டில்லி மாணவி ஓடும் பஸ்ஸில் வன்புணர்ச்சிக்கு ஆளானமை இந்தியாவையே நிலைகுலைய வைத்தது .அதுவும் அதியுச்ச பாதுகாப்புகள் நிறைந்த அரசியல் தலைநகரான டில்லியில் இவ்வாறான சம்பவம் நடந்தமை உண்மையிலேயே பெண்கள் மீதான பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கி இருக்கிறது .இரவு பத்து மணியளவில் தன் கல்லூரி நண்பன் ஒருவனுடன் பஸ்ஸில் ஏறிய குறித்த பெண் ,பஸ் ஓட்டுனர் உட்பட அங்கேயிருந்த ஆறு நபர்களினால் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டும் ,கடுமையான வன்தாக்குதலிற்கு உட்படுத்தபட்டும் உள்ளார் .பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் சிகிச்சை பலனளிக்காத நிலையில் கடந்த வாரம் உயிரிழந்தார் .இதற்கிடையில் சாதாரண குடிமகன் தொடக்கம் பாராளுமன்ற அமைச்சர்கள் வரை தங்கள் பங்கிற்கு ஆர்ப்பாட்டங்களையும் ,கண்டன போராட்டங்களையும் ஆரம்பித்திருந்தார்கள் .அமைச்சரவையில் டில்லி உட்பட ஏனைய பிற மாகாணங்கள் வரை பெண்கள்மீதான வன்முறைகளிற்கு எதிராக புதிது புதிதான  தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாளன .ஐ.நா செயலாளர் பான் கீ மூன்  இவ்வாறான சம்பவங்கள் உண்மையிலேயே பாரதூரமான ஒன்று எனவும் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்றும் அறிக்கை விட்டிருந்தார் .தவிர ஐரோப்பிய தொலைகாட்சிகள் கூட டில்லி சம்பவத்தினை பற்றி பக்கம் பக்கமாக அலசி செய்தி வெளியிட்டு இருந்தது .இது இப்படி இருக்க நடந்த சம்பவத்திற்கு யார் நிஜமான காரணம்?அவசர அவசரமாகவும் ,புதிது புதிதாகவும் தீர்மானங்களை நிறைவேற்றபடுவதால்  பெண்கள் மீதான இப்படியான பாலியல் அச்சுறுத்தல்கள் குறைந்துபோவதற்க்கான அல்லது முற்றாக ஒழிந்து போய்விடுவதற்கான சாத்தியப்பாடுகள் உண்டா ?பார்க்கலாம் .

உண்மையில் சொல்லப்போனால் இந்தியா போன்ற மூன்றாம் தர நாடுகளில் கற்பழிப்பு போன்ற வன்கொடுமைகள்  நிகழக்கூடிய சாத்தியக்கூறுகள் நிறையவே உண்டு .இதற்கு முக்கியமான காரணம் ;இந்தியாவின் அமைவிடம் அமெரிக்க நாடுகளிலோ ,அல்லது ஐரோப்பிய நாடுகளிலோ அல்ல என்பதும் இந்திய அரசியலில் உள்ள கோமாளித்தனமான வன்முறைக்கு எதிரான தண்டனைகளும் தான் .இதில் முக்கியமாக ஒரு விஷயத்தை குறிப்பிட விரும்புகின்றேன் .பெண்கள் வன்முறைகளிற்கு எதிராக மூன்றாம் தர நாடுகளில் அமுலில்  இருக்கும் சட்டத்திட்டங்களை கொஞ்சம் ஆழமாக அலசி ஆராய்ந்தால் குறிப்பிட்ட சட்டதிட்டங்கள் வன்முறைக்கு எதிரானவை அல்ல என்பதும் ,மாறாக அவை அதிகளவிலான வன்முறைகளிற்கு இடம்கொடுக்ககூடியவை என்பதும் விளங்கும் .ஐரோப்பிய நாடுகளை பொறுத்தவரை கற்பழிப்பு என்கின்ற பேச்சுக்கே இடமில்லை .விதிவிலக்காக ஓரிரண்டு கற்பழிப்புக்கள் இடம்பெற்றாலும் அவை மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோ வகை விளிம்புநிலை மனிதர்களினாலே மேற்கொள்ளப்படுகின்றன .(மேலதிக விபரம் தேவையானவர்கள் மதனின் மனிதனுக்குள்ளே ஒரு மிருகம் என்கின்ற புத்தகத்தினை வாசித்து பார்க்கவும்) ஹிட்லர் ஆட்சி காலத்தில் கூட பெருமளவான யூத மக்கள் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டுருந்த போதிலும் பெண்கள் மீதான வன்புணர்வுகள் என்பது மிகமிக குறைந்த அளவிலேயே  இடம்பெற்று இருக்கிறது .ஏனென்றால்  பெண்களை போகப்பொருளாக பார்க்கும் விளிம்புநிலை கலாச்சாரம் ஐரோப்பிய நாடுகளில் மிகமிக குறைவு .சமத்துவம் என்கின்ற அடிப்படை வாதமே ஐரோப்பியர்களின் கொள்கை .ஐரோப்பியர்களிற்கு மட்டும் எப்படி சமத்துவ மனநிலை பாங்கு உருவானது .இதற்கெல்லாம் முதல் காரணம் படிப்பும் ,படிப்பின் மூலம்உருவான  அறிவும் .

