நீலப் பறவை. 

என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.

ஆனால், நான் மிகவும் கடுமையானவொரு தொனியில்

அப்பறவைக்குக் கூறினேன்.

நீ இங்கேயேயிரு; ஏனெனில், மற்றவர் உன்னைப்பார்க்க

நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.
ஆனால் நானோ அதன்மீது மதுவினை ஊற்றுகின்றேன்.  Continue reading

Advertisements

சிறையிலிருந்து,

இங்கே என்னோடு சேர்த்து
என் ஆன்மாவும் மிதிக்கப்படுகின்றது
சிலுவையை ஏந்தியவர்கள்
ஆவேசமான கைகளினால்
என் தேகத்தை நழுவ விடுகின்றார்கள்

முற்கிரீடத்திலிருந்து நான்
தொழுபுபவன் பிறந்தானெனில்
என்னை நசுக்குபவன்
என் சகோதரனே Continue reading

முள் கிரீடம் தரித்தவர் உயிர்த்துவிடலாம்.

கைவைத்து விடாதீர்கள்
முள் கிரீடம் தரித்தவர் உயிர்த்துவிடலாம்.

வடக்கிலே குழந்தையின் தலை
கிழக்கிலே அதன் கை
தெற்கிலே கால்
மேற்கிலே வயிறு

கைவைத்து விடாதீர்கள்
முள் கிரீடம் தரித்தவர் உயிர்த்துவிடலாம்.

அவர்களின் துப்பாக்கிகள் எங்களுக்காக தயாரிக்கப்பட்டவை
எங்களின் ஒவ்வொரு குழந்தைகளின் இறப்பினிலும்
அவர்களின் குழந்தைகள் பிறப்பெடுக்கின்றன.

அவர்கள் எங்களை அழிக்கின்றார்கள்
அவர்களின் கடவுள்கள் எங்கள் தெய்வங்களை அழிக்கின்றன.
யாரை குற்றவாளிகளேன்பது
குற்றங்களை யாரிடம்போய் முறையிடுவது?

எங்கள் விழிகளின் முன்பே
யாரோ ஒருவரின் மரணம்
பின்
யாரோ ஒருவரின் விழிகளின்
முன்பே எங்களின் மரணம்.

இருப்பினும்
கைவைத்து விடாதீர்கள்
முள் கிரீடம் தரித்தவர் உயிர்த்துவிடலாம்.

 

– சாதனா.

மரணத்திடமிருந்து தப்பித்து மறுபடியும் மரணத்திடமே சென்றோம்.

யார் அறிந்தோம்
அடர்த்தியான கருநீலமுடைய
மேகங்களிலிருந்து ஆட்களை கொல்லுகின்ற
குண்டுகளும் விழுமென்று.

நான்கு பக்கமும்
சுற்றிவளைக்கப்பட்ட எலிக்குத் தெரியும்
அடுத்தது மரணம்தான் என்பது.
ஓடிக்கொண்டே இருக்கும் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் மரணத்தின் விளிம்பில் நிற்கின்றோம். Continue reading

தீபச்செல்வனின் அருமையான கவிதையொன்று.

வறண்டு போகின்ற நம்பிக்கைகளுக்கு இடையில் இவ்வாறான கவிதைகள் கொஞ்சம் நம்பிக்கை ஊட்டுகின்றன.

மீன் குழம்பின் வாசனையை முகரும்படி செய்து
சுடப்பட்ட கருவாட்டுத் தலையை
அடுப்பங்கரையில் தொங்கவிட்ட பின்னும்
திரும்பவில்லை தலைமறைவாயிருக்கும் பூனை
துள்ளி விளையாடும் வளைகளில்
எலிகள் பூனைகளுக்காய்
எச்சரிக்கைச் சுவரொட்டிகளை எழுதியிருக்கின்றன

புத்தகங்களுக்கு மேலால்
படுக்கை அறையில்
அடுப்புச் சாம்பலுக்குள்
மயிர் கொட்டி உறங்கும் என் பூனை எங்கே?

வாய் கட்டுண்ட பூனை
மறைவாயிருந்து எந்தப் பாடல்களையும் படிப்பதில்லை
மௌன விரதமிருக்கும் அதற்கு
எலிகள் கட்டியிருந்த மணியொன்று
அசையும்படியும் நகர்வதுமில்லை

இருண்ட காலத்தில் தலைமறைவாயிருக்கும் பூனை
மியாவ் என்றெழுப்பும் சங்கீதத்திற்காய்க்
காத்திருக்கிறது என் வீடு.

ஒரு கவிதை.

எங்களுக்கான பாதையில் கொஞ்சம் முட்கள்.
எங்களுக்கான காற்றில் யாரோ கொஞ்சம் கந்தக துகள்களை கலந்திருக்கின்றார்கள்.
அவர்கள் எங்களை கொல்லுகின்றார்கள்.
அவர்கள் எங்களை சுற்றி வட்டமிடுகின்றார்கள்.
அவர்கள் எங்களை கற்பழிக்கின்றார்கள்.
அவர்கள் எங்கள் வீடுகளை உடைக்கின்றார்கள்.
அவர்கள் எங்கள் காணிகளை அபகரிக்கின்றார்கள்.
அவர்கள் எங்களின் பிய்ந்துபோன சதைகளைக் கூட விடுவதாகஇல்லை. Continue reading