“மனுஷ்ய புத்திரன் என்ற புனைப்பெயரில் எழுதும் இவன் இந்தப் பெயரை வைப்பதற்கு கொஞ்சம் கூட தகுதியற்றவன். உண்மையில் மிருக புத்திரன் என்றுதான் இவனைச் சொல்ல வேண்டும். காரணம் என்னவென்றால் கொடூரமான முறையில் கழுத்து நெறித்து கொலை செய்யப்பட்ட  நாலு மாத குழந்தைக்கு இரக்கம் காட்ட முன்வராத இந்த மனித மிருகம் கொடூரமான முறையில் கொலை செய்த கொலைகாரப் பெண்மணிக்கு இரக்கம் காட்ட முன்வருவதிலிருந்தே இவன் மனித ஜாதி அல்ல மிருக ஜாதிதான் என்பது வெட்ட வெளிச்சமாகின்றது. இவனது பெண்டாட்டியையோ, மகனையோ மகளையோ அண்ணனையோ தம்பியையோ அநியாயமாக எவனாவது கொலை செய்தால் அப்போது கொலை செய்த கொலைகாரனுக்கு ஆதாரவாக மனிதநேயம் பேசுவானா? அல்லது கொலை செய்யப்பட்டவனைக் கொல்ல வேண்டும் என்று இவன் சொல்வானா? என்பது இவனது வீட்டில் ஏதாவது கொலை நடந்தால் தெரிந்துவிடும்.எந்த ஒரு விஷயத்திற்கும் ஆதாரத்தின்  அடிப்படையில் பதிலளிக்க வேண்டும் என்று சொல்ல திராணியற்ற ஈனப்பிறவியான மிருகபுத்திரனுக்கு எய்ட்ஸ் உள்ளது என்றும் அவனுக்கு எய்ட்ஸ் வருவதற்கு காரணம் அவனது அம்மாதான் என்றும் பலபேருடைய தொடர்பினால் அவனது அம்மாவிற்கு வந்த எய்ட்ஸ் நோய் அவனுக்கும் தொற்றிக்கொண்டது என்றும் இணையதளத்தில் எழுதியிருந்தார்கள். அதை நாங்கள் அப்படியே நம்பவில்லை உனக்கு எய்ட்ஸ் உள்ளதா? என்பதை சோதித்துப்பார்த்த மருத்துவர்கள் சொன்னால்தான்  அந்த மருத்துவ அறிக்கை வந்தால்தான் நம்புவோம்  இதுதான் சரியான  நிலைப்பாடு    அதுபோல் ஆய்வு செய்தா இந்த முடிவை நீ எடுத்தாய்? ”

