவத்தில் சேருவதற்காக வர்ஷாவிற்கு வந்து கொண்டிருக்கும் என்னிடம் ஒரு அழுக்குப் படிந்த சிறியளவிலான ஆடைப் பையொன்றும், அதைவிடச் சிறியளவிலான தோற்பையொன்றுமிருந்தன.நான் என்னிடமிருந்த அந்த தோற்பையினுள் கீழ்கண்ட பொருட்கள் சிலவற்றை வைத்திருந்தேன். Continue reading

அக்கா (சிறுகதை)

அதோ, அங்கே வந்துகொண்டிருக்கின்றதே மஞ்சள் நிறப் பேருந்து, அதில் ஏறி பதின்மூன்று கிலோமீற்றர்கள் பயணம் செய்து “லியங்கோ குர்ஸி” என்கின்ற இடத்தில் இறங்கி, பொடிநடையாக ஒரு எட்டுப்பத்து நிமிடம் நடந்து சென்றால் என் கிராமம் வரும். அவிங்கு தான்யா .இதுதான் என் கிராமத்தின் பெயர்.அது காரணப்பெயரா,அல்லது இடுகுறிப்பெயரா என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை.அது பற்றி அம்மாவிடம் விசாரித்தபோது அவள் ஒரு கதை சொன்னாள்.

ஒருதடவை எங்கள் ஊரில் இருந்த நெல்லி என்கின்ற பையனுக்கு பிசாசு பிடித்துவிட்டது.ஊரிலிருந்த பெருசுகள் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் நெல்லியை பிடித்திருந்த பிசாசுவை விரட்ட முடியவில்லை.போகமாட்டேன் என்று அங்கேயே இருந்துவிட்டது.கடைசியில் ஊர் பெருசுகளெல்லாம் ஒன்று கூடி நெல்லியை அவிங்கு தன்யாவிடம் கூட்டிப்போனார்கள்.அவிங்கு தான்யா என்பது, எங்கள் கிராமத்திலிருந்து விலகி கொஞ்ச தூரத்தில் தனியாக வாழ்ந்துவரும் ஒரு சூன்யக்காரியின் பெயர். அவள் கழுத்தில் ஒரு பெரிய யானையின் மண்டையோட்டுத்தலை எப்போதும் தொங்கிக்கொண்டிருக்கும்.நெற்றியிலும் கன்னங்களிலும் காயத்தின் வடுக்கள் போல் கோடுகள் அமைந்திருக்கும்.அதுஅவளின் முகத்தை இன்னும் விகாரமாய் காட்டியது.மார்புகள் வறண்ட பாலைவனம் போல் சூம்பிபோய் கிடக்கும்.தூக்கிப்போட்டு விட்டால் கீழே விழும்.வை வடிவத்தில் அமைந்திருக்கும் தடியொன்றை அவள் எப்போதும் வைத்திருப்பாள். Continue reading

யூதாஸின் முத்தம் (சிறுகதை)

‘யூதாசின் முத்தம்’ என்ற இந்தக் கதையின் கதை சொல்லியான நான், முதலில் யூதாஸ் பற்றிய குறிப்புகளை திருவிவிலியத்திலிருந்தே எடுத்தேன். ஆனாலும் யூதாசின் நற்செய்தி என்கிற நூலிலிருந்தும் சில குறிப்புகளை எடுத்திருந்தேன். அதில், தான் பிலாத்துவிடமிருந்து பெற்றுக்கொண்ட முப்பது வெள்ளிக்காசுகளில் யூதாஸ் காணியொன்றினை வாங்கியதாகவும், பின்னர் அந்த நிலத்திலேயே வயிறு வெடித்துச் செத்துப் போனதாகவும் எழுதப்பட்டிருந்தது. ஆனால் நான் அதைத் தவிர்த்துவிட்டு திருவிவிலியத்தின் அடிப்படையிலேயே இந்தக் கதையை நகர்த்தலாமென்று முடிவு செய்கின்றேன். ஏனெனில் நான் இந்தக் கதையை எழுதுவதன் நோக்கம் யூதாஸ் பற்றிய இதுவரையிலான எங்களின் புரிதலை மாற்றியமைப்பதுவே.

யூதாஸ், கிறிஸ்துவின் பன்னிரெண்டு சீடர்களில் ஒருவனாக அறியப்பட்டாலும் கிறிஸ்துவின் மரணத்துக்குப் பிறகு சீடர்களின் பட்டியலிலிருந்து அவனின் பெயர் நீக்கப்பட்டு,அதற்குப் பதிலாக மத்தியா என்பவனின் பெயர் இணைக்கப்பட்டதாக திருவிவிலியம் கூறுகின்றது.இருப்பினும் யூதாசின்  நற்செய்தியோ ;யூதாசுவே கிறிஸ்துவின் உண்மையான சீடன் எனவும்,அவரின் நெருங்கிய நண்பன் எனவும் குறிக்கின்றது. இயேசுவின் மரணத்துக்குப் பிறகு அவருடைய மற்றைய சீடர்களின் மரணங்கள் பின்வருமாறு நிகழ்ந்தது. Continue reading