முதலாளித்துவம் அவளை தின்று விட்டது.(( அல்லது மார்க்கம் அவளை கொன்றுவிட்டது .))

றிசானா றாபிக்கின் மரண செய்தியினை வாசிக்க நேர்ந்த பொழுது துக்கம் தொண்டையை அடைத்தது .அவர்கள் பெற்றோர்களா? அல்லது அரக்கர்களா? என்று ஒருகணம் என்னால் அனுமானிக்க முடியவில்லை .நடந்தது …தற்செயல் சம்பவமா? ,அல்லது திட்டமிட்டு நடந்த கொலையா? என்று தீர விசாரிக்காமலே அந்த அப்பாவி பெண்ணிற்கு சிரச்சேதம் செய்திருகின்றார்கள் .அதிகார வர்க்கம் அவளை கொன்றுவிட்டது .முதலாளித்துவம் தன்னுடைய கொலைக்கரங்களை மீண்டுமொருமுறை அடிமை வர்க்கத்தின் மீது வீசி அதன் குரல்வளையினை பிடித்து நசிக்கி இருக்கிறது .இழப்பு என்பது விவரிக்கமுடியாத பெரும் சோகம்தான் .ஆனால் ஏழு ஆண்டுகள்  அந்த சோகங்களை மறக்கடிக்க தவறிவிட்டதா? கொடுக்கப்பட்டது தண்டனையா அல்லது ஆணவத்தின் மறைமுக வெளிப்படா ?

மரணம் …!
அது மா ரணம் ஆயிற்றே .
உனக்கென்ன ஊசி ஒன்று -உன் 
கழுத்தில் குத்தியதை போல் 
இருந்திருக்கும் .
பார்த்துக் கொண்டிருந்த நான் 
உயிருடன் செத்துப் போய்விட்டேன் .


உன் சிரத்தொடு சேர்த்து
அறத்தையும் கொன்றுவிட்டார்கள் .
அவர்கள் கொய்தது என்னமோ
உன் தலையாக இருக்கலாம் .ஆனால்
புதைக்கப்பட்டது உன் கனவுகள் .

 

உனக்காக …ஒரு இந்து நான் அழுகிறேன் ,துடிக்கிறேன் .
உன் மதம்தான் அவள் -இருப்பினும்
உன்மீது அவள் கொண்ட மதம்
அவள் மதத்தை மறைத்துவிட்டது .

அல்லா கருணை கொண்டவன்
எல்லா உயிர்களையும் நேசி என்றவன்
கொஞ்சம் கூட இறங்கவில்லையே
அந்த இதயமே இல்லா வேசி .

என் கனவுகளில்
நீ உன் கனவுகளை ஒரு
கூடையில் சுமந்து வருகின்றாய் .
எதிர் வந்த ஆயுதத்தால் சிதறுண்டு வீழ்ந்தது
உன் கூடை மட்டுமல்ல .கூடவே
என் கனவுகளும் தான் .

இழப்புகள் உனக்கான தண்டனைகளை தரவில்லை .
மாறாக அதிகாரங்களும் ,முதலாளித்துவமுமே
அவற்றை உனக்கு தந்திருகின்றன .
எனக்கு தெரியும்
உன் குடும்பம் வாழ்வதற்காகத்தான் நீ போனாய் .
ஆனால் உனக்கு தெரியுமா ?நீ போனதால் தான்
உன் குடும்பமே போனது .திக்கு தெரியாத காட்டில்
உன் குடும்பமே போனது .

பச்சை குழந்தைக்கு பால் கொடுக்க
இன்னொரு பச்சை குழந்தையா ?
உன் தாயின் மார்பில் பால் சூப்பிய
நினைவுகள் கூட உனக்கு மறந்திருக்காதே !
அதற்குள் ஏனடி நீ செத்துவிட்டாய் .
வறுமை .வறுமை .வறுமை

கொடுமை .கொடுமை இளதில்
வறுமை கொடுமை .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.