பி .ஜே என்று அழைக்கப்படுகின்ற பி.ஜெயினுலாபிதீன் அவர்களது மேற்கண்ட  கட்டுரை ஒன்றினை சமீபத்தில் இணையதளத்தில் வாசித்திருந்தேன்   .கடந்த சில வாரங்களிற்கு முன்னர் சவூதி அரேபியாவில் கொலை குற்றம் சாட்டப்பட்டு மரண தண்டனைக்கு ஆளாகி இருந்த இலங்கையை சேர்ந்த முஸ்லிம் பெண்மணியான றிசானா நாபிக் என்பவரை அடிப்படையாக வைத்து …எழுத்தாளரும் ,சமுக விழிம்பியுமான உயிர்மை பதிப்பகத்தின் பதிப்பாசிரியர் மனுஷ்ய புத்திரன் எழுதியிருந்த கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றும் வகையில் அவர் அவ்வாறு எழுதியிருந்தார் .அந்த கட்டுரையினை வாசித்து முடித்தபொழுது இப்படியும் ஒரு மனிதரை கேவலப்படுத்த முடியுமா என்கின்றவகையில் சிந்திக்க தோன்றியது .அந்தளவிற்கு காட்டமான விமர்சனங்களை மனுஷ்யபுத்திரன் மீது முன்  வைத்திருந்தார் பி .ஜே .படித்த மனிதர்களே இப்படியான தரக்குறைவான ,ஆபாசமான கருத்துகளை  பொதுவெளியில் முன்வைப்பதினை என்னவென்று சொல்வது .எந்தமாதிரியான சமூகத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருகின்றோம் .இஸ்லாம் மதத்தில் சூபி என்றொரு இனம் உண்டு .இவர்கள் மிதவாதபோக்கினை உடையவர்கள் .அதாவது கடும் தீவிரவாத போக்கினை முற்றாக வெறுப்பவர்கள் .உதரணமாக இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ,இசையமைப்பாளர் ஏ .ஆர் .ரகுமான் போன்றவார்கள் சூபிகள் என கொள்ளலாம் .அடுத்தது சியா முஸ்லிம்கள் .கடுமையான மத  வெறி கொண்டவர்கள்  .மதவாத போக்கினை கடைபிடிப்பவர்கள்  .பி .ஜே போன்றவர்களை சியா முஸ்லிம்களிற்கு உதாரணமாக எடுத்துக்கொள்ளமுடியும் .இதற்க்கு அடுத்தபடியாக  இருப்பவர்கள் ஷுன்னி முஸ்லிம்கள் .சியா முஸ்லிம்களோடு ஒப்பிடுகையில் அவர்களை விட இவர்கள் ஒருபடி மேலான மிகத்தீவிரமான மதவெறியர்கள் .வாஹபியர்கள் என்று அழைக்கப்படுபவர்கள் ஷுன்னி முஸ்லிம்களில் ஒரு பிரிவினரே .சவூதி அரேபியா ,குவைத் போன்ற நாட்டினை சேர்ந்தவர்களை ஷுன்னி முஸ்லிம்களிற்கு உதாரணமாக சொல்லலாம் .ஷுன்னி முஸ்லிம்களை பொறுத்தவரை ,கொலை என்பது அவர்கள் மதத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்று .

இப்படியான பின்னணியை கொண்டவர்தான் பி.ஜெயினுலாபிதீன்.நான்கு மாத குழந்தைக்கு ஏற்பட்ட விபரீதம் கொலையா? அல்லது தற்செயல் சம்பவமா? என்பதை பற்றி துளியும் ஆராயாமல் வரிந்து கட்டிக்கொண்டு ரிசானாவிற்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனையை வரவேற்கும் பி.ஜெயினுலாபிதீன் ,பல சவூதி அரேபிய ஷேக்குகளினால் பாலியல் அச்சுறுத்தல்களிற்கும் ,மிககொடுமையான சித்திரவதைகளிற்க்கும் ஆளான பெண்களிற்கு என்ன பதில் சொல்லப்போகின்றார் ?அவரின் ஷிரியா சட்டத்தில் இவ்வாறான செயல்பாடுகளுக்கு எழுதிவைக்கப்பட்ட தண்டனை முறைகள் எப்படியானவை ?அல்லது ஷிரியா சட்டத்தின் அடிப்படையில் தண்டனை என்பது பணிப்பெண்களாக வேலைதேடி வரும் இரண்டாம் நபர்களிற்கு மட்டுமானதா? அரேபியர்களுக்கு இல்லையா ?

