விஸ்வரூபம் ‘புஸ்’பரூபம் விமர்சனம் 2.

இது விஸ்வரூபம் திரைப்படத்தில் வரும் பாடல் ஒன்றின் வரிகள். ஆப்கானிஸ்தான் காட்சியின் போது பின்னணியில் ஒலிக்கிறது.

//துப்பாக்கி எங்கள் தொழிலே,
துர்பாக்கியம் தான் வாழ்விலே.
எப்போதும் சாவு நேரிலே,
இப்போது வெல்வோம் போரிலே.

போர்களை நாங்கள் தேர்ந்தெடுக்கவில்லை ;
போர்தான் எம்மைத் தேர்ந்தெடுத்துக் கொண்டது.
எங்களின் கைகளில் ஆயுதங்கள் இல்லை ;
ஆயுதத்தின் கைகளில் எங்கள் உடல் உள்ளது.
ஊரைக் காக்கும் போருக்கு ஒத்திகை செய்கின்றோம் ;
சாவே எங்கள் வாழ்வென்று சத்தியம் செய்கின்றோம்.

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது ;
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது.
நீதி காணமல் போர்கள் ஓயாது.

தாக்க வீரன் கேட்கின்றோம்,
புயலை சுவாசிக்க நுரையீரல் கேட்கிறோம்,
எட்டுத் திசைகளில் ஓர் இதயம் கேட்கிறோம்,
இருநூறாண்டு இளமை கேட்கிறோம்,
துப்பாக்கி எம் தலையணை, தூங்கித் திரிகின்றோம்.

ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது;
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது.
நீதி காணமல் போர்கள் ஓயாது.//

நன்றாக மீண்டுமொருமுறை இந்தப் பாடல் வரிகளைக் கவனித்துப் பாருங்கள். இப்படியொரு பாடலை எழுதிவிட்டு, பின் தாலிபான்களை வில்லன்களாகச் சித்தரிக்க வேண்டிய தேவை கமலுக்கு ஏன் ஏற்பட்டது? இது முழுக்க முழுக்க தன்னுடைய சுகந்திரத்திற்காகவும், விடுதலைக்காகவும் புரட்சி செய்யும் இயக்கத்திற்காக எழுதப்பட வேண்டிய பாடலல்லவா? ஆனால் தன்னுடைய திரைப்படத்தில் மனித நேயமற்ற கொடூரமான வில்லன்களாக சித்தரிக்கும் ஓர் இயக்கத்திற்கு ஏன் எழுதினார்?

திரைக்கதையைப் பொறுத்தவரை விஸ்வரூபம் மகா சொதப்பல் என ஏன் குறிப்பிடுகிறேனென இப்போது புரிகிறதா? உதாரணத்திற்கு இந்த வரியைக் கவனியுங்கள்.

“ஒட்டக முதுகின் மேல் ஒரு சமவெளி கிடையாது;
டாலர் உலகத்தில் சமதர்மம் கிடையாது”

டாலர் உலகமென இங்கே குறிப்பிடுவது அமெரிக்க தேசத்தைத்தான். ஆக, உலகின் மிகப்பெரிய சர்வாதிகார தேசமே அமெரிக்காதான் என்பது கமலுக்கு தெரிந்தேதான் இருக்கிறது.

இப்போது கேள்வி என்னவெனில், விஸ்வரூபம் திரைப்படத்தை அமெரிக்கச் சார்பு சினிமாவாக எடுத்திருப்பதன் மூலம் கமல் என்ன சொல்ல வருகிறார் என்பதுதான்.

உலகின் முதல் தர சர்வாதிகார தேசமே அமெரிக்காதான். ஆனால், தன்னுடைய அரசியலின் மூலமும், தான் தயாரிக்கும் திரைப்படங்களின் மூலமும் ஒரு சனநாயகவாதியாகவும், தீவிரவாதச் செயற்பாடுகளிலிருந்து காக்க வந்த காப்பாளனாகவுமே தன்னை முன்னிறுத்துகிறது அமெரிக்கா. தான் நல்லவனென்றால் தான் அடிக்கும் அவன் கெட்டவன். நாமும் கண்களை மூடிக்கொண்டு அதையே நம்புகிறோம். ஆனால் இங்கு பிரச்சனை என்னவெனில் பாமரராகிய எங்களோடு சேர்ந்து கமல் போன்ற ஜீனியஸ்கள் கூட அதை நம்புவதுதான். நம்புவது மாத்திரமல்லாமல் ; தன்னுடைய பங்குக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்குச் சார்பாக சினிமா எடுப்பதும்தான்.

இதைத்தான் அரைவேற்காட்டுத்தனம் என்கிறேன். தரிசனம் இல்லாத ஒற்றைப் பார்வை. தேசியவாதத்தைக் கடைபிடிப்பவன் நல்ல எழுத்தாளனாகவோ, படைப்பாளியாகவோ முடியாது. கமல் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்குச் சார்பாகச் சினிமா எடுப்பதன் மூலம் எதை நிறுவ முயல்கிறார். அமெரிக்க தேசத்தின் மீதான தன்னுடைய தேசியவாதத்தையா?

 

 

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.