தினம் தினம் இட்லி அவிப்பதில் தவறில்லை.ஆனால் அவித்த இட்லியையே திரும்பத்திரும்ப அவிப்பதில்த்தான் தவறு.நம் தமிழ் சினிமாவைத்தான் சொல்லுகின்றேன்.தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு கதை தட்டுப்பாடாகிவிட்டது.ஒரே கதையையேமறுபடியும் மறுபடியும்எடுத்துக்கொண்டிருக்கின்றார்கள்.அமெரிக்காவிலிருந்துகொஞ்சம்,ஐரோப்பாவிலிருந்து கொஞ்சம்,கொரியாவிலிருந்து கொஞ்சம்,இப்படிஅங்கொன்றும் இங்கொன்றுமாக கொஞ்சம் கொஞ்சமாக உருவியெடுத்து ஒரு கதையை தயார் பண்ணி படம் எடுத்துவிடுகின்றார்கள்.ரசிகர்கள்தான் பாவம்.இது எதுவுமே தெரியாமல் உண்பதற்கு கூட வழயில்லையென்றாலும் தாம் கட்டியிருக்கும் கோமணத்தை விற்றுக்கூட படம் பார்த்துவிடுகின்றார்கள்.செனகல்,ஈரான்,கொரியா,இலங்கை போன்ற “அறியப்படாத” நாடுகளிலிருந்து கூட உலக அரங்கில் வைத்து சிலாகித்துப் பேசப்படுகின்ற படங்கள்வந்துகொண்டிருக்கும் வேளையில் ஆண்டுக்கு இருநூறுக்கு மேற்ப்பட்ட திரைப்படங்களைதயாரிக்கின்ற இந்தியாவிலோ குப்பையிலும் குப்பையான படங்களேவந்துகொண்டிருக்கின்றன.சமீபத்தில்”அஞ்சான்” என்கின்ற உலகத்தரமான காவியத்தை கண்டுகளித்தேன்.மலத்தை மிதித்ததைப்போல் உணரவில்லை,மலக்குழியிலேயே விழுந்துவிட்டதைப்போல் உணர்ந்தேன்.அந்த அளவுக்கு”அஞ்சான்” காவியமாக இருந்தது.இரண்டு நண்பர்கள்.ஒருவனை வில்லன் கொன்று விடுகின்றான்.கோபம்கொள்ளும் மற்றவன் நண்பனைக் கொன்ற வில்லனை தேடித்தேடி கொலை செய்கின்றான்.இதுதான் அந்த “காவியப்”படத்தின் ஒருவரிக்கதை.ங்கொய்யால்லே…இதைத்தானே இத்தனை வருடங்களாக எடுத்துக்கொண்டிருக்கின்றீர்கள். உங்களுக்குமனசாட்சியே இல்லையா? கதை என்கின்ற பெயரில் ஒன்றுக்கும் உதவாத குப்பைபடங்களைஎடுத்துவிட்டு அதில் கொஞ்சம் தொழிற்நுட்பத்தையும் புகுத்திவிட்டால் அதுநல்லபடம் ஆகிவிடுமா? நல்லபடம் என்பது தொழிற்நுட்பத்தில் மாத்திரம்தங்கியிருப்பதல்ல.இன்னும் சொல்லப்போனால் நல்ல படத்திற்கு தொழிற்நுட்பமேதேவையில்லை.திரைப்படத்தை எடுக்கும் விதத்திலும்,சொல்லவந்த கருத்திலும்தான்எல்லாமே இருக்கின்றது. ஒரு நல்ல படமென்பது பார்வையாளனை அப்படியே கட்டிப்போடவேண்டும்,தூங்க விடாமல் அலைக்கழிக்க வேண்டும்.அவனுள் ஒரு மாற்றத்தினைஉண்டுபண்ண வேண்டும்.ஒவ்வொரு இரவுகளிலும் திரைப்படத்தின் கதாப்பாத்திரங்கள்அவனோடு உரையாடவேண்டும்.முக்கியமாக பார்வையாளன் என்பவன் அந்தகதாப்பாத்திரங்களோடு தன்னையும் இணைத்துக்கொள்ள வேண்டும்.>>துரதிஷ்டவசமாக தமிழ்நாட்டில் பாலுமகேந்திராவின் படைப்புகளைத் தவிர வேறு எந்த இயக்குனர்களின் படைப்புகளும், என்னை அவ்வளவாக கவர்ந்தது கிடையாது.இதனால் தமிழில் வெளிவரும் திரைப்படங்களைப் பார்ப்பதையே சமீபகாலமாக நிறுத்திவிட்டேன்<<கிம் கி டுக்கின் “தீவு”திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருக்கும் போது நான் அப்படித்தான்உணர்ந்தேன்.இரண்டு நாட்களாக தூங்கவேயில்லை.புரண்டுபுரண்டுபடுத்துக்கொண்டிருந்தேன்.சிந்தைபூராகவும் தீவு திரைப்படமும்,அத்திரைப்படத்தின் கதாப்பாத்திரங்களுமே நிறைந்திருந்தன. அந்தளவுக்கு “தீவு” திரைப்படம் என்னைஆக்கிரமித்திருந்தது.”தீவு” மாத்திரமேன்றல்ல.கிம் கி டுகின் பெரும்பாலான படங்களேஅப்படித்தான்.”இலைதளிர்காலம்,கோடை,இலையுதிர்காலம்,குளிர்காலம்,மற்றும் இலைதளிர்காலம்”, “வில்”, “கனவு”, “நேரம்” போன்ற பெரும்பாலான படங்களைப் பார்த்த அன்றைய தினங்களில்நான் தூங்கியதே இல்லை.

