எனக்கு எழுத்தாளர் சாருவை அவ்வளவாக பிடிக்காது .இருந்தாலும் ஒவ்வொரு தடவை இணையதளத்தினை திறக்கும்  பொழுதும் அவருடைய கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகின்றேன் . படிக்கவும் முடியாது .படிக்காமல் இருக்கவும் முடியாது .இது எந்தவகை வாசிப்பு தன்மை என்று விளங்கவில்லை .செக்ஸ் என்பது ஒரு அருவருக்கத்தக்க விசயமாக இருந்தாலும் பூமியில் பிறந்த அனைவருமே அதை என்றாவது ஒருநாள் கொண்டாடத்தான் போகின்றோம் .சாருவின் கட்டுரைகளும் அப்படியே .என் விகடனில் அவர் தொடர்ந்து எழுதும் இந்த தொடர் கட்டுரைகளை கொஞ்சம் வாசித்து பாருங்கள் .சுவாரஸ்யமாக இருக்கும் .

மனிதர்களை விலக்கி ஒருமலைப்பயணம் .

ன்னுடைய வாசகர்வட்ட நண்பர்களை அவ்வப்போது எங்கேயாவது மனிதவாசம் இல்லாத மலைவாசஸ்தலத்தில் சந்தித்து இரண்டு மூன்று தினங்கள் அளவளாவுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஊட்டிக்கு அருகில் இருக்கும் எப்பநாடுவுக்குச் சென்றோம். EBBANADU என்பது ஊட்டியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிறிய மலைக் கிராமம். இங்கிருந்து ஐந்து கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் கீழ்நோக்கி நடந்தால், ஓர் அழகான பள்ளத்தாக்கில் ஒரு வீடு இருக்கிறது. அதைத்தவிர அந்தப் பிராந்தியத்தில் வேறு மனித நடமாட்டமே கிடையாது. அந்த வீட்டை ஒருவர் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்.  அங்கேதான் நாங்கள் பத்துப்பேர் தங்கினோம்.  ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. அந்த வீட்டுக்குச் செல்லும் பாறைகள் நிறைந்த மலைப் பாதையில் மிகுந்த சிரமப்பட்டு ஜீப் மட்டுமே செல்லும். அதுவும், மழை பெய்தால் இயலாது.  வண்டி சறுக்கிவிடும். இப்படிப்பட்ட பாதையில் என் நண்பர்கள் ஒரு டவேராவில் அத்தனைபேரின் லக்கேஜையும் என்னையும்போட்டு அனுப்பிவிட்டார்கள்.  பாதி வழியில் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. ஆனாலும், டிரைவர் படு திறமைசாலியான இளைஞர்.  அதோடு அவர் என் எழுத்தையும் படித்து இருந்தார். எப்படியும் வண்டியைக் கீழே கொண்டுசேர்த்துவிடுவதில் உறுதியாக இருந்தார். என் மற்ற நண்பர்கள் மழையில் நனைந்துகொண்டே ட்ரெக்செய்து வந்துகொண்டிருக்க வேண்டும். பேசிக்கொள்ள முடியாது; எப்பநாட்டோடு மொபைல்போன் தன் வேலையை நிறுத்திக்கொண்டது. எப்படியோ அரும்பாடுபட்டு கடைசியில், வீட்டு வாசலில் டவேராவைக்கொண்டுவந்து நிறுத்தினார் டிரைவர். வீட்டைச்சுற்றிலும் வானளாவிய மலைகள். பட்சிகளின் சத்தத்தைத்தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லாத பேரமைதியில் மூழ்கி இருந்தது அந்த இடம். வீட்டில் ஒரு சமையல்காரரும் ஒரு உதவியாளரும் இருந்தார்கள்.

