2013இல் Abdellatif Kechiche இயக்கிய திரைப்படம்தான் நீலம் ஒரு சூடான நிறம் திரைப்படம்.பல சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபற்றி விருதுகளை குவித்த படம்.தற்பால் விருப்பம் உள்ள இரண்டு பெண்களுக்கிடையிலான காதலை ஒளிவு மறைவின்றி சொல்லுகின்றது.

முதல்தடவையாக இங்கே வருகின்றேன் .ஆனால் இவற்றைப்பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன்.அத்தோடு டிஸ்கோ இசைகளையும்,இப்படியான நடனங்களையும் இப்பொழுதுதான் முதல்முறையாகப் பார்க்கின்றேன்.இவர்கள் மிகவும் மெதுவாகவும்,அமைதியாகவும் பேசுகின்றார்கள்.கிளாசிக் இசை நேரடியாக ஏன் காதுகளுக்குள் உட்புகுகின்றது.இது ஒரு அருமையான கலந்துரையாடலாக இருக்குமென்று நம்புகின்றேன்.உண்மையாகவே இங்கேயிருக்கும் மனிதர்கள் என்னை ஈர்க்கின்றார்கள்.
தயவு செய்து “கிளப்” என்கின்ற வார்த்தையை உபயோகப்படுத்தாதீர்கள்.அது எனக்கும்,இங்கேயிருப்பவர்களுக்கும் பிடிப்பதில்லை.எங்கள் நாட்டில் தற்பால் விரும்பிகளுக்கென்று ஒரு கிளப் கிடையாது.இந்த அரசாங்கம் அதற்கு அனுமதியும் தராது.அதனால் தான் நாங்கள் இந்த இடத்தை எங்களுக்கென்று ஒதுக்கியிருக்கின்றோம்.போலிஸ்காரர்களின் தொல்லையும் இல்லை.இன்னும் சொல்லப்போனால் இங்கே நாங்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றோம்.புதியவர்களையும் வரவேற்கின்றோம்.

ஆனால் நான் உங்கள் இனத்தை சேர்ந்தவன் இல்லையே?

அது பரவாயில்லை.இப்பொழுது என் கரங்களை மெதுவாக பற்றிப் பிடியுங்கள். பயம் வேண்டாம்.நான் உங்களை முத்தமிடவோ,அல்லது உங்கள் உறுப்புகளைத் தொட்டுப் பார்க்கவோ முயற்சி செய்ய மாட்டேன்.என் கண்களை நேராக உற்றுப் பாருங்கள்.பார்த்துக்கொண்டே இருங்கள்.இப்போது சொல்லுங்கள் என்ன காரணத்துக்காக என்னை சந்திக்க வந்திருக்கின்றீர்கள்

தற்பால் விருப்பம் என்றால் என்ன? இவ்வகையான உறவுமுறை இயற்க்கையானதுதானா,அல்லது ஒருவிதமான மனநோயா?

ஒருதடவை “சடோம்” நகரத்திற்கு இரண்டு தேவதூதர்கள் வந்தார்கள். அவர்கள் வருவதைக் கண்ட ஆப்ரகாமின் மருமகனான லூத் அவர்களின் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான்.பின் அவன் அவர்களை நோக்கி தேவதூதர்களே! ஒரு சிறிய விண்ணப்பம் ;இன்றிரவு நீங்கள் என்னுடைய வீட்டிலேயே தங்க வேண்டும்.நான் உங்களுடைய பாதங்களைக் கழுவி,பின் நீங்கள் அருந்துவதற்கு ஒரு கோப்பை வைனும்,உண்பதற்கு ரொட்டித் துண்டுகளும் தருகின்றேன்.நீங்கள் அவற்றை உண்டுவிட்டு நிம்மதியாக படுத்துறங்கி, நாளை காலையில் மறுபடியும் உங்கள் பயணத்தை தொடரலாம்.என்றான்.அதற்கு தேவதூதர்கள்,மன்னிக்கவேண்டும் லூத். இன்றிரவு நாங்களிருவரும் உன்னுடன் தாங்கமுடியாது. ஏனென்றால் நாங்கள் இருவரும் இன்றைய இரவை இந்நகரத்தின் வெளிப்புறத்திலேயே கழிக்க விரும்புகின்றோம் ,எங்களுக்கு கொடுக்கப்பட்ட ஆணையும் அதுதான் என்கின்றனர்.

ஆனால் லூத் விடுவதாகயில்லை.நீங்கள் என்னுடனேயே தங்கியாகவேண்டும் என்று மீண்டும் மீண்டும் அவர்களை வற்புறுத்துகின்றான்.இறுதியில் தேவதூதர்கள் இருவரும் வேறுவழியின்றி லூத்தின் வீட்டில் தங்க சம்மதிக்கின்றார்கள்.மகிழ்வுடன் அவர்களிருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துவரும் லூத், அவர்களின் பாதங்களை கழுவி அவர்கள் உண்பதற்கு ஒரு கோப்பை வைனும், ரொட்டித்துண்டுகளும் கொடுக்கின்றான்.இதற்கிடையில் இரண்டுதேவ தூதர்கள் லூத்தின் வீட்டில் தங்கியிருப்பது தெரிந்து ” சடோம்” நகர ஆண்களனைவரும் லூத்தின் வீட்டினைச் சுற்றி முற்றுகையிடுகின்றார்கள்.