அவரின் “இலைதளிர்காலம்,கோடை,இலையுதிர்காலம்,குளிர்காலம்,மற்றும் இலைதளிர்காலம்” திரைப்படத்தை இந்த இணைப்பிலும் https://www.youtube.com/watch?v=SGJYxc8NPOY , “தீவு” திரைப்படத்தை இந்த இணைப்பிலும் காணலாம் https://www.youtube.com/watch?v=lH0qPk9fRlA .

அண்மையில், தென்னாபிரிக்காவில் வசிக்கும் நண்பர் ரமணன் “தேர் வேர்டிங் புப்”என்கின்ற சுவிஸ்நாட்டுத் திரைப்படத்தின் டிவிடியைஅனுப்பிவைத்திருந்தார்.விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் எப்படிஅங்கேயிருக்கும் மேலதிகாரிகளினால் வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதே கதை.கதைசாதாரண கதைதான்.ஆனால் அதை உருவாகியவிதத்தில்தான் இருக்கின்றதுதமிழ்நாட்டு இயக்குனர்களுக்கும் ஐரோப்பிய இயக்குனர்களுக்கும் இடையில் இருக்கும்கலை சார்ந்த அறிவு.இம்சிக்கவைக்கும் இசையோ,தேவையில்லாத தொழிற்நுட்பபுகுத்தலோ,சீறும் சண்டைக்காட்சிகளோ,நடிகைகளின் பெருத்த தொடைகளோ இது எதுமேஇல்லாமல் காவிய நயத்துடன் வெளிவந்திருப்பதுதான் “தேர் வேர்டிங் புப்” பின்சிறப்பு.எப்படியாவது ஒரு பெரிய “ஆர்மனிஸ்ட்” ஆகிவிடமேண்டுமேன்ற கனவு கொண்டஓர் இளைஞன்.அவனுடைய குடும்பத்திலிருந்து பிரிந்து விடுதியில் தங்கிப்படிக்கவருகின்றான்.ஆனால் விடுதி உரிமையாளர்களோ அவனை கொடுமைப்படுத்துகின்றார்கள்.பள்ளி செல்லும்நேரம் தவிர மற்றைய நேரங்களில் அவனை பணிசெய்ய அமர்த்துகின்றார்கள். கூடவே அடியும்கிடைக்கின்றது.வாழ்க்கையில் வெறுத்துப்போகும் அவனுக்கு அவனைப் போன்றே அங்குகொடுமைப்படுத்தப்படும் இன்னொரு பெண் ஆறுதலாக இருக்கின்றாள்.சோர்ந்து போகும்நேரத்தில் ஆர்மோனியத்தை வாசிக்கச்சொல்லி அவனைஉற்சாகப்படுத்துகின்றாள்.உரிமையாளர்களுக்கு தெரியாமல் உண்பதற்குதின்பண்டங்கள் கொணர்ந்து கொடுக்கின்றாள்.கடைசியில் ஒருநாள் அவளும் தற்கொலைசெய்து செத்துப்போய்விட என்ன செய்வதென்று தெரியாமல் கண்ணீரோடுஉட்கார்ந்திருக்கின்றான் அவன்.
இவ்வளவுதான் கதை.”தேர் வேர்டிங் புப்” திரைப்படத்தில் வருகின்ற விடுதிஉரிமையாளர்களைப் போன்றவர்கள் ஐரோப்பாவில் மாத்திரமல்ல;இந்தியாவிலும்இருக்கின்றார்கள் .சொல்லப்போனால் இங்குதான் தான் அதிகம்.அண்மையில் கூடபுரசைவாக்கம் விடுதியொன்றில் தங்கிப்படிக்கும் கல்லூரி மாணவியோருத்தி விடுதிஉரிமையாளரின் கொடுமைகளை தாங்கமுடியாமல் தன் அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலைசெய்திருக்கின்றாள்.விடுதி உரிமையாளர் ஆளும்கட்சி உறுப்பினர் ஒருவரின் நண்பர்என்பதால் காவல்த்துறையும் அவர்மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்காமல் அவரைவிடுதலை செய்திருக்கின்றது. புரசைவாக்கத்தில் மாத்திரமேன்றல்ல.தமிழ்நாட்டில்பலவிடங்களில் இவ்வாறான வன்முறைகள் நடந்து கொண்டுதானிருக்கின்றன.உலகமெங்குமேவன்முறைகளும்,அடுக்குமுறைகளும் இருந்துகொண்டுதானிருக்கின்றன.வெள்ளையர்கள்கறுப்பினத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும்,உயர்ந்த ஜாதியில் பிறந்தவர்கள்தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்துவதும்,ஆண்கள் பெண்கள் மீது தாக்குதல்நடத்துவதும் நடந்துகொண்டுதானிருக்கின்றன .அதற்கு நல்லதொரு உதாரணம்தான் நிர்பயாகற்பழிப்பு சம்பவம்.உடல்வலு மிக்கவர்கள்,அல்லது அதிகாரத்திலிருப்பவர்கள்,அல்லது மேட்டுக்குடி வர்க்கம் என்று தங்களை எண்ணிக்கொள்பவர்கள் எப்பொழுதும் தங்களைமுன்னிறுத்திக் கொள்ளவே விரும்புகின்றனர். ஒடுக்கப்பட்டவர்கள்எப்பொழுதும் தங்கள் கால்களை நக்கிக்கொண்டு இருக்கவேண்டும் என்பதே அவர்களின்ஒரே குறிக்கோள்.

