அதோ! அங்கே மண்டியிட்டு இருக்கவைக்கப்பட்டிருக்கும் பெண்ணின் பெயர் ரிசானா.இலங்கையை சேர்ந்தவள்.ஐந்து வருடங்களுக்கு முன்னர்,பணிப்பெண்ணாக வேலைதேடி சவூதி வந்தவிடத்தில்,பச்சிளம் குழந்தை ஒன்றை கொலை செய்த குற்றத்திற்காக மரண தண்டனைக்கு ஆளாக்கப்பட்டவள்.

தான்  குழந்தையை வேண்டுமென்றே கொலை செய்யவில்லைஎன்றும்,புட்டியில் பால் கொடுக்கும்பொழுது தவறுதலாக இறந்துவிட்டது என்றும் அவள் எவ்வளவோ சொல்லியும்,ரிசானாவின் எஜமானி “அல்குந்த் அமினா”கேட்பதாகத் தெரியவில்லை.ரிசானாவிற்கு மரணதண்டனை கொடுத்தே ஆகவேண்டுமென்று ஒன்றைக்காலில் நின்றாள்.ஐந்து வருடங்கள் சென்றும், தன்னால் தான் பெற்ற குழந்தையை மறக்கமுடியாமல் இருக்கிறதென்றும்,குழந்தையை பறிகொடுத்த தினத்திலிருந்து இன்றுவரை பெரும் சோகத்தோடு எதிலும் பிடிப்பற்ற வாழ்க்கையுடனே வாழ்ந்து வருவதாகவும் நீதிமன்றத்தில் அழுது புலம்பினாள்.

இதோ இன்று ரிசானாவிற்கு நிறைவேற்றப்படும் மரணதண்டனையை தான் பார்த்தே ஆகவேண்டுமென்று கூறி மைதானத்திற்கு வேறு வந்திருக்கின்றாள்.ஓங்கிய வாளிற்கு ரிசானாவின் தலை துண்டாகிப்போக அதைப்பார்த்து அவள், “அல்லாவே உனக்கு கோடி நன்றிகள்” என்று உரக்க சத்தமிட்டாள்.

பெருத்த ஆறுதலோடு வீட்டுக்கு வந்த ஆமினாவை அவளுடைய ஐந்து பிள்ளைகளும் சூழ்ந்து கொள்ள,அவள் அவர்களை சுவாரசியமில்லாமல் தள்ளி விட்டாள்.”அம்மா எப்பொழுதும் இப்படித்தான்”என்று சலித்துக்கொண்ட பிள்ளைகள் தாங்கள் விளையாடிக்கொண்டிருந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடுவதில் ஆர்வம் காட்டின.குழந்தைகளின் இந்த போக்கை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ஆமினா தன் கணவர் இருந்த அறைக்குள் சென்று அறையை தாழிட்டுக்கொண்டாள்.
தன்னைக்கண்டதும் பல்லிளித்த கணவனைப்பார்த்து,”விட்ட இடத்திலிருந்து தொடங்கு என்றாள்”.

“ஆங்….நான் எதில் விட்டேன் என்று தெரியவில்லையே”

“இது கூடவா மறந்து விட்டது….கடைசியாக உன் நாக்கினால் ஏதோ செய்துகொண்டிருந்தாயே”.

“ம்ம்ம்….அதிலிருந்தே ஆரம்பிக்கவா,அல்லது ?”

“இல்லையில்லை.நீ அதிலிருந்தே ஆரம்பி.எனக்கு அதுதான் பிடித்திருக்கின்றது”என்றாள் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s