போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனென்றே விளங்கவில்லை .துன்பம் என்னை மிகையாக  துரத்துகின்றது . நான் பார்த்துக்கொண்டிருந்த வேலையில் இருந்து என்னை விலத்தி விட்டார்கள் .இது எனக்கு  கிடைத்த மூன்றாவது வேலை .அரும்பாடுபட்டு எடுத்தேன் .இப்பொழுது அதுவும் போய்விட்டது .எல்லாம் நன்மைக்கே என்கின்றார்கள் .இதில் எங்கே நன்மை இருக்கிறது. ஒன்றுமே புரியவில்லை . விசா இருந்தால் மறுவேலை ஒன்றை தேடிபிடிப்பது சுலபம் .விசாகூட இல்லை .இனி என்ன செய்யபோகின்றேன் .இருபத்தி ஐந்து வயது முடிந்து இருபத்தியாறு வயது தொடங்கபோகின்றது .இனி எப்பொழுது வேலை கிடைத்து, உழைத்து, பணம் சம்பாதித்து வந்த கடன்காசைஎல்லாம் கொடுத்து… எப்பொழுது கல்யாணம் கட்டி…எப்பொழுது குழந்தை பெற்று… எப்பொழுது அவர்களை வளர்த்து பள்ளிக்கு அனுப்பி… எப்பொழுது ஐம்பது வயதாகி செத்துப்போய் …இதெல்லாம் நடக்கின்ற காரியமாக தெரியவில்லை .பேசமால் இப்பொழுதே தற்கொலை செய்து செத்துபோனால் என்ன? ஒரு இரண்டு மாதத்திற்கு என் உறவுகள் அழும் .அதன் பிறகு “சாதனா” என்கின்ற ஒருவனையே இந்த உலகம் மறந்து விடும் .

வாழ்க்கையில் நிறைய தோற்றுவிட்டேன் .உண்மையான தாய்ப்பாசம் கிடைத்ததில்லை .உண்மையான தாய்ப்பாசம் தர வந்தவளை அம்மா என்று கூப்பிடுவதற்க்கே தவறிவிட்டேன் .பதின்வயது  பராயத்தை “மூளை வளர்ச்சி குன்றியவனின்” நிலையில் வாழ்ந்து தொலைத்து விட்டேன் .இவையணைத்தும் “சிறுமணல் துகள்கள்” போல் என் இதயத்துக்குள் கிடந்தது அரித்துக் கொண்டிருகின்றது .ஒருவருடனும் அவ்வளவாக கதைப்பதில்லை .”நான் உண்டு என் பாடு உண்டு” என்று இருகின்றேன் .சுற்றியிருப்பவர்கள் இவர் கொஞ்சம் “மனநிலை பாதிக்கப்பட்டவர்” என்கின்றனர் .உண்மையா? என்று தெரியவில்லை .நான் இப்படி இருந்தால் என்னை பற்றி அப்படித்தானே சொல்லுவார்கள் .எவ்வளவோ பேருக்கு எவ்வளவோ கிடைகின்றது .எனக்கு ஒன்றுமே கிடைப்பதில்லை .இனியும் கிடைக்குமா என்பது கேள்விக்குறி .தவிர காதலிலும் தோற்றுவிட்டேன் .மறுபடியும் ஒரு காதலியோ அல்லது மனைவியோ கிடைக்கும் பட்சத்தில் அவளை என்னால் சாதனா அளவிற்கு நேசிக்கமுடியுமா? என்று தெரியவில்லை .எது எப்படியோ. கிடைத்துத் தானே ஆகவேண்டும் .நேசிக்க கற்றுக் கொள்ளத்தானே வேண்டும் .

இதுவரை என் அண்ணாவே என்னுடைய எல்லாத் தேவைகளையும் பூர்த்தி செய்தார் .இப்பொழுது அவரும் கொஞ்சம் கொஞ்சமாக என்னை வெறுக்கின்றார் என்பது புரிகின்றது .வேறு என்னதான் செய்வார் .விசா இல்லாமல் தான் கஷ்டப்பட்டது போல்  தன் தம்பியும் கஷ்டப்பட கூடாது என்பதற்காக எல்லாவற்றையும் பார்த்து பார்த்து செய்தவர் ஆயிற்றே. இப்படி அநியாயமாக எல்லாவற்றையும் கோட்டை விட்டுவிட்டானே… என்கின்ற மனவிரக்தி இப்பொழுது வெறுப்பாய் மாறி நிற்கின்றது .அவர் மீது தவறே இல்லை .எல்லாம் என்மீதுதான்.கடவுள் எனக்கு என்ன சொல்லுகின்றான் என்றே புரியவில்லை .இன்னும் இருபத்தியேழு வயது வரை பார்ப்போம் .ஒன்றரை வருடங்கள் இருக்கிறது .அதற்குள் ஏதும் பிரயோசனமாய் நடக்கவில்லை என்றால் …பிரான்சில் சாவது எப்படி என்பதற்கு கூட வகுப்பு நிலையம் வைத்திருகின்றார்களாம்.அங்கே போய் பார்க்கவேண்டியதுதான்.

Advertisements

3 thoughts on “சாதனா (எ) நான் .

  1. ஐயகோ இது போன்ற பதிவை இந்த மனநிலையில் உள்ள ஒருவன் வாசித்தால்? விரக்தி நிரம்பி வழிகிறது சகோ.. சா தானாக வர வேண்டும் சாதனவால் கூடாது நண்பா!!!!!!!!!!!!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s