விஷயமறிந்து வெளியே வரும் லூத், அவர்களை நோக்கி உங்களுக்கு என்னவேண்டுமென்று கேட்கின்றான்.அதற்கு அவர்கள், “உன்னுடைய வீட்டில் இரண்டு புதிய ஆண்கள் தங்கியிருக்கின்றார்கள்,அவர்களை வெளியே அனுப்பு,அவர்களுடன் நாங்கள் அனைவரும் கலவி கொள்ளவேண்டும்” என்கின்றனர்.அதற்கு லூத், “வந்திருப்பவர்கள் இருவரும் சாதாரண மனிதர்களல்ல.அவர்கள் தேவதூதர்கள்.இன்றைய என்னுடைய விருந்தாளிகள்,மட்டுமல்லாது அவர்கள் என்னுடைய பாதுகாப்பின் கீழேயே இருக்கின்றார்கள்,அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்கவேண்டியது என்னுடைய கடமை.ஆகவே தயவுசெய்து அவர்களிருவர்களையும் விட்டுவிடுங்கள்.எனக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றார்கள்.இன்னும் கன்னி களையாதவார்கள். வேண்டுமென்றால் நீங்கள் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள்.உங்கள் விருப்பப்படி என்னவேண்டுமென்றாலும் செய்து கொள்ளுங்கள்.ஆனால் தேவதூதர்கள் மீது மட்டும் கைவைத்து விடாதீர்கள்.” என்கின்றான்.

இதனால் கோபம் கொள்ளும் நகர ஆண்கள் அனைவரும் லூத்தை நோக்கி “நீ வயிற்றுப் பிழைப்புக்காக வேறு தேசத்திலிருந்து எங்கள் தேசத்துக்கு வந்தவன்.இன்று எங்களுக்கே நீதி சொல்லப் பார்க்கின்றாயா” என்று கேட்டு அவனை அடிக்கின்றார்கள்.அவனின் வீட்டின் கதவை உடைத்து தேவதூதர்கள் தங்கியிருக்கும் அறைக்குச் சென்று அவர்களுடன் ஒருவர்பின் ஒருவராக புணர ஆரம்பித்தார்கள் .

மேலே நான் உங்களுக்கு கூறியது கிறிஸ்தவர்களின் வேத நூலான புனித வேதாகமத்தில் தற்பால் விரும்பிகள் பற்றி எழுதப்பட்டிருக்கும் ஒரு சிறு குறிப்பு. தற்பால் விருப்பம் என்பது முற்றிலும் இயற்கையான ஒன்றுதான். ஆரம்பகாலத்தில் குறிப்பாக கிரேக்க காலத்தில் கடவுளர்களிடையே கூட தற்பால் சேர்க்கை இருந்திருக்கின்றது.இவ்வகையான சேர்க்கையில் ஆர்வமுள்ளவர்கள் வீரமானவர்கள் என்றும் கருதப்பட்டது.ஆனால் நான்காம் நூற்றாண்டில் இந்நிலை மாறியது. தற்பால் சேர்க்கை என்பது ஒருவித மனநோய் என்றும் இறைவனுக்கு எதிரானது என்றும் விமர்சிக்கப்பட்டது.ஒரு ஆணுக்கு இன்னோர் ஆணின் மீதோ, அல்லது ஒரு பெண்ணுக்கு இன்னோர் பெண்ணின் மீதோ ஏற்படும் இச்சையை அல்லது காதலை நாம் தற்பால் விருப்பம் என்கின்றோம்.மனிதனோ அல்லது விலங்குகளோ தங்களுடைய பாலியல் இச்சைகளை தீர்ப்பதற்கு மூன்றுவிதமான நடைமுறைகளை வைத்திருக்கின்றன.முதலாவது எதிர்ப்பால் உறவு.(Straight sex) அதாவது ஒரு ஆண் ஒரு பெண்ணின் மீது ஆசைப்படுவது,மற்றும் ஒரு பெண் ஒரு ஆணின் மீது ஆசைப்படுவது.சாதாரணமாக இவ்வுலகில் வாழும் பெரும்பாலான மனிதர்கள் இவ்வகையான பாலியல் உறவுமுறைகளையே விரும்புகின்றனர்.இரண்டாவது தற்பால் உறவு. (Homosex) அதாவது ஒரு ஆண் இன்னோர் ஆணின் மீது ஆசைப்படுவது,மற்றும் ஒரு பெண் இன்னோர் பெண்ணின் மீது ஆசைப்படுவது.இன்றுவரை இவ்வகையான உறவு அருவருக்கத்தக்க உறவு முறையென்றும் இது அடியோடு தடைசெய்யப்படவேண்டிய உறவுமுறை என்றுமே விமர்சிக்கப்பட்டு வருகின்றது.மூன்றாவது இருபால் உறவு.(Bisex) அதாவது மனநிலைக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இருபாலினருடனும் உறவு வைத்துக்கொள்ள ஆசைப்படுவது.
உங்களுக்கு ஒன்றைத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் சாதனா.உண்மையில் உவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதர்களும் அது ஆணாக இருக்கட்டும் அல்லது பெண்ணாக இருக்கட்டும் இரு சாதியினருமே அடிப்படையில் இருபால் விரும்பிகளாகவே இருக்கின்றனர்.ஏன் உங்களுக்குக்கூட அந்த அனுபவம் எதாவது ஒரு இடத்தில் அமைந்திருக்கலாம்.இது நீங்களாகவே விரும்பிய ஒன்று என்று நான் சொல்லவரவில்லை.ஆனால் சூழ்நிலை உங்களை அப்படி மாற்றியிருக்கலாம் இல்லையா.பெண் தோழிகளின் சகவாசம் இல்லாதவர்கள் அல்லது ஆண் தோழர்களின் சகவாசம் இல்லாதவர்கள் ஏதோவொரு வகையில் ஒருபால் சேர்க்கையில் ஈடுபட்டவர்களாகவே இருக்கின்றார்கள்.அதுவும் இந்தக்காலத்தில் இது சர்வசாதாரணமாக நடக்கக் கூடிய ஒன்றுதான்.கல்லூரி விடுதியில்,சிறைச்சாலையில், பலவிடங்களில் இப்படி நடந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் இவற்றை வெளியே சொல்ல அவர்கள் விரும்புவதில்லை.சமுதாயத்தில் தாழ்ந்துபோய்விடுவோமா என்கின்ற பயம்.இந்த சமுதாயம் தம்மை தனிமைப்படுத்தி விடுமோ என்கின்ற பயம்.

