பரிதி கொலை செய்யப்பட்டபொழுது அவரின் மரணத்திற்கு “வீரமரணம்”என்று சர்டிபிகேட் கொடுத்திருந்தார்கள்.இதற்கு”போங்கடா…!நீங்களும் உங்கள் வீரச்சாவும்”என்றெரு பதிவினை முகபுத்தகத்தில் பதிந்திருந்தேன் .((கூற வந்த கருத்தின் அர்த்தத்தினையே புரிந்து கொள்ளாமல் ஒருசில நியாயவாதிகள்  நான்  ஏதோ 75000 போராளிகளை கொச்சைப்படுத்திவிட்டேன் என்கின்ற வகையில் கருத்து தெரிவித்தமை வேறுகதை)) சிலர்அதற்கு  கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.ஒருவர் நீ “லா சப்பல் பக்கம் வா! உன்னை வெட்டிக்  கூறு போட்டுவிடுகின்றோம” என்று  கழுத்து நரம்பு புடைக்கும் அளவிற்கு கத்தி கூப்பாடு போட்டிருந்தார்.அத்தோடு  விட்டுருந்தால்  பரவாயில்லை . கூடவே இன்னொரு உபரித்தகவலினையும்  தெரிவித்திருந்தார்.  நீ மட்டும் உன்னுடைய பெயருக்கு முன்னால் எழுத்தாளர் என்கின்ற அடை மொழியினை  சுயமாக போட்டுக்கொள்ளலாம்,நாங்கள் மட்டும்  பரிதியின் சாவிற்கு “வீரச்சாவு”  சர்டிபிகேட் கொடுக்கக் கூடாதா?என்பதே அந்த உபரித்தகவல்.  ஆக, அவர்களை பொறுத்தவரை பரிதியின் மரணத்திற்கு வீரச்சாவு சர்டிபிகேட் கொடுத்திருந்தமை; என்னுடைய பெயரிற்கு முன்னால் எழுத்தாளர் என்கின்ற அடைமொழி இட்டமைக்கு ஒப்பானது . எப்படியிருகின்றது இவர்களின் நியாயம்.யுத்தத்தின் பொழுது தங்களை  தாக்க வருகின்ற எதிரியினை நேருக்கு நேர் நின்று தன்னால் முடிந்தமட்டும் சண்டையிட்டு கடைசியில் முடியாமல் இறந்து போனவர்களின்  மரணத்தையினையே காலம் காலமாக நாம் வீரச்சாவு என்று எடுத்துக்கொள்கின்றோம் .ஆனால் தமிழர்களை பொறுத்தவரை குறிப்பாக ஈழத்து தமிழர்களை பொறுத்தவரை  வீரச்சாவு என்பது அவர்களின் மரபு வழி சார்ந்த ஒரு சம்பிரதாயம்.விடுதலை போராட்டத்தில் இணைந்துள்ள போராளி ஒருவர் எங்கு?, எப்படி? இறந்துபோனாலும் அவர்களின் மரணத்திற்கு  வீரச்சாவு என்றே அர்த்தம் கற்பிக்க முனைகின்றனர் .இதில் எந்தவித தவறும் இல்லைதான் .ஒப்புக் கொள்கின்றேன் .ஆனால் ஒருவர் எதிரியால் கொலைசெய்யப்பட்டாரா ?அல்லது தங்கள் இனத்தின்  துரோகிகளாலே கொலைசெய்யப்பட்டாரா ?என்பதினைப்பற்றிய எந்தவித குழப்பமும் இல்லாத  தீர்க்கமானதொரு முடிவினை அடைந்து கொள்ளாமல் சகட்டுமேனிக்கு அவரவர் விருப்பத்திற்கு அர்த்தம் கற்பித்துக் கொள்வதினைத்தான் தவறு என்று வாதிட வருகின்றேன். இதனைப் பற்றி மேலும் அறிந்து கொள்வதற்கு முதல், கொலை செய்யப்பட்ட பரிதி என்பவர்  யார் ? அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பதினை கொஞ்சம் விரிவாக பார்த்துவிடுவோம்.

