அண்மையில்,அது ஒரு பின்னிரவாக இருக்கும் என்று நினைகின்றேன்.எனது மின்னஞ்சல் பெட்டியை திறந்து பார்த்து நீண்ட காலம் ஆகின்றது என்பதால்…இன்றைக்கு திறந்து பார்க்கலாமே என்று முடிவெடுத்து திறந்து பார்த்தேன். நோர்வேயில் இருந்து ஒரு வாசகர் அனுப்பிய மெயில் ஒன்றை காணக்கிடைத்தது.பொதுவாக எனக்கு மற்றவர்கள் அனுப்பும் மெயில்லை படித்து பார்ப்பதில் பெரிதாக ஒன்றும் சுவாரஸ்யம் இல்லை என்றாலும் “இதை ஒருதடவை படித்துப் பார்ப்போமே “என்று தோன்றியதால் ஆசுவார்ஷ்யமாக படிக்க ஆரம்பித்தேன்.என்ன ஆச்சர்யம்?போகப் போகப் அந்தக் கடிதம் என்னை முழுவதுமாக ஆட்கொண்டது.என்றுதான் சொல்ல வேண்டும்.மனதுக்குள் ஒரு இனம் புரியாத சோகம் குடிகொண்டது.அந்த கடிதத்தை எனக்கு அனுப்பியவரின் பெயர் க.நகுலேஸ்வரன்.நோர்வேயில் உள்ள ஒரு கிராமத்தில் (ஆம்..கிராமம் என்றுதான் குறிப்பிட்டரே ஒழிய தான் வாழும் அந்த கிராமத்தின் பெயரை குறிப்பிடவில்லை.) கணினி துறை சார்ந்த ஒரு வேலையில் இருக்கின்றார்.திருமணம் முடித்து இரண்டு குழந்தைகள் உள்ளனவாம் .மூத்தவள் ரோஷினி .இரண்டு வயது ஆகின்றது.இளையவள் ரேஷ்மா.பூமிக்கு வந்து இப்போதுதான்  இரண்டு மாதம்.காதலித்து திருமணம் செய்து கொண்டார்களாம்.கணவன்,மனைவி இருவருமே வேலைக்கு போகின்றார்கள்.ஓரளவு வசதியான வாழ்க்கைதானாம். பெரிதாக கஷ்டம் என்று சொல்லிக் கொள்ளும் படி இல்லை.ஆனாலும் இதில் என்னை பெரிதும் பாதித்தது நகுலேஸ்வரனின் இளம்பராய வாழ்க்கை. தன் கடிதத்தில்,ஒரு கட்டத்தில் அவர் இப்படி குறிப்பிடுகின்றார்.“நான் தமிழனாக பிறந்ததிற்காக வெட்கப்படுகின்றேன்…அதிலும் யாழ்ப்பாணத் தமிழனாக பிறந்ததையிட்டு இன்னும் வெட்கப்படுகின்றேன்”   உண்மைதான் நானும் சில நேரங்களில் அப்படி நினைத்திருகின்றேன்.நகுலேஸ்வரன் தன் வாழ்க்கையில் சந்தித்த மனிதர்களை போன்று சில மனிதர்களை நானும் சந்தித்து இருகின்றேன்.ம்ம்ம்…என்ன செய்வது இவற்றை எல்லாம் நினைக்கும்போது எனக்கு சுஜாதாவின் இந்த வசனம் தான் நினைவிற்கு வருகின்றது

“மனிதர்கள் பற்பல…..அதில் அவரவர் மனங்களும் பலபல…..” 

அதிலும்,தான் பெரிதும் நம்பி இருந்த, தன்னை வளர்த்த தன் பெரியதாயினாலேயே  தான் கைவிடப்படும் நிலையை அவர் அடைந்த போது அவருக்குள் ஏற்ப்பட்ட அந்த வேதனையையும்,துக்கமும்  அவரின் கடிதத்தை வாசிக்கும் போது எனக்குள்ளும் ஏற்ப்பட்டது. மகிழ்ச்சியும்,சந்தோசமுமாக கழிய வேண்டிய தன் பதின்வயது பராயத்தை     Runt of the brain   நிலையில் இருந்து கழிக்கும் நிலைமை அவருக்கு ஏற்பட்ட போது,அதன் மூலம் அவர் அடைந்த இன்னல்களும்,அவமானங்களும் மிகப்பெரிது.ருன்ட் ஒப் தி பிரைன்னாக அவர் இருந்த பொழுது எப்படி தான் வாழும் சமுதாயம் தன்னை மதித்ததோ,அதே நிலையில் தான் இப்போதும்,அதாவது ருன்ட் ஒப் தி பிரைன்னாக இல்லாதுவாழும் இந்த நிலையில் கூட தன்னை மதிகின்றது என்று அவர் குறிப்பிடும் போது அவர் அவருக்குள் எவ்வளவு துன்பப்பட்டு இருப்பார்.எது எவ்வாறு இருந்தாலும் நகுலேஸ்வரனுக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்றுதான்.அதாவது நாம் வாழும் பராயத்தில் நமக்கு ஏற்படும் துக்கங்களும்,வேதனைகளும்…..முற்பிறப்பில் நாம் செய்த அநியாயங்களுக்கு கிடைக்கும் தண்டனையே.அது நாம் செய்த பாவமாகவும் இருக்கலாம்.அல்லது எங்களுடைய தாய்தகப்பன் செய்த பாவங்களாகவும் இருக்கலாம்.இல்லை அவர்களுடைய தாய் தகப்பன் செய்த பாவங்களாகவும் இருக்கலாம்.தீதும் நன்றும் பிறர் தர வரா” என்ற தத்துவத்தின் அடிப்படையில் பார்க்கப் போனால்,நாம் செய்வதே நமற்கு.உங்களின் முன்னோர்கள் மற்றவர்களுக்கு செய்த அநியாயத்திற்கு கடவுள் உங்களுக்கு தண்டனை தந்து விட்டான்.இனி நம்புங்கள் உங்களுக்கு அநியாயம் விளைவித்தவ்ர்களை கடவுள் நிச்சியம் தண்டிப்பான்.”அரசன் அன்று கொல்வான்.தெய்வம் நின்று  கொல்லும்.  அடுத்ததாக,நகுலேஸ் எனக்கு எழுதிய கடிதங்களை அவரின் முழு சம்மதத்துடன் உங்கள் முன் வைக்கின்றேன்.படித்துவிட்டு உங்கள் கருத்துக்கள் எதுவாக இருந்தாலும் தவறாது அனுப்பி வையுங்கள் .அப்படி நீங்கள் பட்சத்தில் அது நகுலேஸ்சுக்கு மட்டுமின்றி இந்த உலகத்தில் அவரைப் போல் வாழ்ந்து கொண்டிருகின்ற எத்தனையோ விளிம்பு நிலை மனிதர்களுக்கு ஆறுதல் அளிக்கும் அருமருந்தாக இருக்கும்.