நாகரீகம் எப்போது தோன்றியது.தேவனால் படைக்கப்பட்ட ஆதாமும்,ஏவாளும் மூன்று ஆண்மக்களைப் பெற்றார்கள்.திரு வேதாகமம் இப்படித்தான் கூறுகின்றது.அப்படியெனில் மூன்றாம் தலைமுறை எப்படி உருவானது? ஆதாம் பெற்றெடுத்த மூன்று ஆண்மக்களும் தன் தாயுடனேயே கலவி கொண்டிருக்காவிடின் மூன்றாம் தலைமுறை சாத்தியமில்லை.அப்படியும் இல்லையென்றால் பைபிள் என்பது ஒரு நல்ல புனைவு நூல் என்பதை கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். ஒரு உதாரணம் சொல்லுகின்றேன்.கிரேக்க காலத்தில் ஒருநாள் கிரேக்கர்கள் ஆறுபேர் படகொன்றில் பயணித்துக் கொண்டிருந்தார்கள்.இரண்டுமாதமல்ல,மூன்றுமாதமல்ல தொடர்ந்து ஆறுமாதங்கள் அவர்கள் படகில் பயணித்தார்கள்.கொண்டுபோயிருந்த உணவுப்பொருட்களும் முடியும் தருவாயில் இருந்தன.விடாய் எடுத்தபோது கடல்நீரை அள்ளிப் பருகினார்கள்.ஆனால் தொடர்ந்து உப்புக்கலந்த நீரையே அவர்கள் பருகிவந்ததால் ஒருவித தோல்நோய் அவர்களை தாக்கியது.ஒருவர்பின் ஒருவராக இறக்க ஆரம்பித்தனர்.இறந்த உடல்களை கடலில் வீசினர் சகபயணிகள்.இறுதியில் பயணிகளின் எண்ணிக்கை இரண்டாக மாறியது.கொண்டுபோயிருந்த அத்தனை உணவுப்பொருட்களும் முடிந்துபோயிருந்தன. பசி அவ்விருவர்களையும் வாட்டியெடுத்தது.எதுவுமே செய்யமுடியாத நிலை.உதவிக்கு யாராவது வருவார்களா என்று காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.ஒருவரும் வருவதாயில்லை. கடைசியில் படகில் பயணம் செய்துகொண்டிருந்த ஆலஸ் என்பவன் தன்னோடு பயணம் செய்த மேற்ரியசை கத்தியால் குத்தி கொலை செய்துவிடுகின்றான்.பீறிட்டுப் பாய்ந்த இரத்தத்தை தன் விடாய் தீரும் மட்டும் அருந்தினான்.சதைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி உண்டான்.யோசித்துப் பாருங்கள் சாதனா, இதுவரைகாறும்…மிருகங்களின் இறைச்சிகளையும்,கடல் மீன்களையும் மட்டுமே புசித்துவந்த ஆலஸ் எப்படி நரமாமிசத்தை உண்ணப்பழகினான்.அவன் பிறக்கும்போதே நரமாமிசம் உண்டு பழகியவனா?,அல்லது அதற்கு முன்னர் அப்படியொரு அனுபவம் அவனுக்கு ஒருதடவையாவது ஏற்பட்டிருக்கின்றதா? இல்லையே,ஆனால் சர்ந்தப்ப சூழ்நிலை அவனை நரமாமிசத்தை புசிக்கும் அளவிற்கு மாற்றிவிட்டது.பசி மற்றும் உயிர் வாழவேண்டுமே என்கின்ற ஆசை தான் ஆலசின் இந்த மனித நாகரீகத்திற்கு முரணான காரணம்.
இன்னுமொரு உதாரணம் சொல்லுகின்றேன்.இதுநடந்தது சீனாவில் என்று நினைக்கின்றேன்.தங்களிடம் பிடிப்பட்ட திபெத்திய போராளிகளுக்கு சீன ராணுவம் ஒரு நூதன தண்டனையை வழங்கத் தீர்மானித்தது.பிடிபட்ட போராளிகளின் எண்ணிக்கை இருபது. அந்த இருபது பேர்களும் ஒருவரோடு ஒருவர் சண்டை போடவேண்டும்.மரணிப்பவர்களின் உடல்களை வெல்பவர் உண்ணவேண்டும்.இதுவே சீன இராணுவம் திபெத்திய போராளிகளுக்கு வழங்கிய நூதன தண்டனை.போட்டி ஆரம்பமாகியது.அதுவரை நட்பாக இருந்தவர்கள் உயிர்வாழ வேண்டும் என்பதற்காக எதிரிகளைப் போன்று சண்டையிட்டார்கள்.ஒவ்வொருவராக செத்துவிழ இறுதியில் சியன் கூ என்பவன் போட்டியில் வெற்றிபெற்றான்.இறந்து கிடந்த நண்பர்களின் உடல்களை வெட்டி உண்டான்.தன்னால் முடிந்தளவு அவர்களின் இரத்தங்களை பருகினான்.ஆனால் கடைசியில் சீன இராணுவம் அவனையும் கொன்று போட்டது.

