நேற்றுத்தான் தாரை தப்பட்டை பார்த்தேன். ஒரே வார்த்தையில் சொல்வதாகயிருந்தால் ஆபாசக் குப்பை.பாலா தாரை தப்பட்டை எடுத்திருந்ததற்குப் பதில் போர்னோ படம் ஏதாவது எடுத்திருக்கலாம். அந்தளவிற்கு தாரை தப்பட்டையின் காட்சிகளும், வசனங்களும் ஒரு போர்னோ படத்திற்குரிய அம்சங்களுடனிருந்தன.

ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். அண்ணனும், தங்கையும் ஒரு காட்சியில் ஆடுகின்றார்கள். கூடவே பாடலும் பாடுகின்றார்கள். எல்லோரும் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். கூட்டத்தில் ஒருவர் ரஜனி பாட்டுப் பாடு என்கிறார். உடனே அண்ணன் கீழ்வருமாறு ஒரு பாடலைப் பாடுகின்றான்.

பொதுவாக என் மனசு தங்கம்
ஒரு பொம்புளைய கண்டுபுட்டா தொங்கும்

என்ன தொங்குமென்று நான் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது  அவன் அடுத்த வரியை பாடுகின்றான்.

தல தொங்கும்.

இன்னோர் உதாரணம்

அண்ணன் தங்கையைப் பார்த்து,

இங்க வந்திருக்கும் ஐய்யாமாருக்கு ஒன்னைய ரொம்பப் புடிச்சிருக்கு

ஆஹா, என் எதைப் பார்த்து அவங்களுக்குப் புடிச்சிருக்கு

உன் கொண்டையப் பார்த்துப் புடிச்சுருக்கு

ஓ, அப்புடியா

உன் பு……

ஏய், வேணாம் இதோட நிறுத்திடு.

ஒரு தங்கையைப் பார்த்து ஒரு அண்ணன் இப்படியா பாடுவான். இதற்குத்தான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேன். பாலா போர்னோ படம் எடுத்திருக்கலாமென்று.

ஆரம்பத்தில் இப்படியானவொரு விமர்சனத்தையே தாரை தப்பட்டை குறித்து எழுதியிருந்தேன். ஆனால் நண்பர் தர்மு பிரசாத் தாரை தப்பட்டை குறித்தான என்னுடைய புரிதலை மிக காட்டமாகப் பதிவு செய்திருந்தார். எனக்கும் அது சரியென்றே தோன்றுகின்றது.

கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம், கதக் களி போன்ற தொன்மையான கலைகள் மாத்திரம் மிக உச்சஸ்தாயில் வைத்து மதிக்கப்படும்போது, கிட்டத்தட்ட அதேயளவு தொன்மை வாய்ந்த கரகாட்டம் மாத்திரம் கலையிழந்து போனது எதற்காக?

இன்றளவும் கரகட்டக்காரர்கள் அவுசாரிகளாகவே பார்க்கப்படும் அவலநிலை தமிழ்நாட்டில் இருக்கின்றது. காசுக்காக தங்கள் அல்குல்களைக் கூட தூக்கிக் காண்பிக்கின்றார்கள்.

குறிப்பாக இந்த இணைப்பின் வசனத்தைக் கேளுங்கள்,

இது தான் இன்றைய மெய் நிலைக் கரகாட்டம். பாலா அது குறித்தான பதிவையே தாரை தப்பட்டை மூலம் பதிவு செய்திருக்கின்றார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s