விஸ்வரூபம் ‘புஸ்’பரூபம் விமர்சனம் 2.

இது விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள். ஆப்கானிஸ்தான் காட்சியின் போது பின்னணியில் ஒலிக்கிறது.

//துப்பாக்கி எங்கள் தொழிலே,
துர்பாக்கியம் தான் வாழ்விலே.
எப்போதும் சாவு நேரிலே,
இப்போது வெல்வோம் போரிலே.
Continue reading

Advertisements

விஸ்வரூபம் ‘புஸ்’பரூபம்

விஸ்பரூபம் இரண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மகாநதி, ஆளவந்தான், குருதிப்புனல், விருமாண்டி போன்ற படு அட்டகாசமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களை இயக்கிய அதே கமல்ஹாசன்தானா இவரென ஆச்சர்யமாக இருந்தது.

ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்படுகிறார். Continue reading

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.

சில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம்  குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள்.

ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் சந்திக்க நேர்ந்த அந்தத் துறவியின் சந்திப்பு. “ சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.” என்று கூறும் அவர், உலகெங்கும் சென்று தம்ம பதத்தினைப் பற்றி விளக்கிக் கூறுகின்றார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கின்றாரோ அந்த நாடுகளிருந்து மட்டுமில்லாமல் பக்கத்து நாடுகளிலிருந்தும் அவரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றார்கள். மலேசியாவில் பிறந்து, லண்டன் கல்லூரியொன்றில் கல்வி கற்றவரான அவருக்கு எட்டு மொழிகளில் பரிச்சியம். தமிழ் உட்பட. Continue reading

குழந்தைகள் பயங்கரமானவர்கள்.(கட்டுரை)

மேதகு முசேவெனி !

நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில்

ஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.

என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.

எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .

எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.

உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன.

நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று.

நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது.

நாங்கள் உனக்காக இரத்தத்தில் மூழ்கினோம்.

குண்டு துளைக்காத ஆடைக்குள் நீ பதுங்கியிருக்கின்றாய். ஆனால் அங்கே எங்களுக்கு இடமில்லை.

எனது ஆன்மா கேள்விகளை எழுப்பினால் நீ புன்னகைத்துக் கொண்டே என்னைத் தட்டுவதற்கு கட்டளையிடுவாய்.

ஏனெனில் நீ கேள்விகளைக் கண்டு அஞ்சுகின்றாய்!

நீ என்னை எனது நிலத்திலிருந்து துரத்தினாய்! Continue reading

தேர் வேர்டிங் புப்:கலையின் உன்னதம்.