பருதியின் நிஜப் பெயர், நடராஜா மதீந்தரன். யாழ்ப்பாணத்தில் 1990-ம் ஆண்டு இலங்கை ராணுவம் தீவுப்பகுதியை கைப்பற்றிய போது, விடுதலைப்புலிகள் உறுப்பினராக இருந்த பருதி (அப்போது பெயர் ரீகன்) காயமடைந்தார் . சிகிச்சைக்காக தமிழகத்துக்கு அனுப்பப்பட்டவர். 1991-ம் ஆண்டு, ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பின்னர், தமிழகத்தில் விடுதலைப் புலிகளை சி.பி.ஐ. சிறப்பு புலனாய்வுக்குழு தேடித் தேடி கைதுசெய்தபொழுது  , இவர், எப்படியோ  பிரான்ஸ் வந்து சேர்ந்தார்.(( விடுதலைபுலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்தான் இவரை பிரான்சிற்கு அனுப்பிவைத்தார் என்று ஒருசில பிரிவினரும்  ,தலைவருக்கு இவர் பிரான்ஸ் வந்த விடயமே தெரியாது ?என்று வேறுசில பிரிவினரும் கூறிக்கொள்கின்றனர்.இதில் எது நிஜம் ?எது பொய்? என்பது தலைவருக்கே வெளிச்சம் ))அதன் பிறகு புலம்பெயர் விடுதலை அரசியல் நகர்வினை பரிதி நகர்த்த ஆரம்பித்தார் .2009 யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவராக பரிதி நெடியவன் என்பவரால் நியமிக்கப்பட்டார் .தாயகத்தில் போராட்டம் முடிவிற்கு வந்தபின்னர் சர்வதேச அரங்கில் தமிழர்கள் பிரச்னையை முன்வைக்க தொடங்கினார் .மாவீரர் நாளினையும் இவரே முன்னின்று நடாத்த தொடங்கினார் .சம்பவ தினமன்று தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) அலுவலகத்தைவிட்டு பரிதி வெளிவந்தபோது, இரவு ஆகியிருந்தது. அவர் வருகையை எதிர்பார்த்து அந்தப் பகுதியில் ஸ்கூட்டர் ஒன்றில் இருவர் காத்திருந்தார்கள்.

பரிதி வெளியே வந்ததும், ஸ்கூட்டரில் இருந்தவர்கள் ஹெல்மெட் அணிந்து கொண்டார்கள். அவர்களது முகங்களை மூடும் வகையிலான ஹெல்மெட் அது. ஸ்கூட்டரை ஸ்டாட் செய்து பரிதி இருந்த இடத்தை நோக்கி சென்றார்கள். துப்பாக்கியால் ஒரு தடவை சுட்டார்கள். அது பரிதியில் படவில்லை.இதையடுத்து தனது உயிரைக் காப்பாற்ற வீதியில் ஓடத் தொடங்கினார் பரிதி. ஆனால், தப்பியோடும் அவரது முயற்சி பலிக்கவில்லை. ஓட ஓட மொத்தம் 4 தடவைகள் சுடப்பட்டு, கீழே விழுந்து, அந்த இடத்தில் உயிரை விட்டார், அவரைச் சுட்டவர்கள், ஸ்கூட்டரில் அங்கிருந்து வேகமாக சென்று மறைந்தனர்.வெளிநாடுகளில் விடுதலைப் புலிகள் இயக்கம், நான்கு பிரிவுகளாக செயல்படுகிறது. இதில் இரு பிரிவுகள் பெரியவை, மற்றும் பலம் வாய்ந்தவை. அவற்றில் ஒன்று நார்வேயில் உள்ள நெடியவன் தலைமையிலான பிரிவு. கொல்லப்பட்ட தளபதி பரிதி, அந்தப் பிரிவைச் சேர்ந்தவர்.விடுதலைப் புலிகள் நெடியவன் அணி, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருக்கும் அணி. ஒருகாலத்தில் புலிகளின் ஊடகங்கள் என அறியப்பட்டவையும், இவர்களிடம்தான் உள்ளது. அதுதான், அவர்களது பலம்.அந்த அணியின் அளவுக்கு தற்போது வளர்ந்துவிட்ட மற்றைய அணி, விநாயகம் தலைமையிலான அணி.இதன் தலைவர் விநாயகம், புலிகளின் உளவுப் பிரிவில் தளபதியாக இருந்தவர். தற்போது, பிரான்சிலும், ஜெர்மனியிலும் மாறிமாறி இருந்து வருகிறார். இந்த அணிக்கு, களத்தில் யுத்தம் புரிந்துவிட்டு, தற்போது வெளிநாடுகளில் வசிக்கும் போராளிகளின் ஆதரவு உண்டு.வெளிநாடுகளில் உள்ள கணிசமான புலி ஆதரவாளர்களும் தற்போது இவர்கள் பக்கம் சாயத் தொடங்கியுள்ளனர்.

