அண்மையில், “அது என்ன ?” என்கின்ற ஒரு குறும்படத்தை பார்க்க நேரிட்டது .ஏதென்ஸ் நகரினை சேர்ந்த இளம் இயக்குனர் constantin pilavios அந்த படத்தினை இயக்கி இருக்கின்றார் .ஏராளமான திரைப்படங்களையும் ,குறும்படங்களையும் பார்க்கின்றோம் .ஆனால் அதில் சிலதுகள் மட்டுமே நெஞ்சில் நிற்க கூடியதாகவும் ,சாகாவரம் பெற்றமையாகவும் அமைந்துவிடுகின்றன.ஒரு பெரிய வீடு .அதன் முன்னே அமைக்கப்பட்டிருந்த “பெஞ்சில்”ஒரு அறுபது வயது மதிக்கத்தக்க்க தந்தை ஒருவரும் ,அவருக்கு அருகிலே முப்பது வயது மதிக்கத்தக்க அவருடைய மகனும் அமர்ந்திருக்கின்றனர் .((மகன் அன்றைய தினசரியினை கையில் வைத்து வாசித்துக்கொண்டிருகின்றார் .))சிறிது நேரம் கடந்த பின் ஒரு “சிட்டுக்குருவியின்” சத்தம் கேட்கின்றது . அது என்ன சத்தம்? என்று கேட்கின்றார் தந்தை .”சிட்டுக்குருவி” என்று பதில் சொல்லுகின்றார் மகன் .சிறிது நேரத்தில் மறுபடியும்  சிட்டுக்குருவியின் சத்தம் கேட்க தந்தை மறுபடியும் அது என்ன? என்று கேட்கின்றார் .”சிட்டுக்குருவிதான் அப்பா” என்று இந்தமுறை கொஞ்சம் கோபமாக பதில் சொல்லுகின்றார் மகன் .மறுபடியும் சிட்டுக்குருவியின் சத்தம் .தந்தை வழமைபோல் அது என்ன? என்று கேட்க கோபத்தின் உச்சிக்கே  சென்று விட்டார் மகன் .”அப்பா உங்களுக்கு எத்தனை தடவை சொல்வது அது சிட்டுக்குருவி சிட்டுக்குருவி என்று”.  அமைதியாக எழுந்து செல்கின்றார் தந்தை .ஒரு பழைய டயரியுடன் திரும்பி வருகின்றார் .ஒரு குறிப்பிட்ட பக்கத்தை காட்டி “இதனை படி “என்கிறார் .மகனும் அந்தபக்கத்தினை உரத்து படிகின்றார் .“இன்று எனது மூன்று வயது மகனுடன் தோட்டத்தில் அமர்ந்திருந்தேன் .அப்பொழுது அங்குவந்த ஒரு சிட்டுக்குருவியினை பார்த்து “அது என்ன “என்று கேட்டான் .சிட்டுக்குருவி என்றேன் .அவன் விடாமல் மறுபடியும், அது என்ன… அது என்ன? என்று  கேட்டுக்கொண்டே இருந்தான் .மொத்தம் இருபத்தியொரு முறை .நானும் பொறுமை இழக்காமல் ஒவ்வொருமுறை அவன் கேட்கும் பொழுதும் அவனை கட்டியணைத்து சிட்டுக்குருவி சிட்டுக்குருவி என்று பதில் சொல்லிக்கொண்டே இருந்தேன் .”படித்துவிட்டு சிறிது நேரம் அப்படியே அமர்ந்திருந்த மகன் குற்ற உணர்ச்சி பொங்க தந்தையை கட்டிபிடித்து விம்மி விம்மி அழ தொடங்குகின்றார் .அன்று முழுவதும் எனக்கு தூக்கமே வரவில்லை .நெடுநேரமாக  கட்டிலில் புரண்டுகிடந்தேன் .அந்த வயோதிப தந்தை எனக்கு என் தந்தையை நினைவூட்டினார் .பிள்ளைகளின் எதிர்காலத்துக்காக பெற்றவர்கள் குறிப்பாக தந்தைமார்கள் எவ்வளவோ செய்கின்றார்கள் .வானத்தை காட்டுகின்றார்.பூமியை காட்டுகின்றார்.நம் கையை பிடித்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக அழைத்துச்சென்று எம்மை பரவசப்படுத்துகின்றார் .கேட்டதெல்லாம் வாங்கிதருகின்றார்.பின்னர் நாம் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் காலத்தின் நீட்சியில் அவற்றை எல்லாம் மறந்து  விடுகின்றோம் .ஒரு தாய் இறக்கும்பொழுது நாம் எவ்வளவு கண்ணீர் சிந்துகின்றோமோ அவற்றில் பாதியளவுதான் தந்தை இறக்கும்பொழுது சிந்துகின்றோம் .நம் புறச்சுழல் நம்மை அப்படி ஆக்கி வைத்திருகின்றது .

குறும்படத்தினை பார்க்க இங்கே சொடுக்கவும் .

இந்த குறும்படங்களையும் பாருங்கள் .புலம்பேர் தமிழர்கள் ஒரு வட்டத்துக்குள்ளேயே இன்னமும் சுற்றிக்கொண்டு இருக்காமல் இந்தமாதிரியான மாற்றுப்படங்களை இயக்க முன் வரவேண்டும் .

Advertisements

2 thoughts on “அது என்ன ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s