“Switzerland’s approach to its difficult social and economic problems was no aberration. Between 1854 to 1929, New York and other East Coast cities shipped tens of thousands of orphaned and poor children west on “Orphan Trains,” to live and work on farms in rural America. From 1869 until the late 1960s, a British child migration program known as Home Children sent over 100,000 children from the United Kingdom to Australia, Canada, New Zealand and South Africa. Still, the Swiss practice is shocking and is a far cry from the Switzerland of the beloved “Heidi” children’s books.
Disturbing subject matter notwithstanding, it’s a treat to watch films like “The Foster Boy” and others in the series that I knew so little about beforehand. Having read no reviews, heard no word of mouth, or seen any trailer 10 times over, I go to them with an open mind, and it’s up to me to get my bearings and find my way through the films. Also, it’s satisfying to pick up on and consider the common themes that emerge, the legacy of a divided Germany being a major one.
In this regard, the series, run by Program Coordinator for Film Karin Oehlenschläger, supports the Goethe Institut’s mission. A world-wide organization, the institute promotes knowledge about German culture, society, and politics. There are also films at its beautiful Back Bay location at 170 Beacon Street as well as screenings with other local cultural organizations, colleges and universities. Director Detlef Gericke-Schönhagen regularly teaches film courses as part of the Goethe Institut Boston’s comprehensive German language program.”

நான் மேலே குறிப்பிட்டிருப்பது, இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்னர் ஐரோப்பாவில் எப்படி குழந்தைகள் பண்ணை வேலை செய்வதற்காக விற்கப்பட்டார்கள் என்பதற்கான பி பி சி யின் தரவு.ஐக்கிய இராச்சியத்திலிருந்து மட்டுமே ஒரு லட்சத்துக்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் அவுஸ்ரேலியா,தென்னாபிரிக்கா,கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்கலென்றாள் ஐரோப்பாவின் அன்றைய பொருளாதார நிலை எப்படி இருந்திருக்குமென்று கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்.அவை பற்றி இன்னும் அறிந்துகொள்ள இந்த இணைப்பு. https://www.youtube.com/watch?v=QPM4xIAOL3g

“மக்ஸ்”. பன்னிரண்டு வயதுச் சிறுவன். விடுதியில் தங்கிப் படித்துவரும் அவனை தங்கள் பண்ணையில் வேலைசெய்வதற்காக ஒப்பந்த அடிப்படையில் விலைகொடுத்து வாங்குகிறாள் “போசிகேரின்” என்ற பெண்.ஆனால் அவனுக்கோ அங்கே வேலை செய்வதில் துளிகூட விருப்பமில்லை.அவனுடைய கனவு முழுக்க எப்படியாவது ஒரு ஆர்மனிஸ்ட் ஆகிவிட வேண்டுமென்பதிலேயே இருக்கின்றது.தன்னுடைய வாசிப்பை கேட்க யாருமே வரமாட்டார்களா என்று ஏங்குகிறான்.பன்றிகளுக்கும் கழுதைகளுக்கும் வாசித்துக் காட்டுகின்றான்.சிலசமயங்களில் சுவர்களிடத்தில் தன் ஆர்மனியத்தை வாசித்துக் காட்டி எப்படியிருக்கின்றதேன்று கேட்கின்றான்.
பிரஞ்சு மொழி கற்றுக் கொடுப்பதற்காக பிரான்சிலிருந்து வருகின்றாள் எஸ்தர் என்கின்ற பெண்.மக்ஸ் படிக்கும் பள்ளியில் வேலைக்கு சேருகின்றாள்.எல்லோருடனும் அன்பாகப் பழகும் அவளை முழுப் பள்ளிக்குமே பிடித்துப்போகின்றது.நேரம் கிடைக்கும்பொழுது மக்ஸ் அவளுடன் பேசுகின்றான் அவனுடைய நாகரிகமான பேச்சு எஸ்தருக்கும் பிடித்துப் போகவே அவளும் அவனுடன் சகஜமாக உரையாட ஆரம்பிக்கின்றாள்.பள்ளி மாணவர்கள் முன்னினையில் ஆர்மனியத்தை வாசித்துக் காட்டச் சொல்லி அவனை குதூகலப்படுத்துகின்றாள்.