சரி…  ரிசானா அந்த குழந்தையை கொலைதான் செய்தாள் என்கின்ற வகையில் பார்க்கப்போனாலும் ரிசானா எதற்காக கொலை செய்தாள் ?,அனாவசியமாக நான்கு மாத குழந்தையை கொலை செய்வதற்க்கான தேவை என்ன? என்கின்ற கேள்வி எழுகின்றதே .அப்படியானால் அதற்கான பதில் என்ன?ஒன்று குறிப்பிட்ட அந்த சவூதி அரேபிய பெற்றோர்கள் ரிசானாவை உடல் ,உள ரீதியில் துன்புறுத்தி இருக்கவேண்டும் .அதற்கு பழிவாங்கும் முகமாக ரிசானா குழந்தையின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கவேண்டும்  .இரண்டு ரிசானா மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்திருக்க வேண்டும் .ரிசானாவை பரிசோதனை செய்த மருத்துவ குழாம் ஒருபொழுதும் ரிசானா மனநிலை பாதிக்கப்பட்டவர் என்கின்ற ரீதியில் அறிக்கை வழங்கவில்லை .அப்படியானால்  இரண்டாவதாக நான் குறிப்பிட்ட அதாவது ரிசானாவை அந்த பெற்றோர்கள் கொடுமைபடுத்த மிகுந்த மன உளைச்சலுக்கும்,கோபத்திற்கும் உள்ளான ரிசானா  சரியான நேரம் பார்த்து குழந்தையின் கழுத்தை நெரித்து கொலை செய்திருக்க  வேண்டும்.   ஆக இந்த வழக்கில்  முதலில் விசாரிக்கப்படவேண்டியவர்கள்  அரேபிய பெற்றோர்களே ஒழிய ரிசானா கிடையாது .இதில் இன்னொரு முக்கியமான விடயம்  இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கூட இதைபற்றி ஒரு கேள்வி  கேட்கவில்லை.அப்படியானால் இது எந்தவகை நீதிமன்றம் .வழக்கு என்று வரும்பொழுது இரண்டுபக்கமும் அல்லவா விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் .தனியே பாதிக்கப்பட்டவர் என்கின்ற கோணத்தில் வழக்கினை கையாண்டு பாதிக்கப்பட்டவருக்கு சார்பாக தீர்ப்பு  வழங்குவது  திரு குரான் போன்ற புனித புத்தகத்தினை தொழுகின்ற உண்மையான  இஸ்லாமியர்களிற்கு அழகா? ((அல்லா தான் பதில் சொல்லவேண்டும்))அடுத்தது , ரிசானா விவகாரம் சவூதி அரேபிய போலிசுக்கு தெரியவர அவர்கள் வந்து  ரிசானாவை கண்மூடித்தனமாக தாக்கி இருகின்றார்கள் .அடியின் பலத்தால் ரிசானாவின் மூக்கு ,தாடை என்பன உடைந்து இரத்தம் வந்திருகின்றது .ஒருவர் மீது சுமததப்பட்டு இருக்கும் குற்றம் நீருபணமாகும் வரையில் அவர் மீது கைவைப்பது ,தாக்குதல் நடத்துவது என்பது சட்டப்படி மனித உரிமை மீறல் அல்லவா? அதுவும் ரிசானா வேறொரு நாட்டு பிரஜை என்பதால் அவரை அடித்தல் என்பது மிகப்பெரிய குற்றம் அல்லவா? வேறொரு நாட்டுபிரஜையாக இருந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறத்தெரிந்த சவூதி அரேபியாவிற்கு தங்கள் நாட்டின் காவல்துறையே சட்டத்தினை மீறியமை குற்றமாக தெரியவில்லையா ?((இதற்கும் அல்லா தான் பதில் சொல்லவேண்டும்))