சூழ்நிலை ஒரு மனிதனை எப்படிவேண்டுமென்றாலும் மாற்றலாம் சாதனா.இதுதான் உண்மை.ஆனால் எங்களின் நிலைவேறு.நாங்கள் விருப்பத்திற்க்காகவோ,அல்லது சுவாரஸ்யத்திற்காகவோ இப்படி இருக்கவில்லை. எங்கள் உடலில் இருக்கும் ஜீன் எங்களை இப்படி மாற்றிவிட்டது.

திரைப்படம் இயக்கும் ஆர்வம் உங்களுக்கு எப்படி ஏற்பட்டது?

துனிசியாவில் குடும்பத்தில் மூன்றாவது குழந்தையாக நான் பிறந்தேன்.இந்த சமுதாயத்தின் மீது பயம் கொண்டவர்களே தங்களை கண்டிப்பானவர்களாக உருமாற்றிக் கொள்கின்றனர்.ஆனால் உள்ளூர அவர்கள் மென் சுபாவம் கொண்டவர்களாகவும்,நேர்மையானவர்களாகவும் இருக்கின்றார்கள்.என் தாயும் அப்படிப்பட்டவள்தான்.அவள் இந்த சமுதாயத்தின் மீது அதிக பயம் கொண்டவளாக இருந்தாள்.அதனாலேயே தன்னைத் தானே ஒரு மோசமான பெண்ணாக சித்தரிக்கவேண்டிய தேவை அவளுக்கு ஏற்பட்டது.இதனால் அயலவர்களும் எங்களோடு பழகுவதில்லை.

உங்களின் ஐந்தாவது படத்திற்கு மூராவின் வரைகலை நாவலான “நீலத்தேவதை”யை தெரிவு செய்திருக்கின்றீர்கள்.இதற்கு ஏதாவது காரணம் இருக்கின்றதா?
மூராவின் “நீலத்தேவதை” நாவலை படித்திருந்தபோதே அதை சினிமாவாக உருவாக்கவேண்டும் என்கின்ற எண்ணம் எனக்குள் இருந்தது.நீண்ட காலமாகவே அதைப்பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தேன்.திரைப்படத்தை ஆரம்பிக்கும்போதே ஆசிரியை தொழில் பற்றிய சிந்தனை ஓட்டம் எனக்குள் பிரவாகமாக ஓடிக்கொண்டிருந்தது.இதற்காகவே தனிப்பட்ட முறையில் பல ஆசிரியர்களை நான் சந்தித்துக்கொண்டிருந்தேன்.அவர்களின் பிரக்ஞைபூர்வமான பதில்கள் என்னை திருப்திப்படுத்திக்கொண்டிருந்தன.அதேநேரத்தில் நான் திரைப்படத்தை உருவாக்கிக்கொண்டும் இருந்தேன்.ஒரே நேரத்தில் பலதரப்பட்ட வேலைகளை செய்தேன்.இரவுகளில் படக்குழுவினருடனும், பகல் நேரங்களில் ஆசிரியர்களுடனும் என் பெரும்பாலான நேரங்களை செலவு செய்தேன்.நான் பலதரப்பட்ட ஆசிரியர்களுடன் உரையாடியிருக்கின்றேன்.அப்படி உரையாடும்பொழுது அவர்களில் யார்யார் தேர்ந்த கலைஞர்கள் என்பதையும் என்னுள்ளேயே கணக்கேடுத்துக்கொண்டும் இருந்தேன்.என்னுடைய அவ்வாறான செயற்பாடுகள் பின்னாட்களில் எனக்கு பெரும்முதவியாக இருந்தன.முடிவில் நீலத்தேவதையில் வருகின்ற கதாப்பாத்திரமான அடேல் என்ற பெண்ணை என்னுடைய இந்தப்படத்தில் ஆசிரியையாக உருமாற்றிக்கொண்டேன்.