“பெரிடேலி” ஒரு இளம் பெண் .அவள் ஏற்கனவே இந்த பண்ணை வீட்டில் வேலை செய்தவள்.ஆனால் போசிகேரினின் கொடுமை தாங்காமல் ஒருநாள் சொல்லாமல் கொள்ளாமல் தன் தாய் வீட்டுக்கு போய்விடுகின்றாள். தனக்கு நடந்த கொடுமைகள் பற்றியும், இனிமேல் அந்தவீட்டுக்கு போகமாட்டேன் என்றும் சொல்லுகின்றாள்.ஆனால் பெரிடேலி அந்தவீட்டிலிருந்து தப்பித்துப் போனது தெரிந்து அவளை பிடித்துப்போக போலீஸ்காரர்கள் வந்துவிடுகின்றார்கள். அவள் எவ்வளவோ கெஞ்சியும் போலீஸ்காரர்கள் விடுவதாக இல்லை. பலவந்தமாக இழுத்துச் செல்லுகின்றார்கள்.காரிலிருந்துகொண்டு “அம்மா,அம்மா” என்று கதறும் பெரிடொலியை கண்ணீரோடு பார்த்துக்கொண்டு நிற்கின்றாள் அவளின் தாய்.

போலீஸ்காரர்கள், பெரிடொலியை போசிகரினிடம் ஒப்படைக்கின்றார்கள்.யோசித்துப் பாருங்கள்,கஷ்டம் என்றால் என்னவென்றே அறியாத குழந்தைகள் வாழும் அதே உலகத்தில்தான் பெரிடொலியும் வாழுகின்றாள்.ஆனால் தனக்கு மட்டும் ஏன் இப்படியான வாழ்க்கை என்பதுதான் அவளின் கேள்வி.தன் தாயோடு இருக்கும் போது “சிப்பிங்” விளையடுகின்றாள்,பள்ளித் தோழிகளோடு சிரித்துப் பேசுகின்றாள் ஆடுகின்றாள், பாடுகின்றாள். ஆனால் வறுமை அவளின் வாழ்க்கையை தடாலடியாய் மாற்றிப் போடுகின்றது. பன்றிகளுக்கு உணவு போடுகின்றாள்,காய்கறி நறுக்குகிறாள் ,வீட்டை சுத்தம் செய்கின்றாள் ,சுகவீனமுற்று படுத்துக்கிடக்கும் சீக்குப் பிடித்த கிழவியை பராமரிக்கின்றாள்,வெண்ணை கடைகிறாள்.

இன்னொரு நாள்,மக்ஸ், பெரிடேலி,யாக்கோபு,போசிகேரின் நால்வரும் ஒரு வீட்டுக்கு விருந்துக்குச் செல்கின்றார்கள்.விருந்து தடம்புடலாக நடந்து கொண்டிருக்கின்றது.அப்போது யாக்கோபு எஸ்தரிடம் தவறாக நடந்துகொள்கின்றான்.அந்த இடத்திலேயே மக்ஸ் அவனை புரட்டிப்புரட்டி எடுக்கின்றான்.களோபரம் முடிந்து வீட்டுக்கு வரும் போசிகேரின் தன் கணவனிடம் மக்ஸ் யாக்கொபுவுக்கு அடித்தது பற்றி முறையிடுகின்றாள்.கோபம் கொள்ளும் கணவன் “என் மகனுக்கு அடிக்கும் அளவுக்கு துணிந்துட்டாயா, பரதேசி நாயே”என்று தன் கோபம் தீரும் வரை மக்ஸ்ஷை அடித்துக்கொண்டே இருக்கின்றார்.அடுத்தநாள் காலை முகமெல்லாம் காயங்களோடு பள்ளி வரும் அவனைப்பார்த்து என்ன நடந்ததென்று கேட்கின்றாள் பள்ளி ஆசிரியை.ஒன்றுமில்லையெங்கின்றான் மக்ஸ்.ஆனால் விடாப்பிடியாய் கேட்டுக்கொண்டிருக்கும் அவளிடம் முடிவில் போசிகரின் கணவன் தனக்கு அடித்ததைப் பற்றி சொல்லுகின்றான்.விடயம் பள்ளி அதிபர் வரை போகின்றது. நான் வந்து போசிகரினுடன் பேசவா? என்கின்றார்.பதிலுக்கு, “வேண்டாம்…நீங்கள் வந்து பேசினால் பிரச்சனை இன்னும் பெரிதாகிவிடும், இத்தோடு விட்டுவிடுங்கள் போகப்போக சரியாகிவிடும்” என்கின்றான் மக்ஸ்.

