ஒழுங்கமைப்பின் பித்தலாட்டம் அல்லது அவற்றின் சதியாட்டம்.

இருபது/பத்து அன்று, பாரிஸில் நடைபெற்ற எட்டாவது சங்கிலியன் குறும்பட நிகழ்விற்கு தோழர் கருணாகரனுடன் சென்றிருந்தேன்.விழாவில் வழக்கம்போலவே நிறைய இசகுபிசகுகள்.

ஈழத்திலிருந்து பெயம்பெயர்ந்து வாழும் கலைஞர்களை அடையாளம் கண்டு அவர்களை ஊக்கிவித்து அவர்களின் திறமைகளை உலகமெங்கும் பரப்புவதற்கு பாரிஸ்,லண்டன்,கனடா போன்ற நாடுகளில் விழாக்கள் நடத்தப்படுகின்றன.அவை பெரும்பாலும்  முதலாளித்துவவர்கத்தினாலேயே நடத்தப்படுகின்றன. இதுவரை குறைந்தது நான்கு அல்லது ஐந்து குறும்பட விழாக்களுக்கு சென்றிருப்பேன்.அவையாவுமே,  “இப்படியான விழாக்களை நடத்துவதற்குப் பதிலாக நடாத்தாமலேயே இருந்திருக்கலாம்” என்கின்ற ஒருவித சலிப்பு மனநிலையையே எனக்கு அளித்திருக்கின்றது.

1383555_10151669588861615_1402409226_n

அன்றும் அப்படித்தான்.நிறைய குழறுபடிகள்.பொதுவாக இந்தமாதிரியான விழாக்களை நடத்துவதற்கு முன்னர்… நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்கள், எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று ஒத்திகை பார்த்த பின்னரே நிகழ்ச்சியை ஆரம்பிப்பார்கள்.ஆனால் இந்த   நிகழ்ச்சியை பொறுத்தவரை நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களுக்கு ஒத்திகை என்கின்ற வார்த்தையே தெரியாதுபோலும்.மண்டபத்தில் பார்வையாளர்கள் வந்து உட்கார்ந்த பிறகுதான் எல்லாம் சரியாக இருக்கின்றதா என்று கணினியை போட்டு நோண்டிக்கொண்டிருந்தார்கள். அதற்கே ஒரு மணித்தியாலம் சென்றிருக்கும்.

சமீபத்தில் சாரு விமர்சகர் வட்டம், ஒரு சிறுகதை போட்டியை இணையம் வாயிலாக நடத்தியிருந்தது.அதிலிருந்த நேர்த்தியும், பக்கசார்பில்லாத நடுநிலைவாதமும்,சிறுகதை போட்டிக்காக அவர்கள் விதித்த நிபந்தனைகளும் என்னை ஆச்சர்யப்படவைத்தன. இதில் என்னை மிகவும் கவர்ந்தது போட்டியை நடத்தியவர்களின் திறமை.ஒரு உதாரணம் சொல்லுகின்றேன். சிறுகதையை அனுப்பவேண்டிய கடைசி திகதி ஏப்ரல் முதலாம் திகதி.அதற்கு பிறகு வந்திருந்த அத்தனை சிறுகதைககளும்  போட்டி ஒழுங்கமைப்பாளர்களினால் நிராகரிக்கப்பட்டன.போட்டி நடந்து முடிந்த பின்னர், “இன்னும் ஒரு இரண்டுநாட்கள் கொடுத்திருக்கலாமே, அப்படியென்ன புதுவிதமான கட்டுப்பாடு, போட்டியென்று வரும்போது இப்படிப்பட்ட நிகழ்வுகள் நடப்பது சாத்தியம்தானே” என்கின்ற விமர்சனம் அவர்கள்மீது முன்வைக்கப்பட்டது. அதற்கு அவர்கள்,  இல்லை நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. இவைகள்தான் போட்டி நிபந்தனைகள் என்று கூறிவிட்டு,முடிவில் போட்டி நிபந்தனைகளை தளர்த்துவதோ, அல்லது நிபந்தனைகளை குறைப்பதோ… ஏற்கனவே போட்டிக்கு சிறுகதையை அனுப்பிய போட்டியாளர்களுக்கு நாம் செய்யும் துரோகம் போலாகிவிடும்.ஆகவே நாங்கள் செய்தது சரிதான் என்கின்ற உண்மையான, நேர்மையான, சாத்வீகமான பதிலை கூறுகின்றார்கள்.

