சமீபத்தில் பார்த்த குறும்திரைப்படம் 12.21.12((ஒரு வாக்குமூலம்)).இணைய ஊடகங்களாக இருக்கட்டும்,அல்லது அச்சு  ஊடகங்களாக இருக்கட்டும் இவை அனைத்துமே சிலவிசயங்களை மிகையாக காட்சிப்படுத்தியும் ,திரிவுபடுத்தியும் வெளியிடுகின்றன .இதில் மிகவும் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால்,ஒரு சம்பவம் நிச்சியமாக  நடக்கவே நடக்காது என்று தெரிந்திருந்தும்  தங்களின் நிரந்தர இருப்புகளுக்காகவும்,வணிக ரீதியிலான வியாபார நோக்கங்களுக்ககவும் மிகைப்படுத்தல்களையும் ,திரிபுகளையும் “ஊடக தர்மங்களையும்”மீறி முன்நிறுத்தி காண்பிப்பதுதான்.  அப்படிப்பட்ட ஒரு பொய்யான மூடநம்பிக்கையான விசயம்தான் ,டிசெம்பர் பன்னிரண்டில் உலகம் அழிந்துவிடும் என்று கூறுவது .எப்பொழுதோ வாழ்ந்து  அழிந்துபோன மாயர்களை நம்பத்தெரிந்த இந்த உலகத்திற்கு சமகால “நாசாவின்” கூற்றுக்களை நம்பதெரியவில்லை.இவற்றை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட கனேடிய தமிழ் குறும்திரைப்படம்தான்  12.21.12.  மேற்குறிபிட்ட பொய்யான விம்பங்களைஎல்லாம் ஒரு குற்றவாளியின் வாக்குமூலத்தோடு உடைத்தெறிகின்றார் சுதன் மகாலிங்கம்.ஒரு நல்ல நடிகன் என்பவன் நடிக்கவருகின்றபொழுது அவனின் எதிரே கேமரா என்கின்ற சாதனம் இருகின்றதேன்பதையே மறந்திடவேண்டும்.காட்சிகளில் நடிக்கின்றோம் என்கின்ற எண்ணம் அவனுடைய ஆழ்மனதில் இருக்கவேகூடாது .மாறாக வாழ்கின்றோம் என்கின்ற எண்ணமே அவனில் ஆழ்மனதில் பதிந்திருக்கவேண்டும் .

எப்பொழுது நடிகன் என்பவன் இவற்றின் உண்மைகளை விளங்கிக்கொள்கின்றானோ…   ,அப்பொழுது அவனால் ஒரு உயிரோட்டமுள்ள காட்சிபடுத்தலை அல்லது தரத்தினை முன்வைக்கமுடியும் .சுதன் மகாலிங்கத்தின் நடிப்பில் அந்தவகையான உயிரோட்டத்தினை நான் பல இடங்களில் காணக்கூடியவாறு இருந்தது.12.21.12 இல் மாத்திரமில்லாது ,சுதன் மகாலிங்கத்தின் “1999” ,”தி ஒப்பசைட்” போன்ற படங்களிலும் அவருடைய நடிப்புத்திறனை கண்டு வியந்திருகின்றேன்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s