பன்னிரண்டாம் திகதி ,பன்னிரண்டாம் மாதம் .பன்னிரண்டாம் வருடம் .எத்தனையோ வருடங்களிற்கு ஒருமுறைதான் இப்படியான அசாத்தியமான நிகழ்வுகள் இடம்பெறும் .அத்தோடு இன்று என் இருபத்தியாறாவது பிறந்தநாளும் கூட.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது .நண்பர்கள் பலர் நேரிலும் , தொலைபேசியிலும் ,முகப்புத்தகத்திலும் வாழ்த்து தெரிவித்து இருந்தார்கள் .அவர்களிற்கு என் நன்றிகள் உரித்தாகட்டும் .இணையத்தில் இந்தவருடம் நிலைமை எப்படியிருக்கும்  என்று தேடிப்பார்த்தேன் .முந்தைய வருடத்தினை விட இந்தவருடம் உங்களிற்கு கூடுதல் சந்தோசங்களையும் ,வருவாயையும் தேடித்தரும் என்று போட்டிருந்தது .கூடவே ஒரு உபரித்தகவல் வேறு .தங்கம் தொலைகாட்சி சீரியலில் வரும் சாருவினைப் போன்று அழகான படித்த பெண் ஒருவர் உங்களிற்கு மனைவியாக அமைவார் என்பதே அது .உண்மைதானா என்பது தெரியவில்லை .வந்தால் சந்தோசம் .இன்றைய நாளில் வேறு என்ன விசேசம் என்று இணையத்தில் தேடியபொழுது அமெரிக்காவில் பத்து லட்சம் நாய்களின் உடலினை  ‘ஹார்ட் வோர்ம்’ என்கின்ற வைரஸ் தாக்கியுள்ளது .இதனால் அந்த வைரஸ் மனிதர்களையும் தாக்க கூடும் என்கிற பயத்தில் புதிதாக ஒருதிட்டத்தினை உருவாக்கியிருகின்றாகள் .12.12.12.என்பது அந்தத்திட்டத்தின் பெயர் .இதேபோல் 2013ம் ஆண்டு பிரான்சில் நடைபெற உள்ள அரேபிய பந்தையக் குதிரை போட்டிகளுக்கான அறிவிப்பு 12/12/12 அன்று அறிவிக்கப்பட உள்ளது.இன்று விசேடமாக என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தபோதுதான் கூரியர்காரர் கதவினை தட்டினார் .வந்திருந்த கூரியரை உடைத்துப்பார்த்த பொழுது உள்ளே ப்ளாக் பெர்ரி ஸ்மார்ட் போன் ஒன்று இருந்தது .லண்டனிலிருந்து என் நண்பரும் ,மருத்துவ மாணவருமான பி .சோதிராஜ் அதை அனுப்பியிருந்தார் .சிறுவயதிலிருந்தே எனக்கு போன்களில் கொஞ்சம் அலாதிப்பிரியம்  .என் பெரியப்பாவிடம் 3310 மாடல் நோக்கியா போன் ஒன்று இருந்தது .அதை அவருடைய மகன் கனடாவிலிருந்து அனுப்பியிருந்தார் .கனமாக இருக்கும் . ஒருவரின் மண்டையினை குறிபார்த்து எறிந்தால் ,போன் உடைகின்றதோ இல்லையோ நிச்சியமாக மண்டை உடைந்துவிடும் .பெரியப்பாவிற்கு தெரியாமல் போனை காற்சட்டை பைக்குள் போட்டுக்கொண்டு வெளியே போய்வருவேன் .பையினுள் போன் இருக்கிறது என்கின்ற நினைப்பே பெரிமிதமாக இருக்கும் .போன் இருக்கின்றதா ?இல்லையா ? என்று அடிக்கடி தொட்டுப்பார்த்துக்கொள்வேன் .அதன் பிறகு எத்தனையோ போன்கள் வந்துவிட்டன .3310 தன்னுடைய மார்கேட்டினை இழந்துவிட்டது . இப்பொழுது ப்ளாக் பெர்ரி.அட்டகாசமாக இருந்தது .போனை பாவிக்கத்தொடங்கியதுமே “ஓம் சாந்தி ஓம் “படத்தில் இருகின்ற தீம் இசையினை ரிங் டோனாக அமைத்துக்கொண்டேன் .மனத்திற்குள் என்னதான் சந்தோசமாக உணர்ந்தாலும் ,எனது உற்ற நண்பர்கள் சிலர் எனக்கு வாழ்த்து தெரிவிக்க மறந்தமை… கொஞ்சம் கவலையாக இருந்தது .

