துப்பாக்கி படம் பார்த்தேன்.7ம் அறிவு கற்றுக்கொடுத்த பாடங்களையும் மறந்துவிட்டு 10 யூரோ செலவழித்து படம் பார்க்கப்போனது பெரிய தப்பு என்று படம்  பார்த்த   பிறகுதான் புரிந்தது.ஒரு படம் வெளிவருவதற்கு முன்னர் ஊடகங்களும் சரி ,படத்திற்கு பணமுதலீடு செய்த தயாரிப்பாளர்களும் சரி அநியாயத்திற்கு படம் பற்றின எதிர்பார்ப்பினை ஹாலிவுட் தரத்திற்கு உயர்பித்து ,பொய்யான பிம்பங்களை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திவிடுகின்றமை ஒன்றும்  தமிழ்சினிமாவிற்கு புதிதானது அல்ல. காலம் காலமாக நடப்பதுதான் .ஆனால் ரசிகர்கள் மத்தியில் “தரமான இயக்குனர்” என்கின்ற இமேஜினை பெற்றுக்கொண்டவர்கள் கூட ஒன்றுக்கும் உதவாத குப்பைப்படங்களை தந்துவிடுகின்றமையை, உண்மையிலேயே தமிழ் சினிமாவின் சாபக்கேடு என்றுதான் சொல்லவேண்டும்.அதற்கு சமீபத்திய நல்ல உதாரணம் சங்கரின் இந்திரன்.பிரமாண்டமாக படம் எடுக்கின்றேன்பேர்வழி என்று கூறிக்கொண்டு பக்கா மசாலா படம் எடுப்பவர்களை விட சத்தமே போடாமல் ,குறைந்த செலவில் உலக அரங்கில் வைத்து பேசப்படக்கூடிய மைனா ,ரெனி குண்டா ,ஆரண்ய காண்டம் போன்ற மாற்று சினிமாக்களை எடுப்பவர்கள் எவ்வளவோ மேல் .முருகதாஸின் துப்பாக்கியும் இந்த ரகமே .இந்திய இராணுவத்தை பற்றிய படம் என்று சொல்லிக்கொண்டு ,அதேநேரம் இஸ்லாமியர்களை மிக அப்பட்டமாக முறையில் கொச்சைப்படுத்தியும் இருகின்றார்கள் .உலகின் மொத்த ஜனத்தொகையில் இஸ்லாமியர்கள் நூறு கோடி.அதில் வெறும் பத்துக்கோடி இஸ்லாமியர்கள்தான் தீவிரவாதத்தினை மேற்கொள்கின்றார்கள் .ஆனால் இந்திய இயக்குனர்கள் அதுவும் தமிழ்நாட்டு இயக்குனர்கள் உலகில் இஸ்லாமியர்கள் மட்டும்தான் தீவிரவாதிகள் என்கின்ற முறையில் படமெடுத்து திரிகின்றனர் .

“எங்கள் இராணுவத்தினை சேர்ந்த ஒருவர் தவறுதலாக எதிரி நாட்டுப் படைகளிடம் சிக்கிவிட்டார் .எதிரிகள் அவரை 7 நாட்கள் தொடர்ந்து சித்திரவதை செய்திருகின்றார்கள் .அவரின் கண் இரண்டினையும் நோண்டியெடுத்து ,பியர் பாட்டில் ஒன்றினை அப்படியே அவரின் குதம் வழியாக உள்ளே அனுப்பி உடைத்திருகின்றார்கள் .பாவம் எட்டாம் நாள் காலையில் அவரின் உடலைத்தான் எங்களால் எடுக்கமுடிந்தது .டேய் !நீங்களெல்லாம் இங்கே நிம்மதியாக வாழவேண்டும் என்றுதான் நாங்களெல்லாம் அங்கே தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றோம் .”

துப்பாக்கி படத்தில் இப்படியொரு வசனம் வருகின்றது.இந்திய இராணுவத்தை பற்றி இப்படியெல்லாம் உயர்வாக வசனம் எழுதத்தெரிந்த முருகதாசுக்கு கஷ்மீரில் இந்திய இராணும் மக்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்பதுபற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை .கஷ்மீரை மீட்க போராடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு அங்கே இருக்கும் பெண்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்று தெரிந்திருந்தால் முருகதாஸ் இப்படியான வசனங்களை  அமைத்திருக்கமாட்டார் .கஷ்மீரில் மட்டுமா ?அமைதிகாக்கும் படை என்று சொல்லிக்கொண்டு ஈழத்தில் எத்தனை பெண்களை கற்பழித்தார்கள் .அவை பற்றிக்கூடவா அவருக்கு தெரியாமல் போனது .அத்தோடு விட்டார்களா ?இந்த படத்தினை இந்திய இராணுவத்திற்கு டெடிகேட் செய்கின்றோம் என்கின்ற பதத்தினை வேறு எழுதி என்னை அநியாயத்திற்கு மயக்கம்போட வைத்துவிட்டார்கள் .