என்னையும் லக்கேஜ்களையும் விட்டுவிட்டு எப்பநாட்டுக்குக் கிளம்பினார் டிரைவர். சில மணி நேரத்தில் நண்பர்களும் வந்துசேர்ந்தார்கள். மழையில் நனைந்திருந்தாலும் அவர்களின் உடம்பெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக ரத்தம் வழிந்துகொண்டு இருந்தது. அட்டை ஒவ்வொருவரின் வயிறுவரை ஏறி ரத்தம் குடித்துக்கொண்டிருந்தது. ஆனாலும் என்ன பயன்? அது தன் உணவைப் புசித்துக்கொண்டு இருக்கும்போதே, அதை அதன் உணவிடம் இருந்து பிடுங்கிஎடுத்து நெருப்பில் சுட்டார்கள் நண்பர்கள்.  நீண்ட நேரத்துக்கு அட்டை கடித்த இடத்தில்இருந்து ரத்தம் வழிந்துகொண்ருந்தது. ‘அட்டை கடிப்பது நல்லதுதான்; அது கெட்ட ரத்தத்தைத்தான் குடிக்கும். அதனால், நம் உடம்பில் உள்ள கெட்ட ரத்தமெல்லாம் போய்விடும்’ என்றார் ஒரு நண்பர். எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை. அப்போது நாங்கள் யாருமே எதிர்பாராதவிதத்தில் தொப்பலாக நனைந்து அட்டைக் கடியுடன் வந்துநின்றார் டவேரா டிரைவர்.  எப்படியோ,  எப்பநாட்டில் இருந்து கீழே பள்ளத்தாக்குக்கு வந்துவிட்ட டவேரா, திரும்பிச் செல்லும்போது மேலே ஏற முடியாமல் நடுவழியில் நின்றுவிட்டது. ‘வந்து தள்ளி விடுங்கள்’ என்றார். அடப் பாவிகளா! இப்போதுதான் அரும்பாடுபட்டு ஐந்து கி.மீ தூரம் காட்டு வழியில் ட்ரெக்செய்து வந்திருக்கிறார்கள். மறுபடியும் திரும்பப்போய் காரைத் தள்ள வேண்டுமா என்ற ஆயாசம் மிகுந்தது எல்லோருக்கும். ஆனாலும், போய்த்தானே ஆக வேண்டும்.  நல்ல வலுவான இளைஞர்கள் ஐந்து பேர் அந்தக் காரியத்துக்காகக் கிளம்பிப் போனார்கள்.  அந்த வீட்டில் மின்சாரம் கிடையாது. விஷயம் ஏற்கெனவே எங்களுக்குத் தெரிந்து இருந்ததால் ஒன்றும் அதிர்ச்சி இல்லை. வெளிச்சத்துக்கு வீட்டுக்கு வெளியே கேம்ப் ஃபயரும் வீட்டுக்குள் அரிக்கேன் விளக்கும்தான். சில மணி நேரத்தில் இன்னும் சில ADVENTURES எங்களுக்காகக் காத்திருந்தது தெரிந்தது. சமையல்காரருக்கு சமையலே தெரியவில்லை. சாம்பார் கேட்டால் வெறும் பருப்பை அவித்துக்கொடுத்தார். கருவாடு எடுத்துக்கொண்டுபோய் இருந்தோம். ‘அதைக் குழம்புவைக்கத் தெரியுமா?’ என்று கேட்டபோது ‘ஆஹா, இதென்ன பிரமாதம்?’ என்று கேட்டு, கடைசியில் அந்தக் கருவாட்டை வெந்நீரில் போட்டு மேலே மசாலாத் தூள் தூவி எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தார். டீ கேட்டால் ஒரு டம்ளருக்கு 6 டேபிள் ஸ்பூன் சர்க்கரை. இது போதாது என்று பாத்ரூமில் தண்ணீர் வரவில்லை. எல்லோரும் கிராமவாசிகளைப்போல் பாட்டில்களில் தண்ணீர் எடுத்துக்கொண்டு பாறை மறைவுகளுக்குச் சென்றோம். இதில் ஒரு ஆபத்து இருந்தது. அந்த இடத்தில் யானை மற்றும் கரடிகளின் ஆபத்து உண்டு.  வீட்டுக்கு வெளியே இருந்த பெரிய தகரக் கொட்டகையை துவம்சம் செய்து இருந்தன யானைகள். எல்லோரும் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இயற்கை உபாதைகளைக் கழித்தோம். குளிப்பதற்கு வெந்நீர் இல்லை. வீட்டின் பின்னே இருக்கும் ஒரு குழாயில் இருந்து தண்ணீர் எடுத்துவந்துதான் குளிக்க வேண்டும். உறையவைக்கும் குளிரில், குளிர்ந்தநீரில் குளிப்பது இன்னொரு சவால். துணிச்சல் மிகுந்தவர்கள் குளித்தார்கள்.”என்னுடைய வாசகர்வட்ட நண்பர்களை அவ்வப்போது எங்கேயாவது மனிதவாசம் இல்லாத மலைவாசஸ்தலத்தில் சந்தித்து இரண்டு மூன்று தினங்கள் அளவளாவுவது வழக்கம். அதன்படி சமீபத்தில் ஊட்டிக்கு அருகில் இருக்கும் எப்பநாடுவுக்குச் சென்றோம். EBBANADU என்பது ஊட்டியில் இருந்து 14 கி.