அப்பாடா……..ஒருவழியாக வேலை கிடைத்து விட்டது.ஒரு இத்தாலியன் ரேஷ்தோரந்தில் கோப்பை கழுவும் வேலை.கஷ்டப்பட்டு வேலை செய்யும் அனுபவம் இப்போதுதான் ஆரம