மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் முகப்புத்தகத்தை மறுபடியும் ரீஆக்டிவேட் செய்திருந்தார் சயந்தன். இன்றுதான் “சரஹாவும்” வந்தார். பாவித்து சிலமணிநேரத்திலேயே மறுபடியும் முகப்புத்தகத்தை டீஆக்டிவேட் செய்துவிட்டார். என்னவாகயிருக்கும்? யாரும் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டார்களோ?

யதார்த்தன்: >> நான் சயந்தன்ர அந்தரங்க காரியதரிசி எண்டு எப்ப சொன்னனான். <<

அகநாழிகையில் வெளிவந்த உங்களின் மிக ரகசிய இயக்கம் படித்தேன். புனைபெயரில் எழுதியிருந்தாலும் மொழியின் லாவகத்தை வைத்து நீங்கள்தானெனக் கண்டுபிடித்தேன். அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

யதார்த்தன்: >> மன்னிக்கவும்… அது தர்முபிரசாத் எழுதிய கதை. <<

நீங்களே புதியசொல் என்கிற பதிப்பகம் வைத்திருக்கும்போது ஆக்காட்டி சார்பாக புத்தகம் வெளியிட்டதன் காரணமென்ன?

யதார்த்தன்: >> என்னது புதியசொல் என்னோட பதிப்பகமா? இது எப்போ? <<

உண்மையைச் சொல்லவும் மழுப்பல் வேண்டாம்; நீங்கள் என்ன ஜாதி?

யதார்த்தன்: >> சிலநேரங்களில் பறவை; மற்றபடி மிருகம். <<

உங்கள் மெடூஸாவின் கண்களின் முன் நிறுத்தப்பட்ட காலம் இதுவரை மொத்தம் எத்தனை பிரதிகள் விற்றுத் தீர்ந்திருக்கின்றன?

யதார்த்தன்: >> 150 க்கு மேலிருக்கும். <<

இறுதியாக வெளிவந்த “நடு” இதழ் வாசித்தேன். அதில் நீங்கள் எழுதியிருந்த “பலதும், பத்தும்” பத்தியினையும் வாசித்திருந்தேன். சாருவைப் போல் எழுதுகின்றேன் பேர்வழியென முயற்சி செய்து தோல்வியடைந்திருக்கின்றீர்கள். அவருடையதை ஊம்பினாலும் உங்களால் அவரைப் போல் எழுதமுடியாது. ( ஐ மீன் அவருடைய விரலை)

உமையாழ்: >>ஓ, வாசித்தீர்களா? அதுவே பெரிய விசயமில்லையா! இதைப் பாராட்டாக எடுத்துக்கட்டுமா, பிளீஸ்? மற்றது உங்க மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. அதுசரி, நீங்கள் யாரையாவது ஊம்பி விட்டு இருக்குறீர்களா?(ஐ மீன், விரலை.) <<

உண்மையைச் சொல்லுங்கள் புகழ் அடைவதற்குத் தானே சாருவைப் பிடித்துத் தொங்கினீர்கள்?

உமையாழ்: >> புகழ் அடைதல் என்பது புரிகிறது. “தொங்கினேன்” என்பதால் என்ன சொல்ல வருகிறீர்கள்? <<

இங்கிலாந்து வந்தால் உங்கள் இடத்துக்கு வருகின்றேன். சந்திக்கலாம் தானே?. கோடைகாலமென்பதால் ஜில்லென்று இரண்டு பீர் அடிக்கலாம். கூடவே சாருவையும் அழைத்து வருகின்றேன் ; உங்களின் உற்ற தோழரல்லவா அவர்.

உமையாழ்: >> நான் இங்கிலாந்தில் இல்லை. <<

உங்களுக்கு நிறையப் பேர் அனுப்புகின்றார்கள். அவற்றிலிருந்து ஒருவர் அனுப்பியதை மாத்திரம் உங்களால் தொகுக்க முடியுமா? முடிந்தால், அவராரெனவும் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம். தெரிந்தவர்தான்; ஆகவே, சிரமமிருக்காதென நினைக்கின்றேன்.