உங்கள் திரைப்படத்தில் முக்கியமான காட்சியே அடேலும், எம்மாவும் கலவி கொள்ளும் அந்த செக்ஸ் காட்சிதான்.அந்த காட்சிக்காக அவ்விரு பெண்களையும் எவ்வாறு தயார்படுத்தினீர்கள்

நான் இந்தக் காட்சியை படமாக்குவதற்கு முதல் இதை அருமையாக செய்யவேண்டுமென்று திட்டம் தீட்டியிருந்தேன்.அதனால் நாம் அவர்களை ஒரு ஓவியம் போல் படம் பிடித்தோம்.மிக நீண்ட நேரமாக அவர்களின் மேல் ஒளியினை பாய்ச்ச வேண்டிய அவசியம் ஏற்ப்பட்டது.களைப்படைந்த போது அவ்விருவர்களும் நிர்வாணமாகவே இளைப்பாற அனுமதித்தோம்.இல்லையென்றால் உணர்வுகள் பிரிந்துவிடக்கூடிய அபாயம் அவ்விருவர்களுக்குமே இருந்தது.

எம்மாவின் நீலநிற தலைமுடிக்கு ஏதாவது பின்னணிக் காரணம் இருக்கின்றதா?

நீலம் காமத்தின் நிறம் மாத்திரமல்ல.அது வீரத்தின் நிறமும் கூட.என்னுடைய கதாப்பாத்திரமான எம்மா ஒரு வீரமான பெண்.எதையும் தன்னிச்சையாக முடிவெடுத்து அதை செயல்படுத்தக்கூடிய திறமை உடையவள்.சமுதாயத்தின் பிற்போக்குத்தனங்களை அடியோடு வெறுப்பவள்.ஆகவே அவளின் நீல நிற தலைமுடியை ஒரு குறியீடாக இப்படத்தில் பாவித்தோம்.

உங்கள் திரைப்படத்தின் இரண்டு முக்கிய கதாப்பாத்திரங்களுக்குமே அவர்களின் செய்தொழில் தான் பிரதான தீமாக அமைந்திருக்கின்றது. ஒருவர் பள்ளி ஆசிரியை.மற்றவர் ஓவியர்.இதை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

நான் இந்தப்படத்தை ஆரம்பிப்பதற்கு எனக்கு முற்றிலும் நியாயமான,கௌரவமான இரண்டு தொழில்கள் தேவைப்பட்டன.நானறிந்து இந்த இரண்டு தொழில்களுமே எனக்கு அவ்வாறுதான்பட்டன. அதற்காகவே நான் இவ்விரு தொழில்களையும் தேர்ந்தெடுத்தேன்.அப்படி நான் அவற்றினை தேர்ந்தெடுத்தபோது மற்றவர்களின் அங்கீகாரத்தை பெற அது முயற்சிக்கவில்லை.இந்த சமூதாயத்தில் நல்ல மாணவர்கள் உருவாக நல்ல ஆசிரியர்களே காரணமென்பதில் மிகுந்த நம்பிக்கையுடையவன்.

இரண்டு பெண்களுக்கிடையிலான காதலை அப்படியே அப்பட்டமாக ஒளிவுமறைவின்றி சித்திரித்த படங்களில் உங்களின் “நீலம் ஒரு சூடான நிறம்” திரைப்படமே முன்னணியில் இருக்கின்றது.இதை நீங்கள் எவ்வாறு எடுத்துக்கொண்டீர்கள்.?

மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.என்னுடைய அடுத்த படத்தை இதைவிட அற்புதமாக எடுக்கலாம் என்கின்ற துணிச்சலை எனக்குத் தந்திருக்கின்றது.பார்ப்போம் காலமும்,நேரமும் கூடிவரட்டும்.

நீங்கள் உங்கள் நடிகைகளை எவ்வாறு தேர்ந்தெடுத்தீர்கள்?