விநாயகம் அணியின் பலம், களத்தில் யுத்தம் புரிந்தவர்கள், வெளிநாடுகளில் பண முறைகேடுகள் எதிலும் இதுவரை பெரிதாக சிக்காதவர்கள், பழைய செயல்பாட்டாளர்கள் (நெடியவன் அணி) செய்த பண முறைகேடுகளை தட்டிக் கேட்பவர்கள் என்ற பெயர். இந்த அணியின் பலவீனம், மீடியா பலம் கிடையாது.விடுதலைப்புலி ஆதரவாளர்களை வாசகர்களாக கொண்டுள்ள பெரும்பாலான மீடியாக்கள் நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருப்பதால், விநாயகம் குரூப்பின் நடவடிக்கைகள் மீடியாக்களில் துரோகச் செயல் என வெளியாகும்.அத்துடன், தமிழக அரசியல்வாதிகளுக்கான மாதாந்த பண வழங்கல்களை கொடுப்பது, சொத்துக்களை வைத்திருக்கும் நெடியவன் குரூப் என்பதால், விநாயகம் குரூப்புக்கு அந்த பப்ளிசிட்டியும் இல்லை.சமீபத்தில், இளையராஜாவின் கனடா இசை நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த ஆட்கள், நெடியவன் குரூப். அந்த எதிர்ப்புக்கு மீடியாக்களில் கிடைத்த அதீத முக்கியத்துவத்தை நீங்கள் கவனித்திருக்கலாம். அதுதான், நெடியவன் குரூப்பின் பலம். இளையராஜாவின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்கள் ‘சுற்றி வளைத்து தூரத்து சொந்தமாக’ விநாயகம் குரூப்.இப்போது உங்களுக்கு பின்னணி புரிந்திருக்கும்.இனி தளபதி பரிதியின் மரணத்துக்கு வருவோம். பாரீஸில் உள்ள விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் (கடைகள், பில்டிங்குகள், வீடுகள், மற்றும் சில பண்ணைகள்) நெடியவன் குழுவின் கட்டுப்பாட்டில் இருக்கும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு (TCC) என்ற அமைப்பின் கீழ் உள்ளது.இந்த அமைப்பின் பிரான்ஸ் பொறுப்பாளர், தற்போது கொல்லப்பட்டுள்ள பரிதி.விநாயகம் குரூப் எடுத்துள்ள நிலைப்பாடு என்னவென்றால், விடுதலைப் புலிகளின் சொத்துக்கள் என்பது, ஈழ விடுதலை போராட்டத்துக்காக மக்கள் கொடுத்த பணம். அதை நெடியவன் குழு மட்டும் எடுத்துக்கொள்ள முடியாது. அதே போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமக்கும் (விநாயகம் குரூப்) அதில் பங்கு உள்ளது என்பது.இந்த பணம் பற்றி கேள்வி கேட்க இப்போது யாரும் உயிருடன் இல்லாத நிலையில், நெடியவன் குரூப் எதற்காக அதில் மற்றைய அணிக்கு பங்கு கொடுக்க வேண்டும்? எனவே அவர்கள் பங்கு தர மறுக்கிறார்கள். இதுதான், தகராறு.கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.