சரி விசயத்திற்கு வருகின்றேன் .மனுஷ்ய புத்திரன் ,ரிசானா விவகாரம் பற்றி நக்கீரனில் கட்டுரை எழுதியமை அவருடைய தனிப்பட்ட கருத்து சுகந்திரம் .அதில் தலையிடுவதற்கும் ,அவரின் உடல் ஊனத்தை வக்கிரபுத்தியுடன் பழித்து சொல்வதற்கும் பி .ஜே க்கு என்ன உரிமை இருக்கிறது .அதுகூட அவரின் கருத்து சுகந்திரம்தான் என்று வாதாட வரும் இஸ்லாமிய நண்பர்கள்  பி.ஜே எழுதிய எதிர்வினையினை படித்துவிட்டு வாருங்கள் .எந்தவொரு நியாயவாதியும் பி.ஜெயின் அந்த கொலைவெறி தாக்குதலிற்கு ஒப்பான கட்டுரையை  ((அவர்கள் பாஷையில் கருத்து சுகந்திரத்தை)) ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் .மாறாக ஏற்றுக் கொள்பவராக இருந்தால் அவர் உண்மையான முஸ்லீமாக இருக்கமுடியாது .மதம் என்கின்ற போர்வையில் ஒழிந்துகொண்டு மனித மனங்களுக்கு இடையில் பூசல்களை உருவாக்க முனைபவர்களாகவும்,இனக்கலவரத்தினை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களை மக்கள் மத்தியில் தோற்றுவிக்ககூடியவர்களாகாவுமே இருப்பார்கள் .பி.ஜே.இன்னமும் சொல்லுகின்றார் .அதாவாது இந்த தீர்ப்பானது…”எடுத்தேன் கவுத்தேன்” என்று வழங்கப்படாமல் ஏழு ஆண்டுகள் தீர விசாரித்துத்தான் வழங்கப்பட்டு இருக்கிறது என்கின்றார் .அநியாயமாக ஒரு பெண்ணை ஏழு ஆண்டுகள் சிறையில் வைத்திருந்தது மட்டுமில்லாமல் ,அந்தமாதிரி கண்டிக்கத்தக்க சம்பவங்களை தங்களிற்கு ஆதரவாக மாற்றியமைத்துக் கொள்கின்றார்களே என்பதை நினைத்துப்பார்க்கும் பொழுது  நாம் எந்தமாதிரியான சமூகத்தில் வாழ்ந்க்கொண்டிருகின்றோம் என்றே யோசிக்கத் தோன்றுகின்றது? .தனக்கோ ,அல்லது தன்னுடைய குடும்பத்தார்களில் ஒருவரோ இப்படியான அநியாய ஒடுக்குமுறைக்கும் ,தண்டிப்புக்கும் உள்ளானால்தான் மனுஷ்ய புத்திரனின் கூற்றுகளில் இருக்கும் உண்மைத்தன்மையையும் ,பிள்ளையை பறிகொடுத்த ரிசானா குடும்பத்தாருக்கு இருக்கும் மனவலியினையும் பி.ஜே.போன்ற ஆட்களால் புரிந்துகொள்ளமுடியும் .ரிசானா தன்னுடைய வாக்குமூலத்தை கீழ்க்கண்ட கடிதத்தில் பதிவு செய்திருகின்றார் .

