பாரிஸ் …பாரிஸ் …பாரிஸ் :பாகம் ஆறு .

பாரிஸ் வந்து இரண்டு வருடங்கள் ஆகியிருந்தாலும் நேற்றுத்தான் ஈபிள் கோபுரத்தில் ஏறும் சர்ந்தப்பம் கிட்டியது .986 அடி உயரமுள்ள இக்கோபுரமானது முழுக்க முழுக்க இரும்பு உருக்குகளை கொண்டே கட்டப்பட்டு இருக்கிறது .கோபுரத்தின் அடியில் இருந்து பார்த்தபொழுது  அதன் பிரமாண்டம் என்னை வியக்க வைத்தது .நான்கு கால்களும் சருக்கப்பட்டு விழுந்துவிடுமோ என்றெல்லாம் அர்த்தமில்லாமல் கற்பனை செய்து பார்த்தேன் .பனிகாலத்தில் வந்திருந்தால் மின்னும் விளக்குகளால் யோடிக்கப்பட கோபுரத்தினை தரிசித்து இருக்கலாம் .நான் வந்தது கோடைகாலம் .மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இருந்தன .கோபுரத்தில் ஏறுவதற்கு டிக்கெட் எடுக்கவேண்டும் .டிக்கெட் கொடுக்கும் நான்கு நிலையங்களும் இப்பொழுதே சனக்கூட்டங்களால் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது .எல்லோருமே தங்களின் விடுமுறையினை கழிப்பதற்காக தூர தேசங்களில் இருந்து வந்திருக்கவேண்டும்.என்னைப் போலவே அவர்களும் கோபுரத்தினை வியந்து,வியந்து  பார்த்துக்கொண்டிருந்தார்கள் . டிக்கெட் எடுப்பதற்காக நானும் அவர்களின் பின்னால்போய் நின்று கொண்டேன் .எனக்கு முன்னால் வயதான வெள்ளைக்காரர் ஒருவர் நின்றிருந்தார் .அவரின் முதுகில் சிறிய  கருப்புநிற ட்ரவலிங் பை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. மூக்கினை மறைக்கும் அளவிற்கு கண்ணாடி அணிந்திருந்தார் .என்னை கண்டதும் “இந்தியனா”என்று கேட்டார் .நான் “இல்லை .இலங்கையை சேர்ந்தவன் என்றேன்”நான் அப்படி சொன்னதும் அவரின் முகம் பிரகாசமானது .நான் உங்களின் நாட்டினை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கின்றேன்.அங்கே நடக்கும் இனப்பிரச்சனைகள் பற்றியும் படித்திருகின்றேன் .நீங்கள் தமிழா ?ஆம் .நான் தமிழன் தான் .ஓஓ …அப்படியா உங்களை சந்தித்ததில் நான் மகிழ்வடைகின்றேன் .என்னுடைய பெயர்  அண்டர்சன் .கிழக்கு பிரித்தானியாவில் அமைந்துள்ள Canning Town என்கின்ற இடத்திலிருந்து விடுமுறையினை கழிப்பதற்காக இங்கே வந்திருக்கின்றேன் .மிக்க மகிழ்ச்சி .உங்களை சந்தித்ததில் நானும் மகிழ்வடைகின்றேன் .என்னுடைய பெயர் சாதனா .அப்படியா …கோபுரத்தில் இதற்கு முதல் ஏறி இருகின்றீர்களா ?இல்லை .நான் இதற்கு முதல் ஏறியது கிடையாது .இதுவே முதல் தடவை .நானும் உங்களைப் போன்றே இப்பொழுதுதான் கோபுரத்தையே முதன் முதலில் பார்கின்றேன் .ஆனால் இதை பற்றி நிறைய படித்திருகின்றேன் .அப்படியா …எனக்கு கோபுரத்தினை பற்றி பெரிதாக எதுவும் தெரியாது .உங்களுக்கு தெரிந்த விடயங்கள் பற்றிஎனக்கும் கொஞ்சம் சொல்ல முடியுமா ?ஓஓ …கண்டிப்பாக சொல்லுகின்றேன் .அதற்கு முதல் வாருங்கள் டிக்கெட்டினை எடுத்து விடுவோம் .