தினம் தினம் இட்லி அவிப்பதில் தவறில்லை.ஆனால் அவித்த இட்லியையே திரும்பத்திரும்ப அவிப்பதில்த்தான் தவறு.நம் தமிழ் சினிமாவைத்தான் சொல்லுகின்றேன்.தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு கதை தட்டுப்பாடாகிவிட்டது.ஒரே கதையையேமறுபடியும் மறுபடியும்எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்காவிலிருந்துகொஞ்சம்,ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம்,கொரியாவிலிருந்து கொஞ்சம்,இப்படிஅங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் கொஞ்சமாக உருவியெடுத்து ஒரு கதையை தயார் பண்ணி படம் எடுத்துவிடுகின்றார்கள்.ரசிகர்கள்தான் பாவம்.இது எதுவுமே தெரியாமல் உண்பதற்கு கூட வழயில்லையென்றாலும் தாம் கட்டியிருக்கும் கோமணத்தை விற்றுக்கூட படம் பார்த்துவிடுகின்றார்கள்.செனகல்,ஈரான்,கொரியா,இலங்கை போன்ற “அறியப்படாத” நாடுகளிலிருந்து கூட உலக அரங்கில் வைத்து சிலாகித்துப் பேசப்படுகின்ற படங்கள்வந்துகொண்டிருக்கும் வேளையில் ஆண்டுக்கு இருநூறுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களைதயாரிக்கின்ற இந்தியாவிலோ குப்பையிலும் குப்பையான படங்களேவந்துகொண்டிருக்கின்றன.சமீபத்தில்”அஞ்சான்” என்கின்ற உலகத்தரமான காவியத்தை கண்டுகளித்தேன்.மலத்தை மிதித்ததைப்போல் உணரவில்லை,மலக்குழியிலேயே விழுந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.அந்த அளவுக்கு”அஞ்சான்” காவியமாக இருந்தது.இரண்டு நண்பர்கள்.ஒருவனை வில்லன் கொன்று விடுகின்றான்.கோபம்கொள்ளும் மற்றவன் நண்பனைக் கொன்ற வில்லனை தேடித்தேடி கொலை செய்கின்றான்.இதுதான் அந்த “காவியப்”படத்தின் ஒருவரிக்கதை.ங்கொய்யால்லே…இதைத்தானே இத்தனை வருடங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குமனசாட்சியே இல்லையா? கதை என்கின்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத குப்பைபடங்களைஎடுத்துவிட்டு அதில் கொஞ்சம் தொழிற்நுட்பத்தையும் புகுத்திவிட்டால் அதுநல்லபடம் ஆகிவிடுமா? நல்லபடம் என்பது தொழிற்நுட்பத்தில் மாத்திரம்தங்கியிருப்பதல்ல.இன்னும் சொல்லப்போனால் நல்ல படத்திற்கு தொழிற்நுட்பமேதேவையில்லை.திரைப்படத்தை எடுக்கும் விதத்திலும்,சொல்லவந்த கருத்திலும்தான்எல்லாமே இருக்கின்றது. ஒரு நல்ல படமென்பது பார்வையாளனை அப்படியே கட்டிப்போடவேண்டும்,தூங்க விடாமல் அலைக்கழிக்க வேண்டும்.அவனுள் ஒரு மாற்றத்தினைஉண்டுபண்ண வேண்டும்.ஒவ்வொரு இரவுகளிலும் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள்அவனோடு உரையாடவேண்டும்.முக்கியமாக பார்வையாளன் என்பவன் அந்தகதாப்பாத்திரங்களோடு தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.>>துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவின் படைப்புகளைத் தவிர வேறு எந்த இயக்குனர்களின் படைப்புகளும், என்னை அவ்வளவாக கவர்ந்தது கிடையாது.இதனால் தமிழில் வெளிவரும் திரைப்படங்களைப் பார்ப்பதையே சமீபகாலமாக நிறுத்திவிட்டேன்<<கிம் கி டுக்கின் “தீவு”திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் அப்படித்தான்உணர்ந்தேன்.இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை.புரண்டுபுரண்டுபடுத்துக்கொண்டிருந்தேன்.சிந்தைபூராகவும் தீவு திரைப்படமும்,அத்திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுமே நிறைந்திருந்தன. அந்தளவுக்கு “தீவு” திரைப்படம் என்னைஆக்கிரமித்திருந்தது.”தீவு” மாத்திரமேன்றல்ல.கிம் கி டுகின் பெரும்பாலான படங்களேஅப்படித்தான்.”இலைதளிர்காலம்,கோடை,இலையுதிர்காலம்,குளிர்காலம்,மற்றும் இலைதளிர்காலம்”, “வில்”, “கனவு”, “நேரம்” போன்ற பெரும்பாலான படங்களைப் பார்த்த அன்றைய தினங்களில்நான் தூங்கியதே இல்லை. Continue reading

முள்ளிவாய்க்கால் படுகொலை – தமிழ் படைப்பாளிகளின் மனப் பதிவுகள் .

குட்டிரேவதி,  கவிஞர், திரைப்பட பாடலாசிரியர்

முள்ளிவாய்க்கால் என்பது இன்றைய நாளில், அதாவது 2014 மே மாதத்தில் நம் நினைவெங்கும் பிம்பத் தொகுப்பாகப் பதிந்த ஒரு நிகழ்வு என்பதாகத் தான் கொள்ளமுடியும்.

புகைப்படங்களாகவும், வீடியோ படங்களாகவும் நம்மில் பதிந்துபோய் ‘பிம்பக்கூட்டத்தில்’ காணாமல் போகும் ஒன்றாகிவிடும் அபாயத்தையும் கடந்து கொண்டிருக்கிறோம்.

இன்று நமது அன்றாடச் சிந்தனைகள் எல்லாமும் சமூக இணையங்கள் வழியாக மாயவெளியில் கரைந்து கொண்டிருப்பதைப் போலவே, ‘முள்ளிவாய்க்காலின்’ தாக்கத்தையும் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். இதை விளக்கும் மொழியின் போதாமையையும் நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இப்பொழுது நாம் செய்யவேண்டியது என்ன என்ற கேள்விக்குக் கூட்டாக நாம் விடை காண வேண்டியிருக்கிறது. செயல்பாட்டுக்களம் வரைந்தெழுப்ப வேண்டியிருக்கிறது. Continue reading