“நான் 01.04.2005-ல் சவுதி அரேபியாவுக்கு வந்தேன். நான் சவுதி அரேபியாவில் ஒன்றரை மாதங்கள் வீட்டில் வேலை செய்தேன். இந்த வீட்டில் சமைத்தல், கழுவுதல், 4 மாதக் குழந்தையை பார்த்தல் ஆகியவற்றை செய்து கொண்டு இருந்தேன்.குறித்த சம்பவ தினம் ஞாபகமில்லை. அது ஒரு ஞாயிற்றுக் கிழமை பகல் 12.30 மணியிருக்கும் அப்போது யாரும் வீட்டில் இருக்கவில்லை. அங்குள்ள 4 மாதக்குழந்தைக்கு நானே பால் கொடுப்பேன். வழமைபோல அன்றும் பாலூட்டிக்கொண்டிருக்கும் போது குழந்தையின் மூக்கின் மூலம் பால் வெளியேவர ஆரம்பித்தது. அப்போது நான் குழந்தையின் தொண்டையை மெதுவாக தடவினேன். குழந்தை கண் மூடியிருந்தபடியால் குழந்தை தூக்கமென நினைத்தேன்.குழந்தையின் தாய்,  எனது எஜமானி 1.30 மணியளவில் வந்து சாப்பிட்டு விட்டு பிள்ளையைப் பார்த்தார். அதன் பின்னர் அந்த எஜமானி என்னை செருப்பால் அடித்துவிட்டு குழந்தையை எடுத்துக்கொண்டு போனார். எஜமானி மூக்கிலும் கன்னத்திலும் அடித்த அடியினால் எனக்கு இரத்தம் வந்து கொண்டிருந்தது.பின்னர் என்னை போலீசுக்கு கொண்டு போய் அங்கு ஒரு பட்டியால் அடித்தார்கள். குழந்தையின் கழுத்தை நசித்ததாக கூறுமாறு அடித்து வற்புறுத்தினார்கள். அவ்வாறு கூறும் வரை கரண்ட் பிடிக்கப்போவதாக (எலக்ட்ரிக் ஷாக்) கூறினார்கள்.இந்த நிலையில்தான் அவர்கள் எழுதிய பேப்பரில் கையொப்பம் வைத்தேன். அப்போது எனக்கு பயங்கரமாக இருந்தது. ஞாபக சக்தி அப்போது எனக்கிருக்கவில்லை. அல்லாஹ் மீது சத்தியமாக குழந்தையை கொல்ல நான் கழுத்தை நசுக்கவில்லை. மேற்படி எனது வாக்கு மூலம் வாசித்து விளங்கிய பின்னர் உறுதியென உணர்ந்து கையொப்பமிடுகின்றேன்.’

ஏழு வருடங்கள் கடந்தபிறகு கூட அந்த சவூதி அரேபிய பெற்றோர்களினால் ரிசானாவை மன்னிக்கமுடியவில்லை .இடைப்பட்ட இந்த ஏழு ஆண்டுகளில் குறைந்தது அவர்கள் மூன்று பிள்ளைகளாவது பெற்றிருப்பார்களே .அடுத்த பிள்ளைகளுக்காக ,இருக்கும் சோகங்களை எல்லாம் மறந்துவிட்டு சந்தோசமாக கலவி கொள்ளத் தெரிந்த அவர்களிற்கு ரிசானாவை மன்னிக்கமட்டும் தெரியவில்லை .அதற்காக… ஒன்றும் அறியாத பச்சை குழந்தையை கொலை செய்தவளை மன்னிக்க சொல்கின்றாயா? என்று சில மத அடிப்படைவாதிகள் கேட்கலாம் .ரிசானா குழந்தையை கொலை செய்தாள் என்பதற்காக உங்கள் சட்டம் ரிசானாவிற்கு மரணதண்டனை கொடுக்கவில்லை  .குழந்தையை பறிகொடுத்தவர்கள் அவர்கள் ,அதனால் அவர்கள் என்ன சொல்லுகின்றார்களோ அதன்படியே எங்களால் தீர்ப்பு வழங்கமுடியும் என்று கூறியே அவளுக்கு மரணதண்டனை வழங்கியிருந்தது  .எப்படி இருக்கிறது நியாயம் .ஒருவர் மீது இருக்கும் கோபத்தில் இவர்தான் குற்றவாளி என்று அவர் மீது கை காட்டினால்… என்ன? ஏது? என்று கேட்காமல், “பாதிக்கப்பட்டவர் கூறிவிட்டார்…அதனால் உங்களிற்கு மரணதண்டனை நிச்சியம்” என்று கூறினால் ஆயிற்றா ?.இது எந்தவகையான மதம்? .ஈவு இரக்கமில்லாதவர்களின் மதம் .மனித நேயம் இல்லாதவர்களின் மதம்.இன்னும் சொல்லப்போனால் மதம் பிடித்தவர்களின் மதம் .