கூட்டம் குறைந்திருந்தது .ஐந்து யூரோவிற்கு டிக்கெட் விற்றார்கள் .என்னுடைய முறை வந்ததும் ஐந்து யூரோ கொடுத்து டிக்கெட் ஒன்றினை வாங்கி சட்டை பையில் பத்திரப்படுத்திக்கொண்டேன்.முதியவர் எனக்கு முன்னால் சென்றுகொண்டிருந்தார் .அழகிய இளம் பெண்ணொருத்தி அவசரத்தில் என்னை இடித்துவிட்டு ஓடினாள் .கொஞ்ச தூரம் சென்றதும் என்னை திரும்பி பார்த்து “றிசொலே” (( றிசொலே என்பது தமிழில் மன்னித்துவிடுங்கள் என்று பொருள் படும் .))என்றாள் .நான் பதிலுக்கு அவளைபார்த்து மெலிதாக புன்னகைத்தேன் .பதிலுக்கு அவளும் புன்னகைத்துவிட்டு திரும்பவும் ஓடத் தொடங்கினாள் .முதியவர் இப்பொழுது எனக்கு பக்கத்தில் வந்து கொஞ்ச தூரம் இப்படியே நடந்தே ஏறுவோம் .எப்பொழுது கால்கள் வலிக்க ஆரம்பிக்கின்றதோ அப்பொழுது உயர்த்தியில் செல்வோம் .உங்களுக்கு சம்மதமா? என்றார் .பாருங்கள் அண்டர்சன், நான் என்ன நினைத்திருந்தேனோ …அதையே நீங்களும் சொல்லுகின்றீர்கள் .இதில் எனக்கு இரட்டை சம்மதம் என்றேன் .சில படிக்கட்டுகைளை தாண்டி கோபுரத்தின் முதலாவது அடுக்குக்கு நானும் ,அண்டர்சனும் வந்து சேர்ந்திருந்தோம் .அப்பொழுது நேரம் மதியம் மூன்று மணியிருக்கலாம் .சூரியக் கதிர்கள் கோபுரத்தின் மீது பட்டு தங்க நிறத்தில் ஜொலித்துக்கொண்டிருந்தது .அந்த இடத்தில் இருந்து பார்த்தபொழுது பாரிஸின் மொத்த பகுதிகளும் தெரிந்தன .அண்டர்சன், தான் கொண்டுவந்திருந்த கமராவில் காட்சிகளை படமெடுக்க துவங்கினார் .மிகவும் அழகான காட்சிகள் .நீங்கள் படமேடுக்கவில்லையா ?இல்லை நான் கேமரா கொண்டுவரவில்லை .ஓஓ ….அப்படியா ?அப்படியெனில் உங்களால் எனக்கு உதவ முடியுமா ?சொல்லுங்கள் அண்டர்சன் .நீங்கள் கேட்கும் உதவி என்னால் செய்யக்கூடியவாறு இருப்பின் நிச்சியமாக செய்வேன் .மிக்க நன்றி சாதனா .பெரிதாக ஒன்றுமில்லை .எனக்கு பிடித்த இடங்களில் நான் போய் நின்று கொள்கின்றேன் .உங்களால் அவற்றினை படமெடுத்து தரமுடியுமா ?ஆம் நிச்சியமாக செய்கின்றேன் .நன்றி .

இப்படியே சிறிது  நேரம் கழிந்தது .அண்டர்சன் என்னை காப்பி குடிக்க அழைத்தார் .கோபுரத்திலேயே ஒரு காப்பி ஷாப் அமைக்கப்பட்டு இருந்தது .பெரும்பாலான கதிரைகள் காலியாகவே இருந்தன.நானும் அண்டர்சனும் ஒரு மேசையில் போய் அமர்ந்து கொண்டோம் .இருவருமே பால் கலக்காத காப்பிக்கு ஆடர் கொடுத்துவிட்டு உட்கார்ந்திருந்தோம் .அண்டர்சன் கோபுரத்தினை பற்றி சொல்ல ஆரம்பித்தார் .சுமார் 300 தொழிலாளர்களின் உதவியோடு 1889 ஆம் ஆண்டு கட்டப்பட்டது இந்த கோபுரம் .ஆரம்பத்தில் 1889 ஆம் ஆண்டு பாரிஸில் கொண்டாடப்பட்ட   எக்ஸ்பொசிசன் யூனிவேசெல் என்கிற ஒரு உலக கண்காட்சி விழாவிற்கு ஒரு நுழைவு வளைவாகவே கட்டப்பட்டது .அதாவது குறைந்த பட்சம் இருபது வருடம் கோபுரம் இந்த இடத்தில் இருக்கலாம் என்று கூறியே இதற்கு அனுமதி வழங்கப்பட்டது .பின்னர் கோபுரத்திற்கு ஏற்பட்ட மவுசின் காரணமாக அனுமதித்திகதி காலாவதியான பின்னரும் எந்தவித அரசியல் இடைஞ்சல்களும் இன்றி இன்று வரை இக் கோபுரமானது பிரமாண்டமாய் எழுந்து நிற்கின்றது .இதுவரை சுமார் இருபத்திஐந்து கோடி பார்வையாளர்கள் இதனை தரிசித்து இருகின்றனர் .தவிர பிரான்சின் கலாச்சார விம்பமாகவும் ஈபிள் கோபுரம் விளங்குகின்றது .சிறிது நேரத்தில் நாங்கள் ஆடர் செய்த காப்பி வந்ததும் ,காப்பி கோப்பை ஒன்றினை எடுத்து அண்டர்சனிடம் கொடுத்துவிட்டு நான் எனக்கான கோப்பையினை எடுத்துக்கொண்டேன் .காப்பியினை கலக்கிக் கொண்டே ,அது சரி அண்டர்சன் …இந்தக்கோபுரத்திற்கு ஈபிள் என்கின்ற பெயர் எவ்வாறு ,எதனால் சூட்டப்பட்டது ?

இந்தக் கோபுரத்தினை கட்டிய பொறியியலாளரின் பெயர் Gustave Eiffel.கோபுரத்தினை அமைக்கும் பொறுப்பினை பிரெஞ்சு அரசாங்கம் அவரிடமே கொடுத்திருந்தது .கோபுரத்தில் மூலம் அரசாங்கத்திற்கும் நாட்டிற்கும் கிடைத்த அளப்பரிய மதிப்பின் காரணமாக பிரெஞ்சு அரசாங்கமானது Gustave Eiffelலை கொவ்ரவப்படுத்தும் முகமாக அவரின் பெயரினையே கோபுரத்திற்கு சூட்டியது .இது கட்டப்பட்ட காலத்தில், எதிர்பார்க்கக் கூடியவகையில், பொதுமக்களிடமிருந்து எதிர்ப்பு இருந்தது. பலர் இது பார்வைக்கு அழகாக இராதென்றே கருதினார்கள். இன்று இது உலகிலுள்ள மிகக் கவர்ச்சிகரமான கட்டிடக்கலைகளுள் ஒன்று என்று கருதப்படுகிறது.

தொடரும் …

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.