மீ. தொலைவில் இருக்கும் ஒரு சிறிய மலைக் கிராமம். இங்கிருந்து ஐந்து கி.மீ. தூரத்துக்கு மலைப்பாதையில் கீழ்நோக்கி நடந்தால், ஓர் அழகான பள்ளத்தாக்கில் ஒரு வீடு இருக்கிறது. அதைத்தவிர அந்தப் பிராந்தியத்தில் வேறு மனித நடமாட்டமே கிடையாது. அந்த வீட்டை ஒருவர் பயணிகளுக்காக வாடகைக்கு விடுகிறார்.  அங்கேதான் நாங்கள் பத்துப்பேர் தங்கினோம்.  ஆனால், அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. அந்த வீட்டுக்குச் செல்லும் பாறைகள் நிறைந்த மலைப் பாதையில் மிகுந்த சிரமப்பட்டு ஜீப் மட்டுமே செல்லும். அதுவும், மழை பெய்தால் இயலாது.  வண்டி சறுக்கிவிடும். இப்படிப்பட்ட பாதையில் என் நண்பர்கள் ஒரு டவேராவில் அத்தனைபேரின் லக்கேஜையும் என்னையும்போட்டு அனுப்பிவிட்டார்கள்.  பாதி வழியில் கடுமையான மழை பிடித்துக்கொண்டது. ஆனாலும், டிரைவர் படு திறமைசாலியான இளைஞர்.  அதோடு அவர் என் எழுத்தையும் படித்து இருந்தார். எப்படியும் வண்டியைக் கீழே கொண்டுசேர்த்துவிடுவதில் உறுதியாக இருந்தார். என் மற்ற நண்பர்கள் மழையில் நனைந்துகொண்டே ட்ரெக்செய்து வந்துகொண்டிருக்க வேண்டும். பேசிக்கொள்ள முடியாது; எப்பநாட்டோடு மொபைல்போன் தன் வேலையை நிறுத்திக்கொண்டது. எப்படியோ அரும்பாடுபட்டு கடைசியில், வீட்டு வாசலில் டவேராவைக்கொண்டுவந்து நிறுத்தினார் டிரைவர். வீட்டைச்சுற்றிலும் வானளாவிய மலைகள். பட்சிகளின் சத்தத்தைத்தவிர வேறு எந்தச் சத்தமும் இல்லாத பேரமைதியில் மூழ்கி இருந்தது அந்த இடம். வீட்டில் ஒரு சமையல்காரரும் ஒரு உதவியாளரும் இருந்தார்கள்.

மின்வசதி இல்லாமல், மொபைல் போன் இல்லாமல், கணினி, பேப்பர் எதுவும் பார்க்காமல், வெளி உலகத் தொடர்பே இல்லாமல் மூன்று நாட்கள். இந்த அனுபவத்தை எப்படி எழுதுவது? என்று தெரியவில்லை. நீங்களே கற்பனைசெய்து பார்க்க வேண்டியதுதான். மொபைல், லேப்-டாப், டி.வி., செய்தித் தாள், மின்சாரம் இல்லாமல் மூன்று தினங்கள். இது தவிர, எனக்கு இன்னொரு பிரச்னையும் ஏற்பட்டு இருந்தது. எப்பநாட்டில் இருந்து டவேராவில் வரும்போது என்னுடைய அரதப் பழசான சூட்கேஸ் மழையில் நனைந்துவிட்டதால் தண்ணீர்  உள்ளேபோய் மூன்று தினங்கள் ஆடைகளையும் மாற்ற முடியவில்லை.  இவ்வளவுக்கு இடையிலும் மலைகளுக்கு நடுவே இருந்த அந்தப் பள்ளத்தாக்கை ஒரு சொர்க்கம் என்றுதான் சொல்ல வேண்டும். அடிக்கடிப் பனி மூட்டத்தால் மலைகள் கண்களில் இருந்து மறைந்தன. பனி மூட்டம் விலகும்போது மலை உச்சியில் ஒரு காட்டெருமை தெரிந்தது. முதலில் அதை ஏதோ பாறை என்றே நினைத்தோம். பிறகுதான் பைனாகுலர் மூலம் பார்த்தபோது காட்டெருமை என்று உறுதியானது.எங்கள் குழுவில் கப்பலில் வேலைசெய்யும் ஒரு செஃப் இருந்தார். பெயர் பிரபு. அந்த வீட்டில் இருந்த சமையல்காரர் எங்களைவைத்துத் தன் சமையல் திறனை சோதித்துக்கொண்டு இருந்த நிலையில் பிரபுதான் கடவுள்போல் எங்களைக் காப்பாற்றினார். நாங்கள் எடுத்துச் சென்றிருந்த கோழிகளைவைத்து முதல் நாள் சமையல் செய்தார். மறுநாள் நாங்கள் சாப்பிட்டது முழு ஆட்டில் செய்த பார்பெக்யூ. அந்த நடுக்காட்டில் ஆடு எப்படிக் கிடைத்தது என்பதுதான் இந்தப் பயணத்தின் சுவாரசியம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s