கடந்த சில வாரங்களாக, இரு குழுக்களுக்கும் இடையே, இரு விஷயங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. ஒன்று, இந்த சொத்து பிரிக்கும் விவகாரம். மற்றையது, மாவீரர் தினத்தை யார் நடத்துவது என்ற விவகாரம்.பிரான்ஸில் உள்ள சொத்தில் கணிசமான பங்கை கேட்டது விநாயகம் அணி. அத்துடன், பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் உரிமையை தமக்கு கொடுக்கும்படியும், அந்த டீலின் மறுபகுதியாக, பிரிட்டனில் நடக்கும் மாவீரர் தின நிகழ்வை நெடியவன் குரூப் நடத்திக் கொள்ளலாம் எனவும் ஒரு பாக்கேஜூடன் பேசியது விநாயகம் அணி.லண்டன் மாவீரர் தின நிகழ்ச்சியில், பாரிஸைவிட லாபம் அதிகம் கிடைக்கும் என்பது ஒன்றும் ரகசியம் இல்லை.நெடியவன் அணியின் சார்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட தளபதி பரிதி, இந்த இரண்டையுமே மறுத்துவிட்டார். “உங்களால் செய்ய முடிந்ததை, செய்து கொள்ளுங்கள்” என்று சொன்னதாக கேள்வி. விநாயகம் குரூப்பும் புறப்பட்டு சென்றுவிட்டது. பாரீஸில் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தும் ஏற்பாடுகளை பரிதியே முன்னின்று செய்து கொண்டிருந்தார்.சுருக்கமாக சொன்னால், விநாயகம் அணி, பொட்டம்மானின் ஆட்கள். யுத்தத்தின்போது களத்தில் நின்றவர்கள்.நெடியவன் அணி, காஸ்ட்ரோவின் ஆட்கள். வெளிநாடுகளில் உள்ள ஓய்வு பெற்ற போராளிகள் மற்றும், வீடியோவில் யுத்தம் பார்த்த வெளிநாட்டுப் புலிகள். இவர்களிடம் சொத்து உண்டு. அவர்களிடம் துடிதுடிப்பு உண்டு.இந்த இரு அணிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை முறிந்த இரண்டாவது நாள் இரவு, பாரிஸில், இந்த அசம்பாவிதம் நடந்தது.

இந்த உண்மைத்தன்மையினைக் கூட புரிந்து கொள்ளாமல் சில இணைய ஊடகங்கள் பரிதியின் கொலைக்கான பழியினை ஒட்டுமொத்தமாக இலங்கைப்பேரினவாத  அரசாங்கத்தின் மீது சுமத்திவிட்டு ,கோத்தபாய ராஜபக்ஷ கொழும்பில் சில தமிழர்களினை ஒன்றுதிரட்டி அவர்களிற்கு துப்பாக்கி சுடுவதற்கு பயிற்சி கொடுத்தார் எனவும் புலனாய்வு செய்து செய்தி வேறு பிரசுரித்து இருந்தது . .ஐயா !ஊடக ஜாம்பவான்களே… பரிதினை கொலைசெய்வதற்கு கோத்தபாய எதற்கு  தமிழர்களை கொழும்பில் திரட்ட வேண்டும் .கூடவே அவர்களிற்கு ஆயுத பயிற்சியும் அளிக்கவேண்டும்? .50,000 யூரோ தருகின்றேன் பரிதியினை கொலை செய்கின்றாயா ?என்று கேட்டால் ,ஓஒ யெஸ் .கண்டிப்பாக செய்கின்றேன் என்று சொல்லும் அளவிற்கு  சில தமிழர்கள் ஐரோப்பாவில் குவிந்து கிடக்கின்றார்கள் .