மிகவும் நல்ல கதை. பல இடங்களில் கத்தரி போட்டிருந்தால், இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். இந்தக் கத்தரி கூட பொருத்தமான வார்த்தையல்ல. இது எனது பார்வை மட்டுந்தானே. வேணுமானால்ச் சீர்மைப்படுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வார்த்தைகளை அபரிமிதமாகப் பயன்படுத்துபவர் என்பதை உங்கள் தலைப்பே வாசகனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதைத் -தொலைந்துபோன சிறிய பைபிள்- என்பதோடேயே நிறுத்தியிருக்கலாம். ரஷ்யப் பெயர்கள் “விளாடிமிர்” என்றுதான் இருக்கும். நீங்கள் “விளாடிமின்” என்று எழுதுவது பொருத்தமாயில்லை. “மவுண்ட் பேட்டன்”, “ஐன்ஸ்டைன்” இவர்களது மொழிகள் படைப்புடன் தேவையில்லை. எதுக்கு சப்போர்ட்டுக்கா?

பல வடமொழி வார்த்தைகளை தவறான அர்த்தத்தில் பிரயோகித்துள்ளீர்கள்.

உம்: லஜ்ஜை. அதுக்கு வெட்கம் என்று தான் பொருள். விழுந்துபோன சக போர்வீரனை விட்டுவிட்டு ஓடும் மற்றொருவனுக்கு குற்றவுணர்வோ, பச்சாதாபமோ தான் இருக்கும். லஜ்ஜை எப்படி இருக்கும்?

அதேபோல் நிவேதனம். நிவேதனம் என்றால் நைவேத்தியம், அல்லது சாமிக்குப் படைக்கப்படும் பிரசாதம் என்றே பொருள். பிள்ளைகளுக்கு உணவை வழங்குதல் எப்படி நிவேதனம் ஆகும்?

நாலைந்து பேர் குழுமியிருக்குமிடத்தில் யாரையும் குறிப்பாக நோக்காமல் மையமாகச் சிரிக்கலாம். ஒருவரைப் பார்த்து மையமாகச் சிரிப்பது எப்படியோ?

விளாடிமினை முதலில் அறிமுகப்படுத்திய பின்னால் தொடர்ச்சியாக அவன் செயற்பாடுகளை விபரித்திருந்திருக்கலாம். இன்னொன்றையும் நீங்கள் கவனித்திருக்கவேண்டும். கதையின் ஓட்டத்துக்கும், கருவுக்கும், விளாடிமிரின் தற்கொலைக்கும் நேரடியான எந்த சம்பந்தமுமில்லை. “அதைச்” தொங்கு சதையாகவே பார்க்கிறேன். அதைப்போல், திரு. அலெக்சாந்தர் லூக்கா சென்ஹா, அசடன் கதையின் பகுதியை வாசிப்பதும் இக்கதைக்கு அநாவசியமான பகுதி.

எழுத்தாளர் அளவுக்கு மிஞ்சிய தத்துவ விசாரம் வாசகனுடன் செய்வது எனக்கு உவப்பாயில்லை. நான் முரண்படும் இடங்களை வர்ணப்படுத்தியுள்ளேன்.

//ஒருவேளை என்னுடைய குறி தவறி விடுகின்றது என வைத்துக் கொள்ளுங்கள். கரடி தப்பிவிடுவதற்கான அபாயமிருக்கின்றதல்லவா? நீங்கள் குறிப்பிட்ட தன்னுடைய கடைசி விதியின் வட்டத்திலிருந்து அது வெளியேறி மறுபடியும் தன்னுடைய வாழ்வை அது வாழத் தொடங்குகின்றதல்லவா?//

விதியாவது விதிக்கப்பட்டது. அதாவது எவராலும் மாற்ற முடியாதது. கடவுளுக்கே விதியுண்டு என்கிற ஒரு கோட்பாடு உண்டு. அதாவது கர்மா கோட்பாட்டை ஒருவர் நம்பினால் விதியின் வட்டத்திலிருந்து கரடியல்ல வேறெதுவும் விலகித் தன் வாழ்வைத் தொடர முடியாது. உங்கள் சூட்டு அபாயத்திலிருந்து அது தப்புவது அதன் வாழ்வின் ஒரு நாளைய நிகழ்வு. அது தப்பிச் செல்லுதலே அதன் விதி. இறக்கின்ற விதியிருந்தால் அது இறந்தே படும். இறக்கின்ற விதியிலிருந்து விலகி வாழ்வுக்குள் வந்துவிடமுடியாது.

ஒரு கரடியைக் கூடச் சுடத் தயங்கும் ஒருவன் ஒரு பெண்ணை அடித்து மூக்கை உடைத்து விட்டு வல்லுறவு செய்வதற்கான காரணம் அவனது அதீதமான் பாலியல் விருப்பா? / அல்லது ஜெர்மன்காரி எம்மால் கைதியாக்கப்பட்டவர் என்கிற மேலாண்மையா காரணம்? என்பதையும் சற்றே விசாரஞ் செய்திருக்கலாம் ஆசிரியர்.

கதையை முதலாவது கதை, இரண்டாவது கதை, மூணாவது கதையென்று வகுத்திருக்கத் தேவையில்லை. ஊளைச் சதைகளை நீக்கியிருந்தாலே போதும்.

தொடருங்கள்………வாழ்த்துக்கள்.

பொன்னையா கருணாகர மூர்த்தி.

கதையை வாசிப்பதற்கு.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s