புரட்சி இணைய வானொலியில் ஒரு நிகழ்ச்சிக்காக சமீபத்தில் கலந்து கொண்டேன் .பிற்பாடு ஏன்தான் கலந்துகொண்டேன் என்று யோசிக்கும் அளவிற்கு வைத்துவிட்டார்கள் சில நேயர்கள் .நடந்தது இதுதான் .அன்றைய தினம் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்த குறிப்பிட்ட பெண், கண்ணன் என்கின்ற குறிப்பிட்ட நேயரிடம் உங்களுக்கு பிடித்த உணவு எது என்று கேட்டிருந்தார் .அதற்கு அவர் எனக்கு மிக பிடித்த உணவு முருங்கைக்காயும் ,நண்டும். பிரத்தியோகமாக முருங்கைகாய்தான்   பிடிக்கும் என்று பதில் கூறினார் .எவ்வளவு ஆபாசமான, வக்கிரமான உரையாடல் என்று பார்த்தீர்களா. தெருவில் நண்பர்களோடு அடிக்கும் லூட்டியை ஒரு மிகப்பெரிய கலையகத்தில் கொணர்ந்து கொட்டியிருகின்றார் அந்த நேயர் .நெருங்கி பழகிய தோழியிடம் கூட இப்படி பேசமாட்டோம் . என்ன தைரியத்தில் அப்படி பேசினார் என்று தெரியவில்லை .முருங்கைக்காய் என்பது ஒரு ஆணின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிடக்கூடிய உணவுவகை .நண்டு ஒரு பெண்ணின் பாலியல் உணர்ச்சியை தூண்டிவிடக்கூடிய உணவுவகை .ஆனால் பொதுவெளி என்று கூட பார்க்காமல், நாகரீகமே இல்லாமல் இப்படியான கருத்துக்களை முன்வைப்பவர்களை என்னவென்று சொல்வது .பச்சை அயோக்கியத்தனம் இல்லையா இது .மிகுந்த கோபத்துடன் அந்த பெண்ணிற்கு இது பற்றி அறிவுறுத்தினேன் .உண்மை அவருக்கு தெரிந்திருந்தாலும் எதற்கு வீண் வாக்குவாதம் என்று நினைத்தாரோ என்னோவோ… சரி விட்டுவிடுங்கள் பெரிது பண்ணவேண்டாம் என்று கூறிவிட்டார் .

அத்தோடு விட்டிருந்தால் பரவாயில்லை .அடுத்து வந்த நேயர்கள் சிலர் நான் ஏதோ கண்ணனை நடுவீதியில் வைத்து மானபங்கம் செய்துவிட்டதாக எண்ணிக்கொண்டு, மரியாதையாக கண்ணனிடம் மன்னிப்புக் கேள் என்று அறசீற்றத்துடன் பொங்க ஆரம்பித்துவிட்டார்கள்  .ஒரு கலையகத்தில் வைத்து ஒரு பெண்ணுடன் ஆநாகரிகமாக பேசியது அவர்களுக்கு தவறென்று தெரியவில்லை .அதற்கு அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறவில்லை .மாறாக அந்தமாதிரியான அயோக்கியத்தனத்தை தட்டிக் கேட்டவனிடம் சொல்லுகின்றார்கள் அவரை மன்னிப்பு கேட்க சொல்லுங்கள் என்று .எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம் நாம் .பெரிதாக அறிமுகமில்லாத ஒரு பெண்ணிடம் மு.காய் பிடிக்கும் என்று சொல்லுவது அவர்களிற்கு சாதாரணமான விசயமாம் .எதுவையா சாதாரணமான விஷயம் .உங்கள் தங்கையிடம் அவ்வளவாக நெருக்கமில்லாத ஒருவர் எனக்கு மு .காய் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சொல்லியிருந்தால் அவனை  நீங்கள் சும்மா விட்டு  விடுவீர்களா .அதையும் சாதாரண தொனியில் சொல்லியிருந்தால் பரவாயில்லை .ஒருவித ஆணாதிக்க வெறியுடனும் ,வக்கிர புத்தியுடனும் சொல்லியிருந்தால் . கொட்டையை நசுக்கியிருக்க மாட்டீர்கள் .

ஒரு கருத்தினை சொல்லுவது முக்கியமல்ல .அதை எந்த தொனியில் சொல்லுகின்றோம் என்பதுதான் முக்கியம் .ஏனெனில் நாம் பாவிக்கும் தொனி சிலேநேரங்களில்  நாம் சொல்லவந்த கருத்தினையே மாற்றிவிடும்.

இன்னொருவர் கண்ணன் அப்படி கூறியது அவருடைய கருந்து  சுகந்திரம் .அதில் தலையிட நான் யாரென்று கேட்கின்றார் .நான் தெரியாமல் தான் கேட்கின்றேன் .கருத்து சுகந்திரம் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணத்தினை கொஞ்சம் கூற முடியுமா? கருத்து சுகந்திரம் என்றால் என்னவென்றே தெரியாத சிலர் கருத்துசுகந்திரத்தை பற்றி பேசுகின்றார்கள் .அப்சல் குருவுக்கு காங்கிரஸ் மரணதண்டனை கொடுத்தது தவறு என்று சொல்லுங்கள் .அது உங்களுடைய கருத்து சுகந்திரம் .பிரபாகரன் தமிழ் மக்களை அநியாயமாக கொன்றுகுவித்தார் என்று சொல்லுங்கள் .அது உங்களுடைய கருத்துச்சுகந்திரம் .தவறான எண்ணத்தோடு ஒரு பெண்ணிடம் மு.காய் பிடிக்கும் என்று ஆபாசமாக கமெண்ட் அடிப்பது கருத்துச்சுகந்திரமா? ஒரு பெண்ணிடம் கடலை போடுவதென்பது வேறு .அவளுடன் ஆநாகரிகமாக பேசுவதென்பது வேறு .இரண்டுக்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு .இரண்டையும் ஒன்றாக்காதீர்கள்.சிக்கல் உங்களுக்குத்தான் .

……………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது. கேசவன்  ஒரு புத்தகத்தை ஓசைப்படாமல் என்னிடம் நீட்டி, சாதனா ,இந்த புத்தகத்தை படித்துப் பாருங்கள் என்றார்.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, “புதுக்கோட்டை மாவட்ட வரலாறு’ என்ற நூல் அது.அதில்-

கப்பத் தொகை, 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.இதன்படி, தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டப்பொம்மன்.கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன், 11 ஆயிரம் ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டப்பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார்.இந்த நிகழ்ச்சிக்குப் பின், கட்டப்பொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்.கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

பார்த்தீர்களா கட்டபொம்மனின் உண்மையான வீரத்தை .என்னோடு வயலுக்கு வந்தாயா ,நாற்று நட்டாயா என்று வீரவசனம் பேசியதெல்லாம் புருடாவா ?

Advertisements

One thought on “எந்த மாதிரியான சமூகத்தில் வாழ்ந்துகொண்டிருகின்றோம் நாம்??

  1. அருமையான பதிவு…….

    கட்டப்பொம்பன் வரலாறு நானும் படித்தேன். சிவாஜி நமக்கு தந்த கட்டப்பொம்மனின் பிம்பம் வேறு!!!! உண்மை வேறு!!! இத்தனைக்கும் கட்டப்பொம்மன் தமிழர் அல்லர் என்பதையும் அறிந்தேன்……என்றாலும் தூக்குக்கு ஆங்கிலேயனால் போனான் என்பதால் – அவன் எதோ இடத்தில் முரண்டு பிடித்துள்ளான்!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s