1116085_10201750041982649_1768788101_o

பாருங்கள் வெறும் இணையம் வாயிலாக நடந்த போட்டியோன்றையே இவ்வளவு சிறப்பாக செய்கின்றார்கள் என்றால், மண்டபம் எடுத்து, பார்வையாளர்களை கூட்டிவந்து ஐந்தாயிரம் யூரோக்கள் பணப்பரிசு கொடுத்து போட்டி நடத்துவதற்கு எவ்வளவு சிரத்தை எடுக்க வேண்டும்.ஆரம்பம் முதல் கடைசி வரை எல்லாமே தவறாகவேத்தான் நடந்துகொண்டிருந்தது. ஒரு இடத்தில் கூட ஒழுங்கமைப்பாளர்களின் கடமையை காணக்கிடைக்கவில்லை.எல்லாவற்றையும் கடமைக்காக செய்தது போலிருந்தது.ஒருவேளை இவர்களுக்கு சிரத்தை என்றால் என்னவென்று தெரியாது போலும்.

இதற்கு முதல்தடவை இடம்பெற்ற போட்டி ஒன்றிலும் இப்படித்தான்.பரிசு கொடுப்பதற்காக ஒரு பெண்ணை அழைந்திருந்தார்கள்.பாரிசில் வணிகம் செய்யும் முதலாளிவர்க்கத்தை சேர்ந்தவராக இருக்கலாம்.வயது முப்பது இருக்கும்.பரிசு வாங்கப்போனவர் அவரைப்பார்த்து புன்னகைக்க,இவரோ முகத்திலடித்தால்போல் ம்ம்ம் என்று தலையை ஆட்டினார்.எப்படியிருந்திருக்கும் அந்தக் கலைஞனுக்கு.எதுவும் சொல்லாமல் அமைதியாக பரிசை வாங்கிக்கொண்டு தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அந்த பெண்ணின் மீதும் தவறில்லை.பார்த்து சிரித்தாலே அவர்களின் கற்பு போய்விடும் என்கின்ற நிலையிருந்தால் மட்டும்.

போட்டியென்று வரும்போது உண்மையான படைப்புகள் ,மற்றும் கலைஞர்கள் மட்டுமே கௌரவப்படுத்தப்பட வேண்டும்.இரக்கமோ ,அல்லது சகிப்புத்தன்மையோ நடுவர்கள் என்கின்றவர்களுக்கு இருக்கவே கூடாது.அப்படியிருக்கும் பட்சத்தில் உண்மையான படைப்புகளையும்,கலைஞர்களையும் அடையாளம் கண்டுகொள்வது சிரமம்.ஏன் சொல்லுகின்றேன் என்றால்,அன்று என்னை அப்படியே நிலைகுலைய வைத்த இன்னொரு விஷயம் அதுதான் .போட்டியில் முதல்தடவையாக பங்குபற்றுகின்றார் என்கின்ற ஒரே காரணத்துக்காக அவர் இயக்கிய ஒரு மொக்கைப் படத்துக்கு முதலாம் பரிசு கொடுத்தது.

மொத்தத்தில் புலம்பெயர் குறும்பட நிகழ்வு என்பது என்னளவில் சிறுபிள்ளை விளையாட்டாகவே தோன்றுகின்றது.எதிலும் நேர்த்தியில்லை.நடத்தவேண்டும் என்பதற்காக மட்டுமே நடத்துகின்றார்கள்.நடத்துங்கள்,நடத்துங்கள் காலம்காலமாக நாம் இதைத்தானே செய்துகொண்டிருக்கின்றோம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.