அவர்களில் ஒருவரை தொடர்பு கொண்டு கோத்தபாய  வேலையினை கனகச்சிதமாக முடிக்க சொல்லி ஆடர் கொடுத்திருக்கலாமே ?நீங்கள் சகட்டுமேனிக்கு பிரசுரித்திருக்கும் செய்தியினை ,பரிதியினை கொலை செய்திருந்த நபர்கள் பார்த்திருந்தால் நிச்சியமாக திகைத்துப்போய் இருப்பார்கள். சில நியாயவாதிகள் இதனை இந்திய புலனாய்வு துறையான “ரோ”வுடன் சம்பந்தப்படுத்தி பேசுகின்றனர் .விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து கருணாவினை பிரித்துஎடுத்தது முதல் 2011 ஆம்  ஆண்டிற்க்கான மாவீரர் தினத்தினை  இரண்டாக நடத்தியது முதலான செயற்பாடுகள் அனைத்திற்கும் இவர்கள் ரொ வின் மீதே பழியினை போடுகின்றனர் .நடந்த சில சம்பவங்களை கோர்த்துப்பார்க்கும்பொழுது உண்மை அதுவாக இருந்தாலும் பிரிபட்டு நிற்பதும் ஒவ்வொரு பிரிவிற்கு பின்னால் கூடி நிற்பதும் எங்கள் இனம்தானே ஒழிய ,ரோ வோ அல்லது வேறு எந்த மூன்றாம்தர கட்சிகளோ கிடையாது .ஓநாய் ஆட்டுமந்தைகளை  தன் தந்திரத்தால் பிரித்திருக்கலாம் .ஆனால் பிரிந்திருப்பது ஆடுகள்தானே ஒழிய ஓநாய்கள் அல்ல .நான் இப்படியெல்லாம் எழுதுவதால் என்னை தேசத்துரோகி என சிலர் முத்திரை குத்தக்கூடும்.இலங்கை பேரின அரசாங்கத்தின் கைக்கூலி என்றெல்லாம் கருதக்கூடும் .இவர்களைப் போன்றவர்களிற்கு நான் திரும்ப திரும்ப சொல்லிக்கொள்வது ஒன்றுதான் .விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் என்பவர் நிச்சியமாக தமிழர்களின் நியாயமான விடுதலைக்காகவே ஆயுதமேந்தி போராட்டம் செய்தார் .அவரின் நியாயமான இலட்சியங்களும் ,போராட்டங்களுமே அவரை தமிழர்கள் மத்தியில் தன்னிகர் இல்லாத தலைவனாக நிமிரவைத்தது என்று சொன்னால் அது மிகையில்லை .ஆனால் இப்போதுள்ள ஈழத்து விடுதலை போராட்டமென்பது என்னளவில் சிறுபிள்ளைத்தனமாகவே தோன்றுகின்றது .இத்தனை ஆண்டுகால போராட்டத்திற்கு ஒரு அர்த்தமில்லாமல் போய்விடுமோ என்றெல்லாம் நினைக்கத் தோன்றுகின்றது .தலைவர் காட்டிய பாதையில் போகின்றோம் என்று ஆளுக்காள் கூவிக்கொண்டு வேறுவேறு பாதையில் பயணித்துக் கொண்டிருகின்றோம் ..நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் என்றவோன்றினை நிருவீயிருந்தீர்கள் .பயன் என்ன ?கோமாளித்தனமாக அல்லவா இருக்கிறது

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்ற ஒருவர் மட்டும் இல்லை என்றால் ,எமக்கு இந்த ஜென்மத்தில் தமிழீழம் கிடைக்கப்போவதுமில்லை .அடுத்த 20 வருடத்தில் இலங்கையில் தமிழர்கள் என்றொரு இனம் வாழப்போவதுமில்லை .இப்படியே நமக்குள் நாமே அடிபட்டு சாக வேண்டியதுதான் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s