இரண்டு ஆண்டுகளுக்கு முதல் காஸ்மீர் என்கின்ற புத்தகத்தினை வாசித்திருந்தேன் .((புத்தகத்தை எழுதிய எழுத்தாளரின் பெயர் மறந்துவிட்டது))வடநாட்டவர் என்று நினைகின்றேன் .மிகவும் அருமையாக எழுதியிருந்தார் .தானும் தன்னுடைய நண்பர் ஒருவரும் காஸ்மீருக்கு பயணப்படடதையும் ,காஸ்மீரில் நிலவும் உள்நாட்டு போர் பற்றியும் ,காஸ்மீர் மக்கள் எப்படியான ஒரு கொடுரமான வறுமையில் சிக்கி அல்லலுருகின்றார்கள் என்பது பற்றியும் மிக தெளிவான பார்வையில் ஆழமாக எழுதியிருகின்றார் .குறிப்பாக இந்திய ராணுவம் அமைதி காக்கும் படையென்று சொல்லிக்கொண்டும் ,காஸ்மீரை மீட்க போராடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டும் அவர்கள் மேற்கொள்ளும் காஸ்மீர் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை பற்றி பக்கம் பக்கமாக எழுதி குவித்திருகின்றார்.அதில் ஒரு சிறு பகுதியை இங்கே தருகின்றேன் .

“நானும் என்னுடைய நண்பர் அபிசேக்கும் இன்று காஸ்மீரின் தென்பகுதிக்கு சென்றுவரலாம் என்று முடிவெடுத்திருந்தோம் . மலைகள் சூழ்ந்த ஒரு சிறு கிராமம் .உயர் பாதுகாப்பு வலயம் என்று இந்திய இராணுவத்தினால் அடையாளப்படுத்தப்பட்டிருந்தது .பலத்த பாதுகாப்பு சோதனைக்கு பிறகு கிராமத்தினுள் நுழைய அனுமதி தரப்பட்டிருந்தது .நாங்கள் சென்றிருந்த நேரம் கிராமத்தில் ஊடரங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தபடியால் மாலை நேரத்தில் எங்களால் வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது .மரத்தினால் செய்யப்படிருந்த குடில் ஒன்றில் நானும் அபிசேக்கும் தேநீர் அருந்திக்கொண்டிருந்தோம் .வெயியே சீக்கிய இராணுவத்தினர் ரோந்து போய்க்கொண்டிருந்தார்கள் .அன்று எப்படியும் கிராமத்து தலைவரை சந்தித்து அவருடன் பேசிவிடவேண்டும் என்று நானும் அபிசேக்கும் ஆவலாய் இருந்தோம் .வெளியே அதற்கான அறிகுறிகளே தெரியவில்லை .ஒரு ஈ ,காக்கையினை கூட காண முடியவில்லை .இப்படிப்பட்ட அவலம் நிரம்பிய துர்பாக்கிய வாழ்க்கை முறைமைக்கு நாங்கள் இருவருமே புதிது .எங்களால் எதுவுமே செய்ய முடியவில்லை .மறுநாள் விடிந்தது .மக்கள் வீதிகளில் அரக்கபரக்க ஓடிக்கொண்டிருந்தனர் .விஷயம் கேட்டபொழுது இளம்பெண்ணின் பிணம் ஒன்று ஆற்றில் மிதப்பதாக கேள்விப்பட்டோம் .இந்த ஊரில் இது ஒன்றும் புதிதில்லை .அடிக்கடி இப்படி பிணங்கள் மிதக்கும் .அருந்துவதற்கு தேநீர் தாருங்கள் என்று சொல்லிக்கொண்டு கிராமத்து வீடுகளிற்கு செல்லும் இராணுவத்தினர் எந்தெந்த வீட்டில் இளம்பெண்கள் இருகின்றார்களோ அவர்களையெல்லாம் குறிப்பெடுத்துவைத்துவிட்டு  இரவானதும் தங்கள் காமப்பசியினை தீர்ப்பதற்காக பல இளம்பெண்களை இழுத்துசென்று மாறி மாறி ஒருவர்பின் ஒருவராக வன்புணர்ச்சிக்கு உட்படுத்திவிட்டு விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக கொலை செய்துவிட்டு ஆற்றில் வீசி விடுவார்கள் .ராஜஸ்தானில் இருக்கும் பெண்களையோ அல்லது டில்லியில் இருக்கும் பெண்களையோ இந்திய இராணுவம் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தியிருகின்றதா ?எதற்காக காஸ்மீர் பெண்கள் மீது மட்டும் இப்படியான பாலியல் வன்கொடுமைகள் .காஸ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்றால் காஸ்மீர் மக்களும் இந்தியர்கள் தானே .”