அதற்கு அடுத்தகாட்சியில், பன்றிகளுக்கு இரவு உணவுகளை கொடுத்துவிட்டு தூங்கப் போகிறாள் பெரிடேலி. நடுச்சாமத்தில் அங்கே வரும் யாக்கோபு அவளை கற்பழிக்கின்றான்.அடுத்தநாள் காலையிலேயே எழும்பிவிடும் பெரிடேலி, தண்ணீர்ததொட்டி இருக்கும் இடத்துக்குச் சென்று தன் குறியில் அப்பியிருக்கும் இரத்தத்தை ஈரத்துணியோன்றினால் துடைத்தெடுக்கின்றாள்.அழுதுகொண்டே மறுபடியும் தன் அம்மாவைத் தேடிச் செல்லுகின்றாள்.ஆனால் அதற்கு முன்பே அவளைத்தேடி வந்த போலீஸ்காரன் அங்கே இருக்கின்றான்.அவளின் தாயுடன் அவளை சிறிது நேரம் பேச அனுமதிக்கின்றான்.பின்பு நீ கட்டாயம் வந்துதான் ஆகவேண்டும் என்று கூறி அழைத்துப் போகின்றான்.
காட்சிகள் இப்படியே விரிந்து செல்லுகின்றன.சீக்குப்பிடித்த கிழவி ஒருநாள் இறந்து போகின்றாள்.சில மாதங்கள் கழிந்து பெரிடோலி கர்ப்பமடைகின்றாள்.அவளின் கர்ப்பம் பற்றி போசிகேரினுக்கு தெரியவர…நடந்தது அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லுகின்றாள் அவள்.இதனால் யாக்கோபுவும் அவனின் தாயும் சண்டை போடுகின்றார்கள்.
அதற்கு, அடுத்த காட்சியில் பெரிடொலியை பார்க்கவரும் போசிகேரின், பெரிடொலியிடம் ஒரு மருந்துபாட்டிலை கொடுத்து குடிக்கச் சொல்லுகிறாள்.முதலில் குடிக்க மறுக்கும் அவள் போசிகரினின் வற்புறுத்தலால் வாங்கிக் குடிக்கிறாள்.சிறிது நேரம் கழித்து பொரிடொலியின் அறைக்குவரும் மக்ஸ், இவள் அழுதுகொண்டிருப்பதைப்பார்த்து…என்ன நடந்ததென்று கேட்கின்றான்.

“எனக்குத் தெரியல்ல,ஆனா ஒடம்பு பூரா ஒரே வலியாருக்கு”
என்று தன் அடிவயிற்றை தடவிக்கொண்டே சொல்லுகின்றாள்.பொரிடொலியின் போர்வையை விலக்கிப்பார்க்கும் மக்ஸ்அவளின் பாவாடை முழுவதும் குருதி படிந்திருப்பதைக் கண்டு திடுக்கிடுகின்றான்.

“என்ன நடந்தது கொஞ்சம் தெளிவா சொல்லுறியா?”

“எனக்குத் தெரியல்ல மக்ஸ், போசிகேரின் வந்தா, ஒரு மருந்துபாட்டில தந்து குடின்னு சொன்னா,அப்புறம் என் பாவாடைய வெலக்கி, ஒரு கம்பிய வைச்சு ஏதேதோ செஞ்சா என்ன நடந்ததேன்னே தெரியல்ல”

“வலிக்குதா?”

“ஆமா வலிக்குது,ரொம்ப வலிக்குது”

“கவலப்படாத, கொஞ்ச நேரம் இப்படியே படு.விடிஞ்சா எல்லாம் சரியாயிடும்.”

“ரொம்ப வலிக்குது மக்ஸ்.செத்ருவன் போல இருக்கு.”

“அப்படி சொல்லாத, இன்னைக்கு மட்டும் இந்த வலிய பொறுத்துக்க .நாம இங்க இருக்கவேணாம் நாளைக்கே எங்கேயாவது போயிடுவோம்.”

“எங்க?”

“எங்கயாவது… இந்த வீடு வேணாம், இது நரகம் போயிடுவோம்…எங்கயாவது போய் நல்லாயிருப்போம்.”

“மக்ஸ், எங்க வாழ்க்க மட்டும் ஏன் இப்படியிருக்கு. நாம என்ன பாவம் செஞ்சோம். நாம எதுக்கு பொறந்தோம். நாம வசதியில்லாம பொறந்தமா? அல்ல, கடவுள் நம்ல வசதியில்லாமபடைச்சானா?”

