சமயங்களில்,யோசித்து பார்க்கும்பொழுது நான் நல்லவனா?கெட்டவனா?என்பது எனக்கே புரிவதில்லை.சிலபேர் என்னை கெட்டவன் என்கின்றார்கள்.சிலபேர் என்னை நல்லவன் என்கின்றார்கள்.இன்னும் சிலபேர் என்னை இரண்டும்கெட்டான் என்கின்றார்கள்.நாம் செய்யும் தப்பு சிலநேரங்களில் நமக்கு புரிவதேயில்லை.நாம் நல்லவர்கள் என்று எமக்குள் நாமே நினைத்துக் கொள்வோம்.இருந்தாலும் இடையில் எம்மை அறியாமலே நாம் செய்யும் சில செயல்கள்,மற்றவர்களிடத்தில் நமக்கு ஒரு அவஅந்தஸ்தை தந்துவிடும்.எப்போதும் தனியே இருக்கத்தான் எனக்கு பிடிக்கும் என்றாலும் அது சில நேரங்களில் என்னைபற்றி மற்றவர்களிடத்தில் ஒரு தவறான உணர்வையே ஏற்படுத்தி விடுகின்றது.அது முழுக்க முழுக்க என்னுடைய தவறே ஒழிய மற்றவர்களின் தவறு கிடையாது.ஒப்புக்கொள்கின்றேன்.இருந்தாலும் நான் உங்களிடம் கேட்டுக் கொள்வது,தயவு செய்து என்னை விட்டுவிடுங்கள் .என்னை என்னுடைய வழியில் போக விடுங்கள்.நான் யாருக்கும் தொந்தரவாய் இருக்க மாட்டேன்.எனக்கும் யாரும் தொந்தரவு தரவேண்டாம். ப்ளீஸ்……ப்ளீஸ் ……..(இப்படி சொல்வதற்காக  என்னை மன்னிக்கவேண்டும்)