இது தவிர முறிந்த பனை என்கின்ற தொகுப்பில் ஈழத்தில் இந்திய அமைதிகாக்கும்படை ஆற்றிய வன்முறைகள் பற்றி தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளன . ராஜினி திரணகம, ராஜன் ஹுல், தயா சோமசுந்தரம், கே. சிறீதரன் ஆகியோரால் இந்த ஆவணம் உருவாக்கப்பட்டது. ‘முறிந்தபனை’யின் இரண்டாவது பகுதியில் 5வது அத்தியாயம் முழுவதுமாக ஈழத்தில் பெண்கள்மீது IPKF இழைத்த கொடுமைகள் விரிவாகச் சாட்சியங்களுடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அத்தியாயத்தின் தலைப்பு: “அக்கா, அழுவதற்கு இனி என்னிடம் கண்ணீர் இல்லை”.இப்படிப்பட்ட “நல்ல” மனிதர்களை பற்றி முருகதாஸ் படமேடுத்திருப்பது கண்டிக்கத்தக்க ஒன்று .தன்னுடைய தேசத்து இராணுவத்தினர் என்கின்ற ஒரே காரணத்திற்காக அநியாயம் செய்கின்றவர்களையும்,அட்டூழியம் செய்கின்றவர்களையும்,பெண்கள் மீது மிக மோசமான பாலியல் வன்முறைகளை மேற்கொள்பவர்களையும்  தேச வீரர்களாகவும் ,காவியநாயகர்களாகவும்  சித்தரிக்கின்றமை  உண்மையிலேயே முருகதாசின் பார்வையில் இருகின்ற குருட்டுத்தனத்தினைத்தான் காட்டுகின்றது .

முறிந்த பனை ஆவணத்தினை படிக்க இங்கே சொடுக்கவும் .

