முகாமிலிருந்து நேற்றுத்தான் அக்காவின் வீட்டுக்கு திரும்பியிருந்தேன்.வந்தவுடனே இப்பதிவை எழுதுகின்றேன்.வாசிப்பு பழக்கம் எப்பொழுது எனக்கு ஆரம்பமாகியது என்று சரியாகத்தெரியவில்லை.பத்து வயதில் என்று நிலைக்கின்றேன்.அப்போதெல்லாம் ராணி காமிக்ஸ்தான்.மாயாவி கதைகள் என்றால் உயிர்.புத்தகத்தை வாங்கி அதன் அட்டை மணத்தை வாசணை பிடித்துபார்ப்பதே ஒரு அலாதியான அனுபவம்.மாமா நூலக அதிகாரி என்பதால் அவருடைய வீட்டில் எப்போதுமே புத்தகங்கள் இறைந்து கிடக்கும்.பெரும்பாலும் கட்டுரைப்புத்தகங்கள் தான்.எத்தனையோ புத்தகங்களை அவரிடமிருந்து கடன் வாங்கி புரிந்தும்,புரியாமலும்வாசித்திருக்கின்றேன்.சுஜாதா,எஸ்.ராமகிருஸ்ணன்,சாருநிவேதிதா,அம்பை,அ.முத்துலிங்கம்,ஷோபாசக்தி,எஸ்.பொ,போன்றவர்களின் புத்தகங்களை அதிகமாக வாசித்திருந்தாலும் சுஜாதா என்னை கவர்ந்த எழுத்தாளர்களில் மிகமுக்கியமானவர்.

சமீப காலமாக நவீன கவிதைகள் சிலவற்றை எழுதி வருகின்றேன்.படித்துப்பாருங்கள்.

துப்பாக்கிச் சிலுவை .

சதைகளைத் தின்னும்
அந்த கொடிய அரக்கன்
கனவுகள் நிரம்பிவழியும் நம் கண்களை மூடிக்கட்டியிருக்கின்றான்.
நாம் ஏதுமாறியாத குழந்தைகளாயிருந்தாலும்,
எம்பின்னே துப்பாக்கிகளின் நீண்ட
கொடிய விரல்கள்.
எட்டுமாதமான எம் கனவுகள்
இறந்த குழந்தைகளாய் பிறந்துகொண்டிருக்கின்றன.
இருண்ட கல்லறைகளின் கீழே
வெகுவாக புதைக்கப்பட்ட எம் நிலங்கள் முற்றிலுமாய் மூடிமறைக்கப்பட்டுவிடும்.
பின்பு மூடிமறைக்கப்பட்ட பெருவெளிஎங்கும் அரக்கர்களின் கொக்கரிப்புகள் காதையடைக்கும்.
யுத்தம் ஆசையாசையாய் மென்று துப்பிய தெருவெங்கும் அதன் வெடுக்கு நாற்றம்.
குழந்தை பிறந்தபொழுது அதற்கு
யாரும் முதலில் யுத்தம் என்று பெயர் வைக்கவில்லை.அதன் வெளித்தோலில்கூட போர் வாசணை மணக்கவில்லை.மாறாக
குழந்தையின் உட்புறமெங்கும்
நஞ்சூட்டப்பட்ட யுத்ததினுசுகள்
வளர்ந்துகொண்டேயிருந்தன.
அல்லது ஏதோ ஒன்று அதை வளர்ப்பித்துக்கொண்டேயிருந்தது.
அப்பொழுதுகூட நாம் ஏதுமறியாத குழந்தைகளாய்த்தான் இருந்தோம்.
வானத்தின் அகண்ட நிலப்பரப்பெங்கும் அரக்கர்களின் கூச்சல்கள் எதிரொலிக்க,
மேகங்கள் வழிமொழிந்துநகர்ந்தன.
துருப்பிடித்த துகள்கள் எடுத்து
ஆணவம் தன்வாயில் போடுகிறது.
புலியில்லா காட்டுக்குள் நுழைந்த
நரிபோல் வெகுண்டு சினத்து பின்
கர்வமாய் புன்னகைக்கின்றது.
யெருசெலமை வெற்றிகொண்ட
களிப்பில் நவீன யூதர்கள் தாண்டவமாட,,,,,,
ஆடுகளெல்லாம் நவீன யேசுக்கள்
என பெயரிடப்பட்டு துப்பாக்கிசிலுவையில் அறையப்பட
ஏற்கனவே சப்பப்பட்டு,துப்பப்பட்ட மான்களெல்லாம்…மறுபடியும்,
மறுபடியும் ஆண்குறிகளால்
அறையப்படுகின்றது.
கடைசியில் ஏதும் மிச்சமில்லாமல்
போக நாம் அகண்ட வான்பரப்பை
பரிதாபமாய் பார்க்கின்றோம்.

மௌனம் எப்பொழுதும் விழித்திருக்கும்.

மௌனத்தை விரும்பும்
என் கூர்வாள்கள்
பெரும் கூச்சலோடு உறங்கிக்கொண்டிருகின்றன.
ஒவ்வாத சத்தங்களும்,போலி
மனித சூத்திரங்களும் அவற்றை
எழுப்பிவிட பார்க்கின்றன.
சிலசமயம் பெரும்கோபத்தோடு
விழித்து பார்கிறது.
இரத்தம் பார்க்க துடிக்கின்றது.
ஆனாலும்,
எதிர்த்த வாளின் உருவம் கண்டு
பேடித்தனமாய் ஒழிகின்றது.
ஆம் நியாயத்திற்கு நான்கு.
அநியாயத்திற்கு ஐந்து.
அப்படியெனில் எதன் உருவம்
பெரிது?

உயிரற்ற பதாதைகள்.

இறுதி என்று நினைத்துத்தான்
ஒவ்வொரு பதாதைகளையும் தாங்குகின்றேன்.
இறுதியில் எதற்கும் முடிவில்லை
என்கின்ற தத்துவத்தை அது விளக்கிச்செல்கின்றது.
ஒட்டப்பட்ட பதாதைகளின் எதிரில்
நின்று முதலாளித்துவத்தின்
தங்கப்பற்க்கள் புன்னகைக்கின்றன.
பதில்களை ஒளித்துவைத்துவிட்டு
கேள்விகள் தங்கள் கண்களை தாமே மூடிக்கட்டிக்கொண்டு தேடுகின்றன.
திருட்டுதிருமணம் செய்துகொண்ட
அதிகாரம் தன் தீட்டுத்துணியை
அகங்காரமாய் முற்றக்கொடியில்
காயப்போடுகின்றது.
அதிகாரத்தின் வாயில் உமிழ்ந்த
உமிழ்நீரில் கனவுப்பெட்டலம்
மிதந்து மிதந்து பின்
நிலாவெளிக்கிணறில் தவறி
விழுகின்றது .
குழிதோண்டியது பிரதிநிதிகள்
என்றால்,,,உயிரற்ற பதாதைகள்
எதிரிகளை தின்று விடுமா?

 

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s