அன்புள்ள சாதனா !

உன்னை காதலிக்க  ஆரம்பித்து ,இன்றோடு சரியாக 3650 நாட்களும் ,87600 மணித்தியாலங்களும் ,5256000 நிமிஷங்களும் ,10 வருடங்களும் முடிந்துவிட்டன .மலைப்பாக இருக்கிறது .இத்தனை ஆண்டுகளாய் எப்படித்தான் என் இதயம் உன்னை சுமந்து கொண்டிருகின்றதோ ?.எங்கே இருகின்றாய் என் சாதனா .உன்னை பார்க்க வேண்டும் போல் இருக்கிறது .உன்னோடு கொஞ்சம் பேசவேண்டும் போல் இருக்கிறது .திருமணம் முடித்துவிட்டாயா ?எத்தனை குழந்தைகள் ?கணவர் என்ன செய்கின்றார் சந்தோசமாகத்தான் இருக்கின்றாயா எப்போதாவது என் நினைவுகள் உனக்குள் வருவதுண்டா இப்படி எத்தனை எத்தனையோ கேள்விகள் உன்னிடம் கேட்க வேண்டும் போல் உள்ளது .உன்னால் என்னை மறந்துவிட முடிந்தாலும் என்னால் உன்னை மறந்துவிட முடியாதடி உன் நினைவுகளினாலே முகம் கழுவுகின்றேன் .உன் நினைவுகளினாலே கழுவிய முகத்தினை துடைத்துக் கொள்கின்றேன் .உன் நினைவுகளினாலே   பஸ் பிடித்து வேலைக்கு போகின்றேன் .உன் நினைவுகளினாலே வேலை செய்கின்றேன் .உன் நினைவுகளினாலே புத்தகம் படிகின்றேன் .இப்படி உன் நினைவுகளே  என்னை அதிகம் துரத்த அப்படியே தூங்கி போகின்றேன் .காதல் என்பது ஹார்மோன்களின் சுரத்தல் என்கின்றனர் .ஒரு ரஷ்சிய அறிஞரோ காதல் என்பது, “ஒருபால் இன்னொரு பாலின் மேல் தன்னுடைய இச்சைகளை தழுவிக்கொள்ள வரைந்துகொள்ளும் சித்திரம்” என்கின்றார் .இதில் என் காதல் எந்த வகை .அநேகமாய் இரண்டாவதாக இருக்கலாம் .சரியாகத்தெரியவில்லை .

உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நான்.உலகத்தின் எங்கோ ஒரு மூலையில் நீ. என்னதான் செய்துகொண்டிருக்கின்றாய்?கடையில் இருக்கும் போதெல்லாம் நினைத்து பார்ப்பேன் நீ ஒருகிலோ அரிசியோ ஒருகிலோ சீனியோ வாங்க வரமாட்டியோ என்று. பாரிஸ் வரை வந்து விட்டேன் .அதன் தெருக்கள் முழுவதும் தேடுகின்றேன் .உன்னை ஒரு தடவையாவது பார்க்க முடியாதா என்று ? கணக்கு பாடத்தில் x= என்ன?y=என்ன ?தெரியாது.சைவ பாடத்தில், நாயன்மார்கள் எத்தனை பேர்?தெரியாது.வர்த்தகத்தில் வரவு இந்தப்பக்கம் என்றால் செலவு எந்தப்பக்கம்?அதுவும் தெரியாது.ஆனால் எப்படி யாருமே சொல்லித்தராமல் சரியாய் தெரிந்தது உன்னை காதலிக்க.நிற்க.பாரிஸில்,அன்றொரு நாள் பனி மிகையாக கொட்டிக் கொண்டிருந்தது .வேலை கிடைக்கவில்லை.ரூமில் அடைந்து கிடக்க பைத்தியம் பிடித்து விடும் போலிருந்தது.எத்தனை நேரத்திற்கு இணையத்தளத்தையே மேய்ந்து கொண்டிருப்பது.கையில் நயாபைசா கிடையாது .வழக்கம் போல் “தற்கொலை செய்து கொள்ளலாமா?” என்று யோசித்துக்கொண்டிருந்தேன். ஏதோ எண்ணம் தோன்ற திடீரென்று,  ஜாக்கெட்டையும், சப்பாத்தையும் மாட்டிக்கொண்டு இறங்கி விட்டேன் .கால் போகும் போக்கில் எங்கேயாவது போய்விட்டு வருவோம் .பிப்ரவரி மாதம் காதலர் தினம் என்பதால் ,காதலர்கள் இப்பொழுதே உற்சாகமாய் தெருவில் நடந்து கொண்டிருந்தார்கள் .கதைத்துக்கொண்டு ,முத்தமிட்டுக்கொண்டு ,பாடிக்கொண்டு ,ஆடிக்கொண்டு வகைவகையாய் காதலர்கள் .ஒரு சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோன்றியதால்,ஜாக்கெட் பாக்கெட்டினுள் கை விட்டு அந்த மல்பிரோ பெட்டியினை எடுத்து ஒரு சிகரெட்டை வெளியில் உருவி எடுத்து வாயில் சொருகிக்கொண்டேன். ஜீன்ஸ் பாக்கெட்டில் இருந்த லைட்டரை எடுத்து  சிகரெட்டுக்கு உயிர் கொடுக்கும் பொழுதுதான் அந்தப்பெண்ணை கண்டேன் .என்னால் என்னையே நம்ப முடியவில்லை .கிள்ளிப் பார்த்துக் கொண்டேன் .வலிக்கிறது. கனவல்ல நிஜம் தான்.எத்தனை வருடங்கள் அவளை பார்த்து .கொஞ்சம் பெருத்து போய் இருந்தாள்.  இடுப்பு கொஞ்சம் பெரிதாக தெரிந்தது . பிள்ளை பெற்றிருக்கின்றாள் போலிருக்கின்றது. பரவாயில்லை.தேடித் தேடி இன்றாவது கண்டு கொண்டேனே ?அவள்  சாதனா தான் .என்னை நோக்கித்தான் வருகின்றாள் .வரட்டும் ஒருதடவை பேசிப்பார்ப்போம் .என்னை நினைவிருக்கின்றதா?என்று கேட்போம் .என இதயம் குதூகலித்தது.என்னை நினைவு வைத்திருப்பாளா ?பத்து வருடங்களே.சில நேரம் மறந்தும் போயிருப்பாள் .அப்பொழுது இருந்த மாதிரியா இப்பொழுதும் இருகின்றேன். .முகத்தில் ஒரு வாலிபனுக்கு உரிய தோற்றமும் ,வித்தியாசமும் வந்து விட்டதே ,தாடி வேறு இரண்டு கிழமையாய் சவரம் எடுக்காமல் ஏகத்துக்கும் அதிகமாய் வளர்ந்திருந்தது .எத்தனை நாள் தவிப்பு ,எத்தனை நாள் தேடல் , எத்தனை நாள் காத்திருப்பு .சிவபெருமானே யு ஆர் கிரேட் .உன்னை ஏகத்திற்கும் திட்டி விட்டேன் .என்னை மன்னித்து விடு .இதோ …இதோ… இதோ… இதோ…இன்னும் ஐந்து நிமிடங்கள் தான் அவள் என்னை நோக்கித்தான் வருகின்றாள் .ஏன்?நான் தான் நிற்கின்றேன் என்று தெரிந்து விட்டதா ?என்னிடம் வந்து,  “என்னை கல்யாணம் செய்து கொள்ளுங்கள் ,என்னை என் கணவர் கொடுமைபடுத்துகின்றார்.சிகரேடினால் எல்லாம் சுடுகின்றார்.ப்ளீஸ் என்னை எப்படியாவது அந்த அரக்கனிடமிருந்து காப்பாற்றுங்கள்” என்று சொல்லப் போகின்றாளா ? அப்படியெல்லாம் சொல்லமாட்டாள் .சிலநேரம் சொன்னால்… ஐயோ என்னால் நம்பவே முடியவில்லை .இதோ வந்து விட்டாள்.முகம் சற்று பெருத்துப்போய் இருந்தது .கண்கள் உருண்டையாக இருந்தன .பத்துவருடத்தில் இப்படியா என் சாதனா மாறிப்போய் விட்டாள்.இதோ என் அருகில் தான் நிற்கின்றாள் .என்னை தன் முகமுயர்த்தி பார்க்கின்றாள் . சாதனா !என்னிடம் வந்து விட்டாயா?நான் இங்கே இருப்பது உனக்கு எப்படி தெரியும். இத்தனை வருடங்களாய் நான் உன்னை தேடுவது போல் நீயும் என்னை தேடிக்கொண்டு தான் இருக்கின்றாயா ?பதில் சொல் என் காதலியே …..பதில் சொல் ?இத்தனை வருடங்களாய் நீயும் என்னை தேடிக்கொண்டுதான் இருந்தாயா?அப்பொழுதுதான் நான் அவளை முழுமையாய் பார்த்தேன் .அவள் என் சாதனா இல்லை .வேறு ஒரு இந்தியப்பெண் .அவளின் வீட்டுக் கதவை நான் மறைத்துக்கொண்டு இருந்தபடியால் என்னிடம் வந்து என்னை தன் முகமுயர்த்தி பார்த்திருக்கின்றாள் .அதுதானே பார்த்தேன். சிவபெருமானாவது கிரேட்டாவது.

Advertisements

3 thoughts on “சாதனாவைக் கண்டேன் .

    1. நான் அப்படி சொல்லவே இல்லையே குகன்.தவறாக புரிந்துகொண்ட விட்டீர்கள் என்று நினைக்கின்றேன்.இன்னொருதடவை வாசித்துப்பார்த்தால் நலம் என்று தோன்றுகின்றது.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s