கடிதம் ஒன்று:     

அன்புள்ள சாதனா,உங்களின் வலைமனையை படிக்கும் ஏராளமான வாசகர்களில் நானும் ஒருவன் என்று கூறிக் கொள்வதில் பெருமைப்படுகின்றேன்.இந்த மாசியுடன் முப்பது முடிந்து முப்பத்தியொன்று தொடங்குகின்றது.காதல் திருமணம்.மனைவியின் பெயர் கல்பனா.பொதுவாக காதல் திருமணம் என்றவுடன் கல்பனா என் அழகினைப்  பார்த்துத் தான் காதலித்து இருப்பாள் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.அழகு என்ற ஒன்றும் எனக்கில்லை.என் முஞ்சியையே கண்ணாடியில் ஆடிக்கொரு தடவை ஆவணிக்கொரு தடவை தான் பார்த்துக்கொள்வேன்.அந்தளவிற்கு பார்க்க விகாரமாக தோன்றும்.பின் எப்படி கல்பனா என்னை காதலித்தாள்.என் மீது அவளுக்கு ஏற்பட்ட இரக்கம்,என்னுடைய தனிமை,என்னுடைய போக்கு,இவையணைத்தும் அவளுக்கு என் மீது ஒரு பிடித்தலை கொண்டு வந்திருக்க வேண்டும்.அவளை நான் முதல் முதலாக சந்தித்த இடம்,முதல் முதலாக பேசிய வார்த்தை….எல்லாமே ஒரு நாவல் எழுதக் கூடிய அளவிற்கு ஒரு விரிவான அழகை கொண்டவை.அதைப்பற்றி பிறகு சொல்லுகின்றேன்.முதலில் என்னை பற்றி சொல்லி விடுகின்றேன்.அப்போது எனக்கு பன்னிரண்டு வயது இருக்கும்.பொதுவான பதின் வயது சிறுவர்களுக்கு இருக்கும் சந்தோசங்களும் எல்லையற்ற ததும்பும் மகிழ்ச்சிகளும் எனக்கு இருந்ததில்லை.தெருவில் போனாலே,சக பதின் வயது சிறுவர்களெல்லாம் ,என்னை “ஏய் லூசுப்பயலே”என்றுதான் அழைப்பார்கள்.சில நேரத்தில் கல்லால் கூட எறிவார்கள்.ஓடினால் “ஏய்….லூசு லூசு” என்று பின்னாலே விரட்டி வருவார்கள்.அப்போதெல்லாம் அவர்கள் என்னை ஏன் விரட்டுகின்றார்கள்,எதற்காக கல்லால் அடிகின்றார்கள் என்பது கூட தெரியாது.நான் ஒரு விசரன் என்பதற்காகவும்,என்னை விரட்டுவதில் ஒரு சந்தோசம் இருக்கிறது என்பதற்காகவும் தான் என்னை விரட்டுகின்றார்கள் என்பது அப்போது எனக்கு புரியவில்லை.சொல்லுங்கள் சாதனா…..ஒரு லூசுற்க்கு எப்படித் தெரியும் தான் ஒரு லூசு என்று.

(ஆம் நான் என் பதின் வயது பருவத்தில் “ருன்ட் ஒப் தி பிரைன்னாக” இருந்திருகின்றேன்.தமிழில் சொல்வதாக இருந்தால் மூளை வளர்ச்சி குன்றியவன்)கல்லால் எடுத்து எறியும் போது வலிக்கும்.ரொம்ப வலிக்கும்.மௌனமாக எனக்குள்ளே அழுவேன்.ஆனால் அழும் போது வலியை நினைத்து மட்டுமே அழுவேனே தவிர நான் ஒரு லூசாக பிறந்து விட்டேனே என்றெல்லாம் நினைத்து அழ மாட்டேன்.காரணம் நான் ஒரு லூசு என்று இருபது வயது தாண்டிய பிறகுதான் எனக்கு தெரிந்ததே ஒழிய அப்பொழுது தெரியாது.

தொடரும்………….

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s