உமையாழ்: >> இல்லை, அது என்னால் முடியாது. நிறைப் பேர் திட்டித்தான் கேள்வி அனுப்புகிறார்கள். பாவம், அவர்களுக்கு என்ன கவலையோ கக்கிசமோ? நான் முக்கால்வாசிக்கு மேல் பதில் சொல்லாமல் தணிக்கை செய்துவிட்டேன். நான் போஸ்ட் செய்த பல கேள்விகளும் என் பெண்தோழிகளின் கேள்விகள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், யாருடையது என்பதை என்னால் துல்லியமாகக் கணிக்க முடியவில்லை. ஒன்றா இரண்டா, எத்தனை பெண்கள் கண்டீர்! <<

ஓரிரு வருடங்களுக்கு முன்னர், டப் மாஷ் என்கின்ற வஸ்துவொன்று முகப்புத்தகத்தை ஆட்டிப்படைத்துக்கொண்டிருந்தது. ஏறக்குறைய முகப்புத்தகம் வைத்திருந்த அனைவருமே இதைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்கள். ஒருகட்டத்தில், அது அவர்களுக்கு எரிச்சலையும், சலிப்பையும் ஏற்படுத்தவே அவர்களாகவே “அதனைக்” கைவிட்டு விட்டார்கள். இப்போது சராஹா. கிட்டத்தட்ட அனைவருமே பயன்படுத்துகின்றார்கள். இதன் நீட்சி ஒரு வாரமா?, அல்லது மாதமா? அல்லது வருடமா?

உமையாழ்: >> இது மிக வேகமான உலகம். இங்கே எல்லாவற்றுக்கும் ஆயுள் கம்மிதான். நான் டப்மாஷ் பாவித்தது இல்லை. இன்றைவரைக்கும் அது எப்படி வேலை செய்கிறது என்பது கூட எனக்குத் தெரியாது. ஆனால் Sarahah புதினம். அது எனக்குப் பிடித்திருக்கிறது.

மனிதன் எப்போதும் தொடர்பாடலை விரும்புகிறான். ஏதோ ஒருவகையில் மற்றவர்களுடன் கதைக்கப் பிரியப்படுகிறான். முன்னர் ஒரு மரத்தடியில், டீக் கடையில் கூடி கதைத்திருந்த மனிதன், இப்போது அதற்கு மாற்றீடாக வேறு விடயங்களைக் கண்டுபிடித்திருக்கிறான். அப்படித்தான் நான் இதைப் பார்க்கிறேன், நினைக்கிறேன்.

இந்த சமூகவலைத்தளத்தை அவன் பாதுப்பானது எனக் கருதுகிறான். அவனால் எப்படியோ ஒழிந்து கொண்டேனும் யாருடனாவது பேசிக்கொள்ள முடிகிறது. அது அவனுக்கு பிடித்திருந்த வேண்டும்.

ஒன்று அவதானித்தீர்களா?

இப்போதெல்லாம் நேரம் சுருங்கிவிட்டது. தூரமும் குறுகிவிட்டது. சமூக விலங்கான இந்த மனிதனுக்கு அது ஒரு குறுகுறுப்பை, கிளுகிளுப்பை கொடுப்பதாக இருக்கவேண்டும் என நினைக்கிறேன்; ஒரு புதுமாப்பிள்ளையின் மனநிலை போல. அதன் விளைவுதான் இவை எல்லாம். ஆக இப்போதைக்கு இது முடியப் போவதில்லை. புதுமையை நோக்கிப் புதிதாக பாய்ந்துகொண்டே இருக்கும்.

முடிந்தால் அனுபவிப்போம். இல்லையேல் எட்டி நின்று வேடிக்கை பார்ப்போம் என்கிற மனநிலைக்கு நான் என்றோ வந்துவிட்டேன். நீங்கள்? <<

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s