திரைப்படத்தில் வரும் “எம்மா” என்ற கதாப்பாத்திரத்திற்க்காக லியா என்கின்ற பெண்ணையே நான் முதலில் சந்தித்தேன்.அவள் என்னுடன் அவளுடைய அழகு, குரல், திறமை என்பவற்றை சுகந்திரமாக வெளிப்படுத்தினாள் .அவள் எதையும் மறைக்க முயற்சி செய்யவில்லை.எல்லாவற்றைப்பற்றியும் அவள் வெளிப்படையாக பேசினாள். சமூக விழிப்புணர்வுடைய பெண்ணாகவும் அவள் இருந்தாள்.அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.அவளுடனான என் உறவு ஒரு முழுவருடம் கழிந்தபின்பு அவளின் திறமையில் பிரமித்துப்போய் அவளையே என்னுடைய படத்துக்காக தெரிவு செய்தேன் .
அடேலை நான் சந்தித்தபோதே முடிவுசெய்து விட்டேன்.ஏனென்றால் அவளுடைய உதடு எனக்குப் பிடித்திருந்தது.மேல் உதடு நீட்டிக்கொண்டும்,கீழுதடு சற்றே தொங்குமாப்போலும் இருந்தது.அதில் ஒரு வர்ணிக்கமுடியாத கவர்ச்சி இருந்தது.உங்களுக்கே தெரியும் பாலுறவு சம்மந்தப்பட்ட திரைப்படத்தில் தேக கட்டழகு மிக மிக முக்கியம் என்று.வசனங்களினால் தெளிவுபடுத்தமுடியாத சில காட்சிகளை கமெராக் கோணங்களினால் காட்சிப்படுத்த முடியும் என்று நம்புகின்றவன் நான்.
ஒரு படைப்பாளிக்கு அவனுடைய எல்லாப் படைப்புகளுமே பிடித்தமான ஒன்றுதான்.ஒவ்வொரு படைப்பினை அவன் உருவாக்கும்போதும் அதில் சிரத்தையுடனே ஈடுபடுகின்றான்.இருந்தாலும் நீலம் ஒரு சூடான நிறம் திரைப்படத்தில் உங்களுக்கு பிடித்த காட்சியென்று ஏதாவது இருக்கின்றதா
அடேல் என்ற பதினாறு வயதுப் பெண் உயர்பள்ளி ஒன்றில் கல்விகற்று வருகின்றாள்.அங்கே இவளைப்போலவே கல்விகற்கும் சலீம் என்ற பையனுக்கு இவள் மீது காதல் வருகின்றது.அடிக்கடி இருவரும் சந்தித்துப் பேசிக் கொள்ளுகின்றார்கள்.உடலுறவும் வைத்துக்கொள்ளுகின்றார்கள்.இதற்கிடையில் அடேலின் இன்னொரு பெண் தோழியான லிசா என்பவள் தற்பால் விருப்பம் பற்றி கூறுகின்றாள். தான் ஒரு லெஸ்பியன் என்றும்,ஆண்களோடு உறவு வைத்திருப்பதில் தனக்கு அதிக சுவாரஸ்யம் இல்லையேன்றும் பெண்களோடு இருப்பதே தனக்கு விருப்பமாக இருக்கின்றதென்றும் கூறுகின்றாள்.அந்த சந்திப்பு அடேலின் வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமைகின்றது.ஒருதடவை அடேல்,தெருவொன்றில் நடந்து செல்லும்போது நீல நிற தலைமுடியினைக் கொண்ட பெண்ணொருத்தி இன்னொரு பெண்ணுடன் எந்தவித லச்சையுமின்றி கைகோர்த்துச் செல்வதை காண்கிறாள்.அவர்களிருவரும் தற்பால் விருப்பம் உள்ளவர்களென்று அறிகின்றாள்.
சில நாட்களில் பின் சலிமுடனான நட்பு பெரும் மனக்கசப்பில் முடிந்து போக அன்றிலிருந்து ஆண்களுடனான சகவாசத்தையே அடியோடு வெறுக்கும் அடேல் லெஸ்பியன் கிளப் ஒன்றுக்குச் செல்கின்றாள்.அங்கே அவள் பலதரப்பட்ட பெண்களைச் சந்திக்கின்றாள்.அந்த பெண்களின் மத்தியில் நீல நிற தலைமுடியினைக் கொண்ட பெண்ணான எம்மாவும் அமர்ந்திருக்கின்றாள்.தன் முதல் பார்வையிலேயே அடேலின் தேவையினை அறிந்துகொள்ளும் அவள் தானாகவே எழுந்துவந்து அடேலுடன் பேசுகின்றாள்.அவர்களின் உரையாடல் பின்வருமாறு அமைகின்றது.இந்தக் காட்சி இப்படத்தின் முக்கியமான காட்சிகளில் ஒன்றென்பதால் அவர்களின் உரையாடலை முழுமையாகச் சொல்லவேண்டிய அவசியம் எனக்கு ஏற்படுகின்றது.
“ஏன் இங்கே வந்திருக்கின்றாய்”?
“எனக்குத் தெரியல்ல,ஒரு சர்ந்தப்ப வசத்தினால் இங்கே வந்திருக்கின்றேன்.”
“ஓஓ…..புல்டாக் அருந்துகின்றாயா பியர் குடிப்பதைப் போன்று இருக்கும்.”
“அருந்தும் எண்ணம் இல்லை.இருந்தாலும் ஒரு மாதிரிக்காக அருந்துகின்றேன்”.
(ஒரு கிளாசில் ஊற்றி அவளிடம் கொடுக்கின்றாள்.)”இதை சுவைத்துப் பார்”
“ஒன்று சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்ளமாட்டியே?”
“நிச்சியமாக இல்லை.”
“அருகம்புல் சாறு போலிருக்கின்றது.நல்லாவேயில்லை”.சொல்லிவிட்டு இருவரும் சேர்ந்து சிரிக்கின்றார்கள்.
“நீ நேரடியாக பேசுவது எனக்குப் பிடித்திருக்கின்றது.உன் பெயர் என்ன?”
“அடேல்”
“உன் பெயர் அழகாகவும் கவர்ச்சியாகவும் இருக்கின்றது.இதற்கு என்ன அர்த்தம்?”
“நீயே கண்டுபிடி”
“சூரியன்”
“இல்லை ”
“நம்பிக்கை”
“இல்லை”
“காதல்”
“இல்லை… நானே சொல்லிவிடுகின்றேன்…அடேல் என்றால் நீதி என்று பொருள்.உன் பெயர் என்ன?”
“எம்மா”
“என்ன பண்ணுற?”
“நீயே சொல்லு”
“முடி திருத்துபவர்”
“இல்லை…கலைக் கல்லூரியொன்றில் நான்காம் ஆண்டு படித்துக்கொண்டிருக்கின்றேன்”.
“கலையா…அது உனக்குப் பிடித்திருக்கின்றதா ?”
“ஆம்…பிடித்திருப்பதால் தானே செய்துகொண்டிருக்கின்றேன்.உனக்கு ஓவியம் பிடிக்குமா?”
“பெரிதாக என்றில்லை ஆனால் பிடிக்கும்”
“உனக்கு தெரிந்த ஓவியர்கள் சிலரைச் சொல்”
“பிக்காசோ”
“ம்ம்ம்….வேறு?”
“பிக்காசோ ”
“உனக்கு அவரை மட்டும்தான் தெரியுமா.சரி அதைவிடு நீ என்ன பண்ணுற அடேல்?”
“கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கின்றேன் ”
“ஓஒ….என்ன படித்துக் கொண்டிருக்கின்றாய்?”
“பிரெஞ்சு இலக்கியம்.ஆனால் இன்னும் முடிக்கல்ல”.
“படிப்பு முடிஞ்ச அப்புறம் என்ன செய்யலாம்ன்னு இருக்க?”
“ஆசிரியர் ஆகலாம்ன்னு இருக்கேன்”