அடுத்தநாள் காலை, பெர்டேலி தற்கொலை செய்து இறந்து விடுகின்றாள்.அவளின் மரணத்துக்கான காரணத்தை விசாரிக்கவரும் மரண விசாரணை அதிகாரிகளிடம் யாக்கோபுவும், அவனின் தாய் பெசிகரினும் பெர்டெலியின் மரணத்துக்கு, அவளுக்கிருந்த கடுமையான வயிற்றுவலிதான் காரணம் என்று பொய் சொல்லுகின்றார்கள்.அந்த நேரத்தில் அங்கே வரும் மக்ஸ் அவர்களைப் பார்த்து “இல்லை இவர்கள் பொய் சொல்லுகின்றார்கள்,இதோ இங்கே நிற்கிறானே, இவன் தான் எல்லாத்துக்கும் காரணம்.இவனுடைய கொட்டை அரிப்புத்தான் அவளை கொன்றுபோட்டது,ஏன்டா வேசிமவனே, பெரிடெலிக்கு இருந்தது தானே உன் அம்மாவுக்கும் இருக்கு உனக்கு உன் கொட்டை அரிச்சா அவளோடு போய் படுத்துக்க வேண்டியது தானே” என்று கத்துகின்றான்.கோபம் கொள்ளும் யாக்கோபு, அவனை அடிக்கத் துரத்துகின்றான்.முடிவில் பெர்டெலியின் பிணத்தை மட்டும் எடுத்துக்கொண்டு மரண அதிகாரிகள் சென்றுவிடுகின்றனர்.

இதுதான் யாதர்த்தம்,இதுதான் கலை,இதுதான் உன்னதம்.ஆனால் தமிழ் சினிமாவில் இப்படியா நடக்கிறது?ஒரு உதாரணம் சொல்லுகிறேன்.துப்பாக்கி படத்தில் இப்படியொரு வசனம் வருகின்றது.
“எங்க இராணுவத்த சேர்ந்த ஒருத்தன… பாகிஸ்தான் இராணுவம் பிடிச்சிருச்சு.அவனோட கண்ணு ரெண்டையும் தோண்டியெடுத்து,குதம் வழியா உள்ள ஒரு பாட்டில அனுப்பியிருக்காங்க .பாவம் ஏழாம் நாள் காலையில அவனோட பாடியத்தான் எங்களால கண்டுபிடிக்க முடிஞ்ச்சு, டேய்…நீங்கெல்லாம் இங்க நிம்மதியா வாழனும்ன்னுதாண்டா நாமெல்லாம் அங்க தெனம்,தெனம் செத்துக்கிட்டு இருக்கோம்.”

இதைத்தான் நான் தமிழ் சினிமாவின் அபத்தம் என்கிறேன்.இந்திய இராணுவம் ஈழத்திலும்,காஸ்மீரிலும் என்ன செய்தது, என்ன செய்துகொண்டிருக்கின்றது என்பது பற்றி முருகதாஸ் அறியாதது அல்ல.ஆனால் இந்திய ராணுவம் தன்னுடைய சொந்தநாட்டு இராணுவம் என்பதால் “அவர்களை” எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளியிருக்கின்றார் பாருங்கள்.கலைஞனேன்பவனுக்கு சத்தியத்தை மட்டுமே கலையாக உருவாக்கத் தெரிந்திருக்க வேண்டும்.அவன் உருவாக்கும் படைப்பில் “குறைந்தபட்ச” யாதார்த்தமாவது தெரியவேண்டும்.தேசப்பற்றுக்கும் சத்தியத்துக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை அவன் உணர்ந்தவனாக இருக்க வேண்டும் “பிரசன்ன விதானகே” என்பவனின் படைப்பை சிங்கள ரசிகர்கள் மாத்திரமல்லாமல் புலம்பெயர் தமிழ் ரசிகர்கள் கூட ஏற்றுக்கொள்ள ஆரம்பித்திருக்கின்றார்கள்.ஏனென்றால் அவனுடைய படைப்பில் ஒடுக்கப்பட்டவர்களின் வலி இருக்கின்றது.சிறுபான்மையினரின் கண்ணீர் இருக்கின்றது,முக்கியமாக நாமெல்லோரும் எதிர் பார்க்கும் சத்தியம் இருக்கின்றது.இந்த சத்தியம் தமிழ் சினிமாவில் இருக்கின்றதா?
இன்னோர் உதாரணம் சொல்லுகின்றேன்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் “காஸ்மீர்” என்கின்ற புத்தகத்தை வாசித்தேன்.புத்தகத்தை எழுதியவர் ஒரு வடநாட்டவர்.தானும் தன்னுடைய நண்பர் ஒருவரும் காஸ்மீருக்கு பயணப்பட்டது பற்றியும் அங்கு நிலவும் உள்நாட்டு போர் பற்றியும் எழுதியிருந்தார்.அதிலிருந்து ஒரு சிறு பகுதி.