சமீபத்தில்  ஞாநி கூட இதுபற்றி குமுதத்தில் கட்டுரை எழுதியிருந்தார் .அது வருமாறு ;குடும்பம் வார்த்திருக்கும் இந்தப் பார்வையை தொடர்ந்து உரம் போட்டு வளர்த்து உறுதி செய்வதையே தங்கள் தலையாய பணியாக, பத்திரிகைகள், சினிமா, தொலைக்காட்சி என்று எல்லா ஊடகங்களும் செய்து வந்திருக்கின்றன. பெண்ணின் உடல் அழகிப்போட்டி முதல் பத்திரிகை அட்டை வரை,  சீட்டுக்கட்டு முதல் சினிமா வரை எல்லா இடங்களிலும் ஆணுக்கான போகப்பொருளாகவே அழுத்தந்திருத்தமாக வரையறுக்கப்பட்டு விட்டது.  பொறுக்கித்தனம் செய்பவன்தான் கதாநாயகன். அவனுக்காக உருகுபவள்தான் கதாநாயகி என்ற கருத்தை வலியுறுத்தும் படங்களுக்கு தேசிய விருது கொடுத்து கௌரவிப்பவர்கள் நாங்கள்.இந்தச் சூழலில் வளரும் ஆண் எப்படிப்பட்டவனாக இருப்பான் என்று யோசி. படிக்காதவனாக இருந்தால் நீ பஸ்சில் எதிர்கொண்ட ஆறு பேரில் ஒருவனாகும் வாய்ப்பே அதிகம். தன்னைச் சுற்றிலும் காமத்தை தூண்டும் சூழல். நீ ஆண் என்பதால் நீதான் அதிகாரம் உள்ளவன் என்ற போதை. கூடுதல் போதைக்கு மது. பள்ளிகளை விட அதிகமாக பார்களை அரசாங்கமே நடத்தும் நாடல்லவா இது.தவிர பிரபல எழுத்தாளர்கள் சிலரும் ,பதிவர்கள் சிலரும் பெண்கள் மீதான வன்புணர்ச்சிக்கு ஒட்டுமொத்த  காரணங்களையும் பெண்கள் மீதும் ,அவர்கள் அணியும் அரைகுறை ஆடைகள்மீதும் சுமத்தியிருகின்றார்கள் .((ஒரு பன்னாடை கற்பழிப்பிற்கு பெண்கள் ஒத்துழைக்க வேண்டும் என்கின்ற வகையில் பதிவொன்றினை எழுதி  தன்னுடைய இணையதளத்தில் வெளியிட்டுயிருகின்றது .ஒத்துழைக்க கற்பழிப்பவன்  அவளின் கணவனா என்ன ?))படித்தவர்கள் கூட இந்தமாதிரியான கருத்துக்களை முன்வைப்பதை எந்தவகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை .

மூன்றாம்  பந்தியில் குறிப்பிட்ட படி அரைகுறை ஆடைகள் தான் இத்தனை துயரங்களுக்கும் காரணம் என்றால் மேற்கத்திய நாடுகளில் பெண்கள் இந்திய பெண்களை விட அரைகுறை ஆடைகளுடன் திரிகின்றனர் .அவர்களுடைய தொலைகாட்சி ஆபாசங்களை எந்தவித தணிக்கையும்  இல்லாமலேயே வெளியிடுகின்றன .அப்படியெனில் மேற்கத்திய நாடுகளில் கற்பழிப்புகள் இடம்பெறுகின்றனவா .கற்பழிப்பிற்கு முதல் காரணமே ஏதோவொரு வகையில் ஆண்களிற்கு இயல்பாக இருக்க கூட்டிய பெண்களின் தேகத்தின் பால் இருக்ககூடிய அந்த ஈர்ப்பு .வெறி .கோபம் ,வஞ்சகம் அல்லது துவேஷம் போன்ற மனநிலைகள் ஒருவனை கற்பழிக்க தூண்டுகின்றது எனலாம் .அடுத்ததாக அதிகாரம் .நான் இப்படி செய்வதால் என்னை யார் கேட்க போகின்றார்கள் என்கின்ற ஆதிக்க அதிகார மனநிலை .இன்னொரு வகையில் சொல்லபோனால் எல்லா ஆண்களிற்க்குமே கொஞ்சமேனும் சபலபுத்தி என்பது உண்டு .சர்ந்தப்பம் கிடைக்காத வரையில் எல்லா இனமும் நல்ல இனமே .டில்லி பெண் கற்பழிக்கபட்டமை கூட இவ்வாறான ஒரு மனநிலையின் அடிப்படையில் தான் .ஆரம்பத்தில் பஸ்ஸில் இருந்தவர்களிர்ற்கு குறிப்பிட்ட பெண்ணை கற்பழிக்கும் நோக்கம் இருந்திருக்காது .ஓடும் பஸ்சின் உள்ளே அவர்களிற்க்குள்ளே வாக்குவாதம் நடைபெற்று இருந்திருகின்றது .அது படிப்படியாக கற்பழிப்பில் போய் முடிந்திருகின்றது .எந்த மனநிலை அவர்களை கற்பழிப்பு  வரை கொண்டுபோய் நிறுத்தி இருக்கிறது .கோபம் .குறிப்பிட்ட பெண்ணின் மீது அவர்களிற்கு ஏற்பட்ட கோபம்தான் அவர்களை அப்படியொரு மனநிலைக்கு தள்ளி இருக்கிறது .ஆனால் இதற்காக அந்த பெண்ணை அவர்கள் கூட்டாக சேர்ந்து கற்பழித்தமையையோ அல்லது அவர்களின் கோபத்தினையோ சரி என்று வாதிட வரவில்லை .அவர்கள் செய்தது மிகப்பெரிய தவறு  .ஆனால் அந்த   தவறு அவர்களிடம் இருந்து தொடங்கப்படவில்லை .அவர்கள் வளர்ந்த குடும்ப பின்னணியில் இருந்தே அந்த தவறு தொடங்கப்பட்டு இருக்கிறது .அவர்களிற்கு வழங்கப்பட்ட கல்வி .இதற்கெல்லாம் முக்கிய காரணம் யார்?அவர்களுக்கான   சிறந்த கல்வியினை ஏன் இந்த சமூதாயம் அவர்களிற்கு வழங்கவில்லை ?

பாரிசில் ஒரே தெரிவில் தேவாலயமும் இருக்கிறது .அதே தெருவில் விபச்சார மையமும் இருக்கிறது .இந்த மாதிரியான மாறுபட்ட சிந்தனைகள்தான் ஐரோப்பவினை நாகரிகமான ,அபிவிருத்தி அடைந்த கண்டமாக மாற்றி இருக்கிறது .எப்பொழுது இந்தமாதிரியான மாறுபட்ட சிந்தனைகள் தெற்காசிய போன்ற மூன்றாம் தர நாடுகள் ஒப்புக்கொள்கின்றதோ அன்று இந்தியா போன்ற நாடுகளில் கற்பழிப்புகள் போன்ற பெண்கள் மீதான வன்முறை நடவடிக்கைகள் முற்றாக ஒழிந்து போவதற்க்கான ,அல்லது மிக பாரிய அளவில் குறைந்து போவதற்க்கான சூழ்நிலை உருவாகும் .

………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………….

இந்தவார பூச்செண்டு :ஈழத்தில் எத்தனையோ பெண்கள் கற்பழிக்கபட்டுக்கொண்டிருக்கும்வேளையில் வாய் மூடி மௌனித்திருந்துவிட்டு தன்னுடைய தேசத்து பெண் என்கின்ற ஒரே காரணத்திற்காக மருத்துவமனை வரை சென்று ஆறுதல் வார்த்தை கூறிய சோனியா காந்திக்கு .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s