அன்றிரவு இருவரும் ஆசைதீர புணர்ந்தார்கள்.வெறிகொண்டமிருகங்களைப்போல் கட்டி அணைத்துக்கொண்டார்கள்.சூடு கொண்ட தங்கள் மேனிகளை நாவினால் ஈரமாக்கினார்கள்.மார்புகளையும் குறிகளையும் சுவைத்தார்கள்.உதடுகள் கண்டிப்போகும் அளவுக்கு முத்தமிட்டுக்கொண்டார்கள்.

காலம் செல்லுகின்றது.எம்மா ஓவியராகி வேறு ஒரு ஊருக்கு சென்றுவிடுகின்றாள்.அடேலும் ஆசிரியையாகி பட்டம் பெறுகின்றாள்.அவளால் எம்மாவை மறக்க முடியவில்லை.சதா சர்வகாலமும் அவளைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கின்றாள்.அந்த தனிமை வாழ்வு அவளை அப்படியே உருக்குலைக்கின்றது.ஒருநாள் அந்த ஊரில் ஓவியக் கண்காட்சி நடக்கின்றது.எம்மாவை சந்தித்துவிடலாம் என்கின்ற ஆவலில் அங்கே செல்லும் அடேல் ஏமாற்றம் அடைகின்றாள்.எம்மா அங்கே இல்லை.பெருத்த ஏமாற்றத்தோடும்,சோகத்துடனும் வீதியில் நடந்து செல்லுகின்றாள் அடேல்.

நீங்கள் சிறுவராக இருந்தபோது உங்களை நீங்கள் ஒரு பெண்ணாக நினைத்ததுண்டா

ஆம், பிறந்து சில வருடங்களிலேயே நான் குறையுள்ளவன் என்பதை புரிந்துகொண்டேன்.ஆனால் முழுமையாக அந்த பாத்திரத்தோடு என்னால் ஒன்றிப்போகவும் முடியவில்லை.பள்ளியிலும் என்னை பெண்கள் வகுப்பிலேயே சேர்த்திருந்தார்கள்.அது எனக்கு பெருத்த அவமானமாக இருந்தது.எத்தனையோ தடவை யன்னல்தாண்டி குதித்து ஆண்கள் வகுப்பில் போய் அமர்ந்திருக்கின்றேன்.ஆனால் அவர்களோ என்னை தங்களுடன் சேர்த்துக்கொண்டபாட்டில்லை.என்னை மீண்டும் மீண்டும் பெண்கள் வகுப்பில் தள்ளிவிடுவதிலேயே குறியாக இருந்தார்கள்.