2

இந்திய இராணுவத்தில் கடமையாற்றும் விஜய் விடுமுறைக்கு ஊருக்கு வருகின்றார் .வந்த இடத்தில் பஸ்ஸில் குண்டு வைத்த தீவிரவாதி ஒருவனை கையும் களவுமாக பிடித்துவிடுகின்றார் .பிடித்தது மட்டுமில்லாமல் அவனை யாருக்கும் தெரியாமல் ,ஏன் தன்னுடைய நண்பன் சத்யனுக்கு கூட தெரியாமல் தன்னுடைய வீட்டிலேயே அடைத்து வைக்கின்றார் .பின் அவனை வைத்தே தீவிரவாதிகளின் சதித்திட்டத்தினை எப்படி முறியடிக்கின்றார் என்பதும் ,இறுதியில் இது எல்லாவற்றுக்கும் காரணமான தீவிரவாதிகளின் தலைவனை எப்படி தீர்த்துகட்டுகின்றார் என்பதுமே மீதிக்கதை .வழக்கமாக பல தமிழ் சினிமாக்களில் பார்த்த கதைதான் என்றாலும் பெரிய பட்ஜெட் படமென்பதாலும் ,விஜய் நடிகின்றார் என்பதாலும் கதையின் போக்கினை கொஞ்சம் வித்தியாசமாக நகர்த்தி இருக்கின்றார் முருகதாஸ் . இந்தப்படத்தின் ஒளிப்பதிவினையும் ,பின்னணி இசையினையும் கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால் ; துப்பாக்கி படத்தின் கதை அரைத்த மாவினையே திரும்ப திரும்ப அரைக்கும் முயற்சி என்பது விளங்கும் . துப்பாக்கி வெளியான அதே தினத்தில் வெளியான இன்னொரு படம்தான் போடா போடி .குறித்த செலவில் எடுக்கப்பட்ட அருமையான படம் .ஆனால் கொண்டாட தமிழ்நாட்டில் ஆட்கள் இல்லை .படத்தின் கதையை புரிந்துகொள்ள தேவையான முதிர்ச்சியான மனநிலையும் இல்லை .என்னைக்கேட்டால் துப்பாக்கி படத்தினை விட போடா போடி அருமையான திரைக்காவியம் .ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி விட்டுகொடுக்கும் பண்புகள் ,புரிந்துணர்வு மனநிலைகள் ஆகியன இன்னமும் சரியாய் நேர்கோட்டில் பயணப்பட ஆரம்பிக்கவில்லை என்பதே படத்தின் மூலக்கதை .வரலட்சுமி ஒரு டான்ஸர். டான்ஸ் என்றால் உயிராக இருப்பவர். இவருடைய வாழ்க்கையில் திடீரென்று குறுக்கிடுகிறார் சிம்பு.. சிம்புவின் பொய்யான அலட்டல்களை உண்மை என்று நம்பி ஐ லவ் யூ சொல்லிவிடுகிறார் வரலட்சுமி. உடனேயே ஏத்துக்குறது ஆம்பளைத்தனம் இல்லியேன்னு கொஞ்சம் சுத்த விட்டுட்டு அப்புறமா இவரும் ஏத்துக்குறாரு.. கல்யாணமும் செஞ்சுக்குறாங்க.. இப்பவும் வரு, டான்ஸை விடலை.. இது சிம்புவுக்கு பிடிக்கலை. புள்ளை பொறந்துட்டா டான்ஸ் ஆட முடியாதுன்னு வீணாப் போன சித்தப்பன் கணேஷ் பத்த வைக்க.. அந்த வேலையையும் செஞ்சு முடிக்கிறார் சிம்பு.. குழந்தையும் பிறக்கிறது. இப்போது சிம்புவின் இந்த தில்லாலங்கடி வேலை வருவுக்கு தெரிய வர.. அவர் கோபிக்கிறார். அந்த நேரத்தில் நடந்த ஒரு விபத்தில் குழந்தை உயிரிழக்க.. இருவரும் தற்காலிகமாக பிரிகிறார்கள்.வரு டான்ஸில் மூழ்கிப் போய் வாழ்க்கையை மறந்து போய் இருக்க.. சிம்புவால் முடியவில்லை. மீண்டும் வருவை தேடிச் சென்று அழைக்கிறார். வருவும் வருகிறார். சில கண்டிஷன்களோடு.. தன்னுடைய நீண்ட நாள் கனவான டான்ஸ் போட்டியில் ஜெயிக்கணும்ன்னு நினைச்சு பல முயற்சிகள் செஞ்சுக்கிட்டிருக்காரு வரு.. அதுலேயும் அவ்வப்போது மண்ணையள்ளிப் போட்டு கெடுக்குறாரு சிம்பு.. கடைசியா அந்தப் போட்டில வரு கலந்துக்கிட்டா மட்டுமே தன்னோட இருப்பாங்கன்றதால சிம்புவும் கூட சேர்ந்து டான்ஸ் ஆடுறாரு.. ஜெயிக்கிறாங்க..! கடைசி சீன்ல இன்னமும் 14 ஆட்டம் இருக்குன்னு வரு சொல்ல.. இனிமே எப்படி சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்ன்னுட்டு பெட்ரூம் கதவைச் சாத்தி நம்மளை வீட்டுக்கு அனுப்புகின்றார்  சிம்பு.ஒலிப்பதிவிலும் சரி ,இசையமைப்பிலும் சரி ,கதை சொன்ன விதத்திலும் சரி ஒரு புதுமையை கையாண்டு இருக்கின்றார் போடா போடியின் இயக்குனர் விக்னேஷ் சிவன் .

சரி திருப்பியும் துப்பாக்கியை எடுக்கின்றேன் .இந்த படத்தில் எனக்கு பிடித்த ஒரே விஷயம் பாடலும் ,பாடலுக்கான பின்னணியும் .ஹரிஸ் ஜெயராஜ் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பினை உணர்ந்து செயல்பட்டு இருக்கின்றார் .உதாரணமாக அந்தாட்டிக்கா …வென்பனியிலே சறுக்குது நெஞ்சம் .மிக அருமையான பாடல் வரிகள் .கேட்டுக்கொண்டே இருக்கலாம் .மற்றபடி சொல்லப்போனால் துப்பாக்கி :தோட்டா இல்லாமல் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s