சற்றுமுன், ஸீரோ டிகிரிப் பதிப்பாசிரியர் ராம்ஜி பேசியிருந்தார். உங்களுடைய புத்தகத்திற்கு முன்பதிவு ( pre – order) திட்டம் ஒன்றை ஆரம்பிக்கலாமா என்று கேட்டார். எனக்குத் திக்கென்றானது. ஏனெனில் சாரு போன்ற பிரபலமான எழுத்தாளர்கள்தான் தங்களுடைய புத்தகங்களுக்கு pre – order செய்வார்கள்.

ஆனால், சாதனா என்றால் யாருக்குமே தெரியாது. அத்தோடு ‘தொலைந்துபோன சிறிய அளவிலான கறுப்பு நிற பைபிள்’ என்னுடைய முதலாவது புத்தகம். ஒரே ஒருவர் pre – order செய்தாலே அது என்னைப் பொறுத்தவரை எட்டாவது உலக அதிசயம்.

முன்பதிவுத் திட்டம் இருக்கட்டும். அச்சாகும் அனைத்து புத்தகங்களையும் எப்படி விற்கப் போகின்றேன்?. புத்தகத்தை எழுதியவன் என்கிற முறையில் இந்தச் சவாலினை எப்படி எதிர் கொள்ளப்போகின்றேன்?.

அகமது மமட் என்கிற நைரோபிய எழுத்தாளர் தன்னுடைய broken sky என்கிற புத்தகத்திற்கு இப்படியொரு விளம்பரம் செய்தார். அதாவது, என்னுடைய புத்தகத்தை வாங்குங்கள், பின் இந்தப் புத்தகத்தில் ஒன்றுமே இல்லை ; நாவல் படு திராபையாக இருக்கிறது ; இந்தப் புத்தகத்தை வாங்கியதால் காசும் வீண், நேரமும் வீண் என்று எவருக்குத் தோன்றுகிறதோ அவர்கள் புத்தகத்தோடு என்னிடம் வாருங்கள் ; உங்கள் பணத்தை இரு மடங்காகத் திருப்பித் தருகிறேன் என்கிறார்.

Broken sky வெளியாகி ஒரே மாதத்தில் மில்லியன் கணக்கில் விற்பனையாகிறது. மட்டுமல்லாமல், ப்ரஞ்சிலும் மொழிபெயர்க்கப்பட்டு அதிலும் கோடிக்கணக்கில் விற்றுப் போகிறது. மேற்கத்தேய விமர்சகர்களினால் புத்தகம் பாராட்டப்படவும் செய்கிறது.

நானும் என் புத்தகம் குறித்து அதே விளம்பரத்தைச் செய்கின்றேன்.

தயவு செய்து என்னுடைய புத்தகத்தை வாங்குங்கள். என்னால் பதிப்பகத்தாருக்கு லாபம் வரவில்லையென்றாலும் பரவாயில்லை. நஷ்டம் வரக் கூடாது. ஆகவே தயவு செய்து புத்தகத்தை வாங்குங்கள். உங்கள் நண்பர்களுக்கும் வாங்கிக்கொடுங்கள். அவர்களையும் வாங்கச் சொல்லுங்கள். தெரிந்தவர், அறிந்தவர், சுற்றத்தார், முற்றத்தார் அனைவரிடமும் புத்தகம் குறித்து பேசுங்கள். இருநூற்று ஐம்பது ரூபாய் என்பது பெரிய பணமல்ல. ஐந்து யூரோ என்பதும் பெரிய பணமல்ல. ஐரோப்பாவில் அரை மணித்தியாலம் வேலை செய்தாலே ஐந்து யூரோ தந்து விடுவார்கள்.

ஆகவே, நண்பர்களே புத்தகத்தை வாங்குங்கள். படித்துப் பாருங்கள். சாரு கூட உலக இலக்கியம் என்று பாராட்டி இருந்தார். அதையும் மீறி உங்களுக்கு என்னுடைய புத்தகம் பிடிக்கவில்லையெனில் புத்தகத்தோடு வாருங்கள் ; புத்தகத்திற்கான பணத்தினை இரு மடங்காகத் திருப்பித் தருகின்றேன்.

போகும்போது, வழியில் தெரியும் ஏதாவதொரு குப்பைக் கிடங்கில் புத்தகத்தை வீசி எறிந்து விடுங்கள்.

Advertisements

3 thoughts on “இரு மடங்கு பணம்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s