நான் வயதுக்கு வந்தபோதுகூட தொடர்ந்தும் என்னை நான் ஒரு பெண்ணாகவே நினைத்துக்கொண்டிருந்தேன்.பெண்கள் கழிப்பறையில் மூத்திரம் கழித்த அனுபவமும் உண்டு.கடைகளிலிருந்தும்,பெண்கள் வசிக்கும் வீடுகளிலிருந்தும் அவர்களின் சட்டைகளையும்,உள்ளாடைகளையும் திருடி அணிந்திருக்கின்றேன்.இதற்காக நான் பலதடவை அவர்களிடம் அடிவாங்கியும் இருக்கின்றேன். அடிவாங்கும் ஒவ்வொரு தடவையும் இதற்குப்பிறகு இப்படியான காரியங்களில் ஈடுபடக்கூடாது என்று முடிவெடுப்பேன்.ஆனால் அவை சில தினங்களிலேயே நீர்த்துப் போய்விடும்.ஐந்தாறு நாட்களின் பின்பு நான் மறுபடியும் எல்லாவற்றையும் ஆரம்பிப்பேன்.நான் பதினாறு வயதிலிருந்தபோது ஒருநாள் போலீஸ்காரர்கள் என்னை கைது செய்தார்கள்.நான் சிறுவன் என்பதால் அவர்களால் என்னை சிறையில் அடைக்க முடியவில்லை. மாறாக சிறுவர் நன்னடத்தை பிரிவில் என்னை சேர்த்தார்கள்.சிறையில் முழுதாக மூன்று வருடங்கள் கழிந்த பின்பு நான் வெளியே வந்தேன்.

உங்களுடைய முதல் தற்பால் சேர்க்கை யாருடன் எப்போது நேர்ந்தது என்பது பற்றி கொஞ்சம் கூறமுடியுமா இந்தக் கேள்வி அநாகரிகத்தனமாகத் தோன்றினாலும் நீங்கள் மிகவும் வெளிப்படையானவர் என்பதால் கேட்கின்றேன்.

தப்பில்லை.இதில் வெட்கப்படவோ அல்லது மறைப்பதற்கோ என்ன இருக்கின்றது.அப்போது எனக்கு பதினேழு வயதிருக்கும்.என் நண்பனான சலீம் வீட்டுக்கு வந்திருந்தான்.வீட்டில் யாருமில்லை.தாய் வெளியே போயிருந்தாள்.எங்கள் இருவருக்குமே பெண் தோழிகள் என்று யாருமே கிடையாது.யாருடனும் கலவியும் கொண்டதில்லை.முதல்முறையாக அவனுடைய கரங்கள் என் தேகத்தினை தீண்டியபோது நான் துடித்துப்போனேன்.அவனுடைய விரல்கள் என் ஒவ்வொரு உறுப்புகளையும் தடவிக்கொண்டே இருந்தன. என் குறி அன்றுதான் முதல்தடவையாக விறைத்தது.என் மேல்சட்டைகளை கழற்றிவிட்டு மார்புகாம்புகளை சுவைத்தான்.விறைத்துப் போயிருந்த என் குறியினை வாயில் வைத்து சப்பினான்.உண்மையில் அன்று நான் சொர்க்கத்தில் இருந்தேன்.கலவியில் இத்தனை இன்பம் இருக்குமென்று நான் கற்பனைகூட செய்ததில்லை.

இப்போது என்முறை.சலீம் தன் குறியினை சுத்தமாக வைத்திருந்தான்.இரண்டு நாட்களுக்கு முன்தான் முடியினை சவரம் செய்ததாக கூறினான்.நான் அவன் குறியின் தலைப்பை இழுத்து முனையினை தடவிக்கொடுத்தேன்.அவன் வாயிலிருந்து ஸ் ஸ் ஸ் என்ற முனகல் சத்தம் வந்தது.பின் அதை வாயில் வைத்து சுவைத்தேன். அவனின் குறி என் தொண்டை வரை இறங்கியது.என் தலைமுடியினை கொத்தாகப் பிடித்து தன் குறியினை என் வாயில் வைத்து ஒற்றி ஒற்றி எடுத்தான். அவனின் குறியின் சுவை இதுவரைகாறும் நான் சுவைத்திடாத ஒரு கனியின் சுவையை ஒத்திருந்தது.நான் ஒரு கையால் அவனின் குறியினை தூக்கிப்பிடித்துக்கொண்டு அவனின் விதைகளை சப்பினேன்.அது மிகவும் நன்றாக இருந்தது.

அப்படியெனில் உங்களுக்கு பெண் தோழிகளே இல்லையா?

இருக்கின்றார்கள்.ஆனால் அவர்களுடனான என் நட்பு வெறும் வார்த்தை வடிவிலும்,சுகம் விசாரிப்பதிலுமே இருந்திருக்கின்றது

//ஆக்காட்டி சிற்றிதழில் வெளிவந்த கட்டுரை.//

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s