தினகரனும், ஆஞ்ஜியோகிராமும்.

சாவு எப்படியெல்லாம் ‘பெப்பே’ காட்டுகிறது. மருத்துவமனையில் இருக்கும்போது தினகரன் மறுபடியும் சாவு பற்றிய விளக்கத்தை கண்டறிய முயன்றார். சாவுக்கும் தனக்குமான இடைவெளி எதனாலும் நிரப்பப்படாமல் அது தனக்கு மிகவும் அண்மித்த நிலையில் இருப்பதாகவே அவருக்குப் பட்டது. பிகோரோ யாரோ… பிகோர்தானே அது? யாராக இருந்தால் என்ன? அறிவுக்கு எட்டிய விதத்தில் தன் வரையில் சரியாகச் சிந்தித்திருக்கிறான் என்பதே உண்மை.

அன்று தொழிற்சாலையில் – அது ஏன் நடந்தது ? – மூச்சுத்தினறல் போல் வந்து, இருதயம் அடைக்குமாற்போல் படவே மருத்துவமனைக்கு வரவில்லையா? விசாரித்ததில் க்ஷணப்பொழுதொன்றில் மாரடைப்பு. ஆனால் சாவு சம்பவிக்கவில்லை. Continue reading

Advertisements

இடைவெளி (நாவல்)

என்னுடைய ஆஸ்தான எழுத்தாளர்களில் முதன்மையானவராகிய எஸ். சம்பத் அவர்களின் குறுநாவல். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று.

இந்த நாவல் சாவு என்கிற பிரச்சினையை மையமாகக் கொண்டிருக்கிறது. எப்போதும் அடிப்படை விஷயங்களில் உழல்பவன் நான், என் எழுத்துகளில் சாதாரணமாக இந்த ஒரு நிலையைக் காணலாம் என்றே நினைக்கிறேன், ஆனால் இதைப்பற்றியெல்லாம் காலம்தான் கூற வேண்டும்.

சாவு என்னைப் பிரச்சினையாக ஈர்த்தவிதம் இவ்வாறாக அமைகிறது. ‘கடைசி பட்சத்தில் எல்லாம் போய் விடுகிறது! எல்லாமேதானே! இதற்கு என்ன செய்வது!’ இந்த ஒரு எண்ணம் என்னை ரொம்பவும் சின்ன வயதிலேயே தொற்றியிருக்க வேண்டும். இதுநாள் வரை விடவில்லை, பெரிய தற்கொலைத்தனமான எண்ணமாக இருப்பினும் கடைசியில் என் அனுபவத்திற்கு எட்டியவரை எனக்கு ஒரு மகத்தான உண்மையை இது உணர்த்திவிட்டது என்றே நம்புகிறேன்.

நான் பல டாக்டர்களையும் மருத்துவ மாணவர்களையும் சந்தித்து, இதுபற்றிப் பேசி விவாதித்து சில விஷயங்களை அறிந்துகொள்ள யத்தனித்த போதெல்லாம் தோல்வி அடைந்தேன். அவர்கள் எல்லோரும், அவர்கள் புஸ்தக எல்லைகளில் நிற்கிறார்கள். நான் இதை ஒரு குற்றமாகக் கண்டு குறைகூற விழையவில்லை. இம்மாதிரியான பெரிய விஷயங்களில் கற்பனை வளமற்று இருக்கிறார்களே என்று வருத்தமாக இருக்கிறது. ஆனால் மருத்துவத்திற்கும் எனக்கும் எந்தவிதமான சம்பந்தமுமற்ற நிலையில் எனக்கு இவ்வாறெல்லாம் தோன்ற, மருத்துவத்தில் இருப்பவனுக்கு நட்சத்திரங்களைப்பற்றி ஒரு அனுமானம், ஊகம் ஏற்படாது என்பது என்ன நிச்சயம்? இயற்கையில், நிஜமாகவே, பலவித ஆச்சர்யங்கள் புதைந்து கிடக்கத்தான் செய்கின்றன, Continue reading

சாமியார் ஜுவுக்குப் போகிறார்.

என்னுடைய ஆஸ்தான எழுத்தாளர்களில் முதன்மையானவராகிய எஸ். சம்பத் அவர்களின் குறுநாவல். கட்டாயம் படிக்க வேண்டிய ஒன்று. 

தினகரன் ஒரு மணி நேரம் தூங்கியிருப்பார்.

‘அன்னா ஜுக்கு’ என்ற குமாரின் கீச்சுக்குரல் அவரை எழுப்பியது. எழுந்து கொண்டார். முகம் அலம்பிக் கொண்டு உடை அணிந்து கொண்டார்.

மனைவியும் தயாரானாள். குமாருக்கு கௌபாய் ட்ரெஸ்!

வெளியே முதல்நாள் பெய்த மழையில் புல் பாத்திகளில் தேங்கிக் கிடந்த மழைத் தண்ணீரைப் பூமி மெள்ள மெள்ள முடிந்தமட்டும் உறிஞ்சிவிட்டன பிறகும், வேறு வழியில்லாமல் தேங்கிக் கிடந்தது.

இப்போது நல்ல வெயிலில் ஆவியாக மாறிக் கொண்டிருக்கிறது. புல், கலங்கலான மழைத் தண்ணீர் பட்டுச் சாம்பல் பூத்திருந்தது. உலர்த்தப்பட்ட அப்பளம் போல் ஈரம் காய்ந்த சாலையில் ஆங்காங்கே ரவுண்டு ரவுண்டாகத் தண்ணீர் பசை. அலம்பப்பட்ட தார் ரோடில் வெயில் பளீரென்று அடித்தாலும் தார் ரோடு கண்களுக்குக் குளிர்ச்சியைத் தந்தது. ஊசிப் பட்டாசின் மின்னலுடன் வெடித்துக் கண்களைப் பறிக்கவில்லை. அதற்கு ஏதுவான மே, ஜுன் மாதம் பின் தங்கிவிட்டது. Continue reading