சிறுமி கத்தலோனா.

வழக்கம் போல், தற்கொலை செய்து கொள்ளலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கும்போது தான் முழுவதுமாய் கண்ணாடி போடப்பட்ட அந்த ஜன்னலை உற்றுப் பார்த்தார். அதில் நத்தையொன்று மெதுவாக – மிக மெதுவாக – ஊர்ந்துகொண்டிருப்பது தெரிந்தது. அதனருகினில் சென்று பார்த்தபோது, நல்லவேளை… கண்ணாடிக்கு வெளிப்பக்கமாய்த்தான் அது இருந்தது. தனது வலது கையின் கட்டைவிரலுக்கு அடுத்துள்ள விரலினால் கண்ணாடியைத் தேய்த்து நத்தையை உசுப்பினார். அது தன்னுடைய உணர்கொம்புகளிலாலான தலையைத் தூக்கி அப்படியே நின்றுவிட்டு பின்னர் மீண்டும் தன்னுடைய பயணத்தைத் தொடரலாயிற்று.

எத்தனை மணிநேரமென்று சரியாகத் தெரியவில்லையென்றாலும் நேற்றிலிருந்து மழையானது ஒரு பிடிவாதத்துடன் கொட்டிக்கொண்டிருக்கின்றது. அதன் காரணமாகத்தான் நத்தையும் வந்திருக்கவேண்டும். இந்த வருடத்துக்கான மழைக்காலம் தொடங்கி இது மூன்றாவது நத்தை. முதலில் வந்தது இதைவிட சற்றுப் பெரியது. உடல் முழுவதும் ஒருவித பச்சை நிறமாயிருந்தது. கூடும் பெரிது. இரண்டாவது நத்தை, இதனைப் போன்றே அளவுடையது. ஆனால், அதன் உணர்கொம்புகளானது சம அளவிலில்லாமல் ஒன்று பெரிதாகவும், மற்றது சிறிதாகவுமிருந்தன.

Continue reading

Advertisements