அத்தோடு விட்டாரா பி.ஜே .சவூதி எப்பொழுதும் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்தே வழக்கினை பார்கின்றது என்கின்ற வியாக்கியானத்தை வேறு பாடிதொலைகின்றார்.நான் தெரியாமல்தான் கேட்கின்றேன் அவர்கள் எந்த வகையில் பாதிக்கப்பட்டார்கள்? .இறந்த குழந்தையினை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள் கூட நடந்த சம்பவம் கொலை அல்ல .தற்செயல் சம்பவம் என்று அறிக்கை கொடுத்திருகின்றார்களே  .உண்மை அப்படியிருக்கும் பொழுது நீங்கள் எப்படி ரிசானாவிற்கு தண்டனை கொடுக்க முடியும் .கொடுக்கப்பட்டது தண்டனையா? அல்லது அடிமை வர்க்கத்தின் மீதான முதலாளித்துவத்தின் கொலைவெறி தாக்குதலா? நாங்கள் பெரும் பணம்படைத்தவர்கள் ,நீங்கள் எங்கள் அடிமைகள் நாங்கள் என்ன செய்தாலும் நீங்கள் பொறுத்துத்தான் ஆகவேண்டும் என்கின்ற அதிகார ஆணவமா? இதைத்தான் உங்கள் அல்லா உங்களிற்கு போதித்தாரா? எல்லா உயிர்கள் மீதும் கருணை காட்டுங்கள் என்றாரே… எங்கே உங்கள் கருணை? .அல்லா ஒரு மனிதனோடு அவனுடைய பிடரி நரம்பினைவிட மிக நெருக்கமாக இருக்கின்றான் என்று கூறினீர்களே… அப்படியானால் முதலில் இறந்து போனது யார்? ரிசனாவா? அல்லவா? நீங்கள் யாரை முதலில் வெட்டினீர்கள்? ரிசானாவின் தலையையா ? அல்லது அல்லாவையா ?

பெரும்பாலான இஸ்லாமிய நாடுகளில் இந்த முறைகள் அழிந்துபோய் விட்டன .சவூதி அரேபியா ,மலேசியா ,குவைத் போன்ற நாடுகளில் தான் இப்படிப்பட்ட மனித நேயமற்ற பழமைவாத மதவெறி கொண்ட மத குருமார்களால் அவை  இன்னமும் நடைமுறையில் இருந்து வருகின்றன .வீட்டு வேலைகளுக்காக 15 இலட்சத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பெண்கள் சவுதியில் பணிபுரிகின்றனர்.அவர்கள் அதிகார வெறிபிடித்த முதலாளித்துவ சமூகத்தால் பல இன்னல்களிற்கு முகம்கொடுத்து வருகின்றனர் .பாலியல் ரீதியாக மிகவும் இம்சிக்கப்படுகின்றனர் .சுரண்டலுக்கு உட்படுத்தப்படுகின்றனர் .இவ்வாறான பிரச்சனைகளிற்கு ஒரே தீர்வு ஆசியா போன்ற மூன்றாம் தர நாடுகளில் இருந்து பணிப்பெண்ணாக வேலைதேடி மையக்கிழக்கு நாடுகளிற்கு பெண்கள் போகாதவாறும்,அவர்களிற்கு தேவையான வேலைவாய்ப்பினை குறிப்பிட்ட நாடுகளே வழங்கக்கூடிய அளவிற்கு அந்தந்த நாடுகள் பொருளாதார ரீதியிலும் ,வாழ்க்கை வாழ்வாதார ரீதியிலும் தம்மை தாமே முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்பதுதான்  .அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை மூன்றாம் தர நாடுகளில் ஏற்படும்வரை ரிசானாவின் தலையினை போன்று எத்தனையோ ரிசானாக்களின் தலைகள் அல்லாவின் பெயரால் ஓங்கப்படுகின்ற வாளுக்கு இரையாகிக் கொண்டே இருக்கும் .

ரிசானா சம்பந்தப்பட்ட ஆவணப்படத்தினை காண இங்கே சொடுக்கவும் .

Advertisements

One thought on “பி.ஜெயினுலாபிதீன் vs மனுஷ்யபுத்திரன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s