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

“எங்கள் இராணுவத்தினை சேர்ந்த ஒருவர் தவறுதலாக எதிரி நாட்டுப் படைகளிடம் சிக்கிவிட்டார் .எதிரிகள் அவரை 7 நாட்கள் தொடர்ந்து சித்திரவதை செய்திருகின்றார்கள் .அவரின் கண் இரண்டினையும் நோண்டியெடுத்து ,பியர் பாட்டில் ஒன்றினை அப்படியே அவரின் குதம் வழியாக உள்ளே அனுப்பி உடைத்திருகின்றார்கள் .பாவம் எட்டாம் நாள் காலையில் அவரின் உடலைத்தான் எங்களால் எடுக்கமுடிந்தது .டேய் !நீங்களெல்லாம் இங்கே நிம்மதியாக வாழவேண்டும் என்றுதான் நாங்களெல்லாம் அங்கே தினம் தினம் செத்துக்கொண்டு இருக்கின்றோம் .”

துப்பாக்கி படத்தில் இப்படியொரு வசனம் வருகின்றது.இந்திய இராணுவத்தை பற்றி இப்படியெல்லாம் உயர்வாக வசனம் எழுதத்தெரிந்த முருகதாசுக்கு கஷ்மீரில் இந்திய இராணும்  மக்களை  என்னவெல்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்பதுபற்றி கொஞ்சம் கூட தெரியவில்லை .கஷ்மீரை மீட்க போராடுகின்றோம் என்று சொல்லிக்கொண்டு அங்கே இருக்கும் பெண்களை எப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்றது என்று தெரிந்திருந்தால் முருகதாஸ் இப்படியெல்லாம் வசனம் அமைத்திருக்கமாட்டார் .கஷ்மீரில் மட்டுமா ?அமைதிகாக்கும் படை என்று சொல்லிக்கொண்டு ஈழத்தில் எத்தனை பெண்களை கற்பழித்தார்கள் .அவை பற்றிக்கூடவா அவருக்கு தெரியாமல் போனது .அத்தோடு விட்டார்களா ?இந்த படத்தினை இந்திய இராணுவத்திற்கு டெடிகேட் செய்கின்றோம் என்கின்ற பதத்தினை  வேறு எழுதி என்னை அநியாயத்திற்கு மயக்கம்போட வைத்துவிட்டார்கள் .

…………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………………..

சமீபத்தில் M.I.A.என்பவரின் இந்த பாடலினை கேட்க நேர்ந்தது .லண்டனை சேர்ந்த இவரின் இயற்பெயர் மாதங்கி அருள்பிரகாசம் .அருள்பிரகாசம் ஈழத்தினை சேர்ந்த ஒரு பொறியிலாளர் .சமீபத்தில் வெளியான இந்த தொகுப்பு விற்பனையில் சக்கை போடுபோடுகின்றது .இவருடைய அநேகமான பாடல்கள் விடுதலைபுலிகளை ஆதரித்து வெளிவந்திருப்பதால் அமெரிக்காவில் இவருக்கான குடியுரிமை மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகின்றது .எது எப்படியிருந்தாலும் ஈழத்தினை சேர்ந்த தமிழ்பெண்ணொருத்தி தன் குரலினால் உலகினையே அடிமைப்படுத்தி வைத்திருப்பதென்பது நாம் எல்லோருமே பெருமைப்பட்டு கொண்டாட வேண்டிய ஒருவிசயம் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s