(நான் பெலருசில் இருக்கும் சமயம் ,எத்தனையோ மாதங்களாக உண்ணஉணவின்றி கிடந்திருகின்றேன்.வெறும் தண்ணீரை மட்டுமே குடித்துக் கொண்டும்,சிலநேரங்களில் என் நிலை கண்டு நண்பர்கள் பரிதாபப்பட்டு தரும் உணவுகளையும் தின்று வாழ்ந்து இருக்கின்றேன்.பின்னர் அண்ணா காசு அனுப்பிய பின்) ஒருநாள்.நேரம் இரவு 11 :30 அல்லது 12 :00 இருக்கலாம் கையில் மிகையாக டாலர் நோட்டுக்கள் இருந்தன.ஹோஷ்டல் ரூமில் என்னைத் தவிர யாருமே இல்லை.நண்பர்கள் எல்லோரும் வெளியே சென்று விட்டிருந்தார்கள்.அப்போதுதான் அந்த ஆசை எனக்குள் தோன்றியது. காசு கொடுத்து ஒரு வேசியுடன் புணர வேண்டும் என்பதுதான் அது.சிந்தித்துப் பார்த்தேன் ……….. நாம் இருப்பது வெளிநாடு.சொந்தம் என்று யாரும் இந்த நாட்டில் இல்லை. இப்போது வெளியே போய் கண்ணில் பட்ட ஒரு வேசியை ரூமிற்கு கூட்டி வந்தால் யாருக்கும் தெரியப்போவதில்லை.யாரும் பார்க்கப் போவதுமில்லை.இதை விட ஒரு நல்ல சந்தர்ப்பம் இனி  கிடைக்கப் போவதுமில்லை.என் நண்பர்கள் மட்டும் கிழமைக்கு ஒன்று என்று வைத்துக் கொள்ளும் போது நான் மட்டும் எதற்காக நல்ல பிள்ளை போல் நடிக்க வேண்டும்.அழுகுனித் தனமாக இருக்க வேண்டும். இப்போதே போகின்றேன்.இந்த நேரத்தில் இந்த தெருவில் வேசிகள் அதிகமாக் திரிவார்கள் என்று என்னுடைய சில ரஸ்சிய நண்பர்கள் சொல்லக் கேள்விப் பட்டு இருகின்றேன்.ரஸ்சிய மொழியும் கொஞ்சம் கதைப்பேன் என்பதால் பயம் பெரிதாகத் தெரியவில்லை.தெருவில் இறங்கினேன்.நண்பர்கள் யாரும் திரும்பி வரும் அறிகுறி தெரியவில்லை.துணிச்சலாக தெருவில் இறங்கி நடந்தேன்.மனதிற்குள் ஒரு இனம் புரியாத சந்தோசமும் அதே நேரம் ஒரு வித பயமும் ஏற்ப்பட்டது.திரும்பி போய் விடுவோமா என்றெல்லாம் நினைக்கவில்லை.எனக்குள் அப்போதிருந்த உணர்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை.இருபது வருடமாக எனக்குள் இருந்த காமத் தீ அப்போது எந்த இடைஞ்சலும் இன்றி பொங்கத் தொடக்கி விட்டது. தெருவில் போகும் பெண்களெல்லாம் வேசிகளல்ல….யாராவது ஒரு தொழில்முறை பெண்ணை கண்டு பிடிக்க வேண்டும்.கண்டு பிடித்து,”நான் உனக்கு காசு தருகின்றேன்……நீ என்னுடன் ஒரே ஒருதடவை படுக்க முடியுமா என்று கேட்க வேண்டும்.” அடிகிடைத்தாலும் கிடைக்கலாம். ஆனால் இந்த விசயத்தில் மான,அவமானங்களெல்லாம் பார்க்க முடியாது.இதோ என் பக்கத்தில் நடந்து போய் கொண்டு இருக்கும் இந்த பெண்ணை கேட்கலாமா?கேட்ப்போம்…கேட்ப்போம் என்று அவளின் பின்னாலே சென்று கொண்டிருந்தேன்.ஆனால் கேட்பதற்கு தைரியம் வரவில்லை.கிட்டத்தட்ட ஒரு ஒருமணிநேரம் அவளின் பின்னால் அலைந்ததுதான் மிச்சம்.பிரயோசனமே இல்லை.கேட்பதற்கு தைரியமே வரவில்லை.நேரம் கூட ஒன்றை தாண்டி இருக்கும்.கடைசியில் அவள் அவள்இருக்கும் வீட்டுக்கு போனதுதான் மிச்சம்.ஒன்று கூட திருப்தியாய் நடக்கவில்லை.பேசாமல் திரும்பி வந்து விட்டேன்.இந்த பத்தியை வாசிக்கும் சிலபேர் நான் பொய் சொல்லுகின்றேன்…..அன்றிரவு எதாவது ஒரு வேசியை ரூமிற்கு கூட்டி வந்திருப்பான்.என்றுதான் நினைப்பார்கள்.ஆனால் நிச்சியமாய் தான் சொல்லுகின்றேன்.எனக்குள் இருந்த ஆசைகள் உண்மை.இன்று எப்படியாவது இன்னுடைய இச்சைகளை தீர்த்து விட வேண்டும் என்றுதான் நினைத்தேன்.ஆனால் அந்த சந்தர்ப்பம் எனக்கு கிடைக்க வில்லை. நான் திருப்பியும் சொல்லுகின்றேன்.”இதெல்லாம் தப்பு…மனைவிற்கு செய்யும் துரோகம்” என்றெல்லாம் நினைத்து திரும்பி போகவில்லை.சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.அதுதான் திரும்பிவிட்டேன்.ஒரு வேலை சந்தர்ப்பம் கிடைத்து இருந்தால்……நிச்சயமாக தப்பு செய்திருப்பேன்.சிவபெருமானே…….சந்தர்ப்பம் கிடைத்தபொழுது உமா தேவியாருக்கு துரோகம் செய்தபோது சாதாரண மானுட அற்பன் நான்.நான் மட்டும் திரும்பி வந்திருப்பேனா..என்ன?  (இப்போது சொல்லுங்கள் நான் நல்லவனா?கெட்டவனா? அண்ணா அங்கே இருந்து கஷ்டப்பட்டு உழைத்து, எனக்கு அனுப்பிய காசை எப்படியெல்லாம் செலவழிக்க தீர்மானித்து இருக்கின்றேன். எப்படிப்பட்ட மானுடன் நான்.இப்போது கூட…இந்த பாரிஸில் கூட….அழகான பெண்ணகளை கண்டால்…அவர்களில் உள்சமாச்சாரங்கள் எப்படி இருக்கும் என்று யோசித்து பார்ப்பேன்.கல்யாணம் கட்டி இரண்டு குழந்தைகள் இருக்கும் பெண்கள் கூட இதற்கு விதிவிலக்கு இல்லை.)

ஒரு கடையில் இரண்டு வருடங்களாக காசாளராக பணிபுரிந்தேன்.நான் நினைத்து இருந்தால் அந்தக் கடையில் கள்ளக் கணக்கு எழுதி எவ்வளவோ சம்பாதித்து இருக்கலாம்.அல்லது நிர்வாகி கணபதி மாதிரி, வரும் இஸ்லாமிய வாடிக்கையாளரை கைக்குள் போட்டு கள்ளப் பணம் சம்பாதித்து இருக்கலாம்.அப்படியெல்லாம் செய்தது கிடையாது.அப்படி செய்ய நான் ஒருநாள் கூட நினைத்தது இல்லை.மனசாட்சிக்கு பயந்தே நடந்து கொள்வேன்.நான் நானாகவே இருப்பேன்.என் மனம் எதை செய்ய சொல்கின்றதோ அதை மட்டுமே செய்வேன்.(இப்போது சொல்லுங்கள்…..நான் நல்லவனா?கெட்டவனா ?)

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s