நீலப் பறவை. 

என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.

ஆனால், நான் மிகவும் கடுமையானவொரு தொனியில்

அப்பறவைக்குக் கூறினேன்.

நீ இங்கேயேயிரு; ஏனெனில், மற்றவர் உன்னைப்பார்க்க

நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.
ஆனால் நானோ அதன்மீது மதுவினை ஊற்றுகின்றேன். 

கூடவே சிகரெட் புகையினையும் ஊதித்தள்ளுகின்றேன்.

கலவி கொள்பவர்கள், நகரத்தில் மது விற்பனையாளர்களாகவிருப்பவர்கள்,

மளிகை ஊழியர்கள்

என எவருக்குமே

ஒருபோதும் தெரியப்போவதில்லை

என் இதயத்திலிருக்கும் அந்தப்பறவைவையைப்பற்றி.
என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.
ஆனால், நான் மிகவும் கடுமையானவொரு தொனியில்

அப்பறவைக்குக் கூறினேன்.

என்னிதயத்தின் அடியிலேயிரு;

நீ என்னை சஞ்சலமடைய வைக்க நினைக்கின்றாயா?

எனது புத்தகங்களை அய்ரோப்பாவில் விற்பனை செய்யப் போகின்றாயா?
என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.
ஆனால், நானோ மிகவும் திறமையானவன்.

நான் மட்டுமே அப்பறவையை இரவு நேரங்களில்

எல்லோரும் உறங்கிய பிற்பாடு

எங்கேயாவது வெளியேற அனுமதிப்பேன்.
நான் அதற்குச் சொன்னேன்

நீ உள்ளிருப்பது எனக்குத் தெரியும்; ஆகவே

நிச்சலமடையதே.

பிறகு, நான் மறுபடியும் அந்தப்பறவையை

உள்ளே மறைத்துக்கொண்டேன்.

அப்போது அது பாடிக்கொண்டிருந்தது.

அதை அமைதியாக இறக்கவிடப்போவதுமில்லை.

மற்றும் ,,,நாங்களிருவரும் அதேமாதிரியே எங்களுடைய இரகசிய உண்மையுடன்

துயில்கொள்கின்றோம்.
ஒரு மனிதன் கண்ணீர்

சிந்துவதற்கு இதுபோதுமெனினும்

நான் அழப்போவது கிடையாது.
நீங்கள்?

//அமெரிக்காவின் புகழ்பெற்ற கவிஞரான சார்லஷ் புக்கோவ்ஷ்கி எழுதிய கவிதை.  ஆக்காட்டி இதழ் 14ல் வெளிவந்தது.//

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s