சாதனா ! உங்களின் சில கருத்துகளோடு என்னால் உடன்படமுடியவில்லை .குறிப்பாக பரிதியின் மரணம் சம்பந்தமாக நீங்கள் பதிந்திருந்த பதிவு .பதிவில் நீங்கள் பதிந்திருந்த பதிவு அனைத்தும் எனக்கு அதிருப்தியினை ஏற்படுத்தியிருந்தது என்று சொல்ல முடியாது .ஆனால் பரிதியின் மரணத்திற்கு வீரச்சாவு சர்டிபிகேட் கொடுத்ததினை நீங்கள் எந்தவகையில் தவறு என்று வாதிட முடியும் .விடுதலைப்புலிகளின் அமைப்பில் பதினாறு வருடங்கள் இருந்தவன் என்கின்ற முறையில் சொல்லுகின்றேன் .போராளி என்பவன் கொவ்ரவப்படுத்தப்பட வேண்டியவன்.அவன் சமகால போராளியாக இருந்தாலும் சரி அல்லது முன்னாள் போராளியாக இருந்தாலும் சரி . மற்றபடி நீங்கள் இடதுசாரி கொள்கையினை கொண்டவர் என்கின்ற காரணத்திற்காக உங்களிற்கு  மிரட்டல் விடுத்தமையை ; மிரட்டல் விடுத்தவர்களின் இயலாமை என்றே எடுத்துக்கொள்ள வேண்டும் .யுத்தத்திற்கு முந்தைய தாயக மக்களின் விருப்பிற்கும் ,யுத்தத்திற்கு பிறகான தாயக மக்களின் விருப்பிற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு என்பது மறுக்கமுடியாத  உண்மை .மிகவும் குழப்பமான அரசியில் காலகட்டத்தில் மக்களினை குழப்பும் படியான கருத்துக்களினை வெளியிடாமல் இருப்பதும் ,குறைந்தபட்சம் மௌனம் காக்க வேண்டியதும் உண்மையான தமிழர் நலன் அக்கறை சார்ந்த கட்சிகளுக்கு இருக்கவேண்டிய பண்பு .ஆனால் இவர்கள் ஆரம்பத்தியிருந்தே மக்களை குழப்பும்படியான கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர் .இதற்கு உதாரணமாக அண்மையில் இந்தியாவில் பர்மா பஜார் குண்டுவெடிப்பு விசாரணையிலிருந்து பிரபாகரனின் பெயரினை நீக்கியமையினையும் ,அதற்கு புலம்பெயர் கட்சிகள் சில எதிர்மறையான கருத்துக்களினை வெளியிட்டமையினையும் எடுத்துக்கொள்ளலாம் .முடிவாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன் .உண்மையான புலிகள் எப்பொழுதோ மௌனித்துவிட்டார்கள் .இப்பொழுது ஊளையிடுவதெல்லாம் புலித்தோல் போர்த்திய ஓநாய்கள் .

விஷ்ணு .

விஷ்ணு எனக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலின் திரைநகலினை தரவிறக்கி பார்க்க இங்கே சொடுக்குங்கள். 

உண்மைதான் விஷ்ணு .நேற்றுக்கூ((எழுத்தாளர் என்கின்ற அடைமொழியும் அவை கிளப்பிய சர்ச்சையும்))இந்த பதிவு சம்மந்தமாக ஒருவர் எனது அக்காவுடன் பேசியிருந்தார் .நான் இவர்களை போன்றவர்களிடம்  கேட்டுக்கொள்வது ஒன்றே ஒன்றுதான். உங்களிற்கு என்னுடைய கருத்துக்களில் ஏதாவது எதிர்கருத்துக்கள் இருப்பின் தயவுசெய்து பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் .அதைவிட்டுவிட்டு எதற்காக தூங்கும் ஆட்களை தொந்தரவு செய்கின்றீர்கள் .மனிதனிற்கு இருக்கும் எல்லா சுகந்திரத்திற்கும் இடம் கொடுங்கள் .ஹிட்லர் ஆட்சி நடத்த முனையாதீர்கள் .இதை விட எத்தனையோ எழுத்தாளர்களும் ,பதிவர்களும் புலம்பெயர் தேசங்களில் நடைபெறும் கோமாளித்தனமான அரசியல் செயற்பாடுகளை கிழி கிழி என்று கிழித்து தங்கள் முகபுத்தக சுவற்றில் தொங்கப்போட்டு இருகின்றார்கள் .முடிந்தால் முதலில் அவர்களை தட்டிக் கேளுங்கள் .என்னை பொறுத்தவரை நீங்களெல்லாம் ஒரு கோழையிடம் தங்கள் வீரத்தினை காட்டும் காகித நேப்போலியர்கள் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s