“நானும் என்னுடைய நண்பர் அபிசேக்கும் இன்று காஸ்மீரின் தென்பகுதிக்கு சென்றுவரலாம் என்று முடிவெடுத்திருந்தோம் . காஸ்மீரின் தென்பகுதி மலைகள் சூழ்ந்த ஒரு சிறு கிராமம் .உயர் பாதுகாப்பு வலயம் என்று இந்திய இராணுவத்தினாரால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .அரைமணிநேர விசாரணைக்குப் பிறகு கிராமத்தினுள் நுழைய அனுமதித்தார்கள்.நாங்கள் சென்ற நேரம் மாலை நேரம் என்றபடியால் கிராமத்தில் ஊடரங்கு சட்டம் அமுலிலிருந்தது.அன்று எப்படியும் கிராமத்து தலைவரை சந்தித்து அவருடன் உரையாடிவிட வேண்டும் என்கின்ற எண்ணம் எங்களிருவருக்குள்ளும் இருந்தது. ஆனால் சூழ்நிலை அதற்கு இடம் கொடுக்கவில்லை.மனதைத் தேற்றிக்கொண்டு தூங்கிப்போனோம்.மறுநாள் விடிந்தது .வீதிகளில் ஓரிருவரைத் தவிர வேறொருவருமில்லை.விடயம் அறிந்தபோது இளம்பெண்ணின் பிணம் ஒன்று ஆற்றில் மிதப்பதாக கேள்விப்பட்டோம் .இந்த ஊரில் இதொன்றும் புதிதல்ல. அருந்துவதற்கு தேநீர் தாருங்கள் என்று சொல்லிக்கொண்டு வீடுகளுக்குள் நுழையும் இராணுவத்தினர் எந்தெந்த வீடுகளில் இளம்பெண்கள் இருக்கின்றார்களேன்று குறிப்பெடுத்துவைத்துவிட்டு இரவானதும் அந்தந்த வீடுகளுக்குள் நுழைந்து விடுவார்கள். தூங்கிக் கொண்டிருக்கும் இளம் பெண்களை இழுத்துசென்று மாறிமாறி ஒருவர்பின் ஒருவராக கற்பழித்துவிட்டு விடயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக அவர்களின் கழுத்தை நெரித்து கொலைசெய்து ஆற்றில் வீசி விடுவார்கள்.தட்டிக் கேட்பவர்களை நாய்களைப் போல் சுட்டுத்தள்ளுவார்கள்.”

இந்த உண்மை தமிழ் சினிமாவில் இருக்கின்றதா.உண்மையாக சொல்லவேண்டுமென்றால் மனசாட்சியை புறம்தள்ளிவிட்டு படம் எடுப்பவர்கள்தான் தமிழ்நாட்டில் அதிகம்.சத்தியத்தை சத்தியமாகவே தோற்றுவிப்பதற்கு தமிழ்நாட்டு இயக்குனர்கள் தயாராக இல்லை.மாறாக அவர்கள் ஒன்றுக்கும் உதவாத வணிக சினிமாக்களை எடுப்பதிலேயே குறியாக இருக்கின்றார்கள்.
அடுத்தது இந்தப்படத்தின் ஒளிப்பதிவு.அதகளம். இந்தப்படத்தின் ஒளிப்பதிவு நுணுக்கங்களைப் பற்றி நீங்கள் புரிந்துகொள்ள வேண்டுமாயின் இந்த காட்சியை மட்டும் பாருங்கள்.https://www.youtube.com/watch?v=d14GyoGSsWI. வடிவம் கௌதம சித்தாத்தன்.போதி மரத்தின் கீழிருந்து கண்களை மூடிக்கொண்டு அவன் தியானம் செய்யும் அழகே ஒரு அற்புதமான காட்சி.பார்த்துக்கொண்டே இருக்கலாம்.அப்படியொரு அமைதி.”தேர் வேர்டிங்” புப் திரைப்படத்தின் ஒளிப்பதிவும் அப்படித்தான் இருக்கின்றது.புத்தனே நேரில் வந்து என் கையைப் பிடித்துக்கொண்டு மேகங்களில் நடந்துபோவதைப்போல் உணர்ந்தேன்.அந்தப் பாதை மிக நீண்டதாக இருந்தது.ஒரு சொப்பனம் போல்.நதியின் மீது நடப்பதைப்போல்.பூக்களின் இதழ்கள் மீது தூங்குவதைப்போல்.

நான் மேலே “தீவு” என்கிற திரைப்படத்தைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன் அல்லவா… அந்தப்படத்தில் ஒரு காட்சி.படத்தின் நாயகி சீகின் ஏரியொன்றில் படகுவீடுகளை கட்டி அதை வாடகைக்கு விட்டு பிழைப்பு நடத்தி வருகின்றாள்.அங்கே வரும் உல்லாசிகளுக்கு சமயங்களில் அவளே வேசியாகவும் இருந்து இன்பம் கொடுக்கிறாள்.ஒருதடவை உல்லாசியொருவன் சீகினுடன் இன்பம் அனுபவித்துவிட்டு பணத்தைத் தூக்கி அவளின் முகத்தில் எறிகின்றான்.அது தவறி தண்ணீரில் விழுந்துவிடுகின்றது.கோபம் கொள்ளும் சீகின், அவனை பழிவாங்கத் துடிக்கின்றாள்.படகு வீட்டின் உள்ளே ஒரு துவாரம் இருக்கின்றது.மலம்,சலம் கழிக்கவிரும்புகின்றவர்கள் அந்த துவாரத்தின் மூடியை அகற்றி விட்டுத்தான் போக வேண்டும். சீகினின் முகத்தில் பணத்தை எறிந்தவன் மலம் கழிப்பதற்க்காக படகு வீட்டின் விளிம்பில் நின்று காற்சட்டையை கழற்றிவிட்டு மலம் கழிக்கின்றான்.அப்பொழுது கமெரா ஏரியின் உள்ளே இருக்கின்றது.அவனின் மலம் ஏரியின் உள்ளே வந்து விழுவது அப்படியே காட்டப்படுகின்றது.காட்சியில் காமெராவை மட்டும் ஏரிக்கு அடியில் வைத்து படமாக்கவில்லை.கூடவே ஒளிப்பதிவாளரும் இருந்திருக்கின்றார்.தமிழ் சினிமாவில் யாராவது இப்படி செய்வார்களா ?

இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவு எப்படி இருக்கின்றது என்பதற்கு அந்தப் படத்தின் ஆரம்பக் காட்சியே இன்னோர் உதாரணம்.பரந்து விரிந்த ஏரியின் நடுவே ஐந்தாறு படகு வீடுகள்.அந்த காட்சியை பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது ஒரு ஏரியின் நடுவே அமர்ந்து ஐந்தாறு புத்தர்கள் தியானம் செய்துகொண்டிருப்பதைப் போல் உணர்ந்தேன். அவை சர்சியஸ் ஓவியங்களைப் போலிருந்தன.

படத்தின் இன்னொரு பலம் அதன் இசை.ஒரு திரைப்படத்தின் இசையென்பது கம்பியில் ஓடும் மின்சாரத்தைப் போன்றது.இருக்கவேண்டும்,ஆனால் படத்தைப்பார்க்கும் போது இந்தப்படத்தில் இசையே இல்லையே என்பது போலும் இருக்கவேண்டும்.அதுவே இசைநுட்பம்.எவன் ஒருவன் இந்த இசை நுட்பத்தைப் பற்றி அறிந்துகொள்கின்றானோ அவனே நல்ல இசையமைப்பாளன்.ஒரு திரைப்படத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கும்போது அதில்வரும் இசை நம்மை அப்படியே கட்டிப்போட வேண்டும்,உலகத்தை மறக்கடிக்க வேண்டும்,நம்மை கடவுளோடு பேசவைக்கவேண்டும் ,ஆனால் தமிழ்சினிமாவின் இசை அப்படியாஇருக்கின்றது.இசையென்கின்ற பெயரில் படம்முழுவதும் ஒரே இரைச்சல்.சில இடங்களில்இசையமைப்பாளர்களின் அபாணவாயு சத்தம் மட்டுமே கேட்கிறது.

கலையென்கின்ற பெயரில் அபத்தங்களை மாத்திரமே படமாக்கிக்கொண்டு திரியும் தமிழ்நாட்டு இயக்குனர்களுக்கு இந்த உலக சினிமாவில் இருக்கின்ற நுண்நுட்பம் விளங்குமா? யாராவது ஒருவர் நான் பாலு மகேந்திராவைப் போல் ஒளிப்பதிவு செய்யப்போகின்றேன் என்றால், பாலு மகேந்திராவின் படங்களை மாத்திரம் பார்த்துக்கொண்டிருப்பதில் பிரயோசனமில்லை.மாறாக பாலு மகேந்திராவுக்கு இருந்த அதே ரசணையுணர்வு அவருக்கும் இருக்கவேண்டும்.இருவருக்குள்ளும் இருக்கும் சிந்திக்குமதிறன் ஒத்துப்போக வேண்டும்.அப்போது மாத்திரமே அவரால் பாலுமகேந்திராவைப் போன்று ஒரு சிறந்த கலைப் படைப்பை உருவாக்க முடியும்.நம்மாட்களுக்கு முதலில் ரசணையுணர்வு என்கின்ற வஸ்து இருக்கின்றதா என்பதே கேள்விக்குறி.நாயகிகளின் தொப்புளை சுற்றி ஒரு வட்டம், தொடையைச் சுற்றி ஒரு வட்டம் இதிலேயே அவர்களின் “சர்வதேசத்தரத்துக்கு” இணையான ஒளிப்பதிவு வேளையில் பாதி போய்விடுகின்றது, பிறகெப்படி நம்மாட்களால் ஒரு நல்ல கலை நேர்த்தியுள்ள படத்தை எடுக்க முடியும்?

ஆக்காட்டி இதழில் வெளியான எனது கட்டுரை.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s