விஸ்வரூபம் ‘புஸ்’பரூபம்

விஸ்பரூபம் இரண்டு பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மகாநதி, ஆளவந்தான், குருதிப்புனல், விருமாண்டி போன்ற படு அட்டகாசமான திரைக்கதையைக் கொண்ட திரைப்படங்களை இயக்கிய அதே கமல்ஹாசன்தானா இவரென ஆச்சர்யமாக இருந்தது.

ஏனெனில், ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.

படம் தொடங்கி முப்பது நிமிடங்கள்கூட ஆகாத நிலையில் படத்தில் இப்படியொரு காட்சி வருகிறது. கமல்ஹாசன், பூஜா குமார், ஆண்ட்ரியா இன்னும் இருவர். மொத்தமாக ஐந்துபேர் கார் ஒன்றில் பயணம் செய்துகொண்டிருக்கிறார்கள். திடீரென்று ஒரு விபத்து. அப்படியே மலைச்சரிவொன்றில் தடம் புரள்கிறது கார். புரண்டு கொண்டிருக்கும்போதே கமல் காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துக்கொண்டு வெளியே தூக்கி வீசப்படுகிறார்.

Lone Survivor திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தாலிபான்களின் தாக்குதலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் படுபயங்கரமான கற்சரடுகள் கொண்ட மலைச்சரிவிலிருந்து உருண்டு புரள்வார்கள் அமெரிக்க வீரர்கள். இறுதியில், முதுகு, மார்பு, முகமென அத்தனையும் உடைந்துபோய் கிடப்பார்கள். எழும்பி நடப்பதற்கு என்ன பேசவே முடியாத நிலை. நிலத்தில் ஊர்ந்து, ஊர்ந்து தங்களை தாலிபான்களிடமிருந்து மறைத்துக்கொள்வார்கள்.

இதைத்தான் யதார்த்த தரிசனம் என்கிறேன். (Realistic vision)

ஆனால், எப்போதுமே தன்னையொரு பகுத்தறிவுவாதியாக, அறிவுவாதியாக நிலைநிறுத்த விரும்பும் கமல்ஹாசன் இந்தக் காட்சியை எப்படி அமைத்திருக்கிறார் பாருங்கள்.

ஏற்கனவே கமலின் முகத்தில் இரண்டு பாண்டேஜ்ஜூக்கள் ஒட்டப்பட்டிருக்கிறன. அவர் காரிலிருந்து தூக்கி வீசப்படுகிறார். முதுகு உடைந்துபோகும் அளவுக்கு மரமொன்றில் மோதுண்டுகிறார். பிறகு அப்படியே சரிந்து முறிந்துகிடக்கும் மரக்கிளையில் தன்னை நிறுத்திக் கொள்கிறார்.

உயிரே போயிருக்கும். அல்லது பத்து நாட்கள் கோமா. அதுவுமில்லையெனில் இரண்டு வாரம் மருத்துவமனை வாழ்க்கை. குறைந்தபட்சம் இரண்டு, மூன்று மணித்தியாலங்களுக்கு கண் முழிக்கவே முடியாது. ஆனால், கமல்ஹாசனுக்கு இத்தனை நடந்தும் அவரின் உடலில் சின்னக் கீறல்கூட இல்லை. கீறலை விடுங்கள். ஏற்கனவே அவரின் முகத்தில் இரண்டு பாண்டேஜ்ஜூக்கள் ஒட்டப்பட்டிருக்கிறதே, இத்தனை நடந்த பிறகும் கூடவா அதிலிருந்து ஒரு இரத்தக் கசிவுகூட ஏற்பட்டிருக்காது?

இது எதுவுமே இல்லாமல் அடுத்த நிமிடமே, எங்களுடைய அறிவுவாதி, துப்பாக்கியையும் எடுத்துக்கொண்டு தீவிரவாதிகளுடன் சண்டைபோடக் கிளம்பி விடுகிறார். சரி அவர்தான் கதாநாயகன். இரண்டு வாரங்கள் மருத்துவமனையில் படுத்துக்கிடப்பதாக காட்சிகளை அமைத்தால் தீவிரவாதிகளோடு சண்டைபோட்டு யார்தான் தேசத்தைக் காப்பாற்றுவது?

அதனால் கமலை விடுங்கள். காரிலிருந்த மற்றைய நான்கு பேரின் நிலைமை. நம்புங்கள். ஒரே ஒருவருக்கு மாத்திரம் கழுத்திலிருந்து இரத்தம் கொப்பளிக்கிறது. மற்றைய மூவருக்கும் மயக்கம்கூட வரவில்லை. கமல் கேட்கும் கேள்விகளுக்கு ஏதோ ‘ரெட்பூல்’ குடித்ததைப் போன்ற உற்சாகத்துடன் பதில் சொல்லுகிறார்கள்.

இதனால்தான் தமிழ் சினிமா இப்போதைக்கு உருப்படச் சாத்தியமில்லை என்கிறேன்.

திரைப்படத்தை முழுமையாகப் பார்த்தபிறகு விஸ்வரூபம் இரண்டு பற்றி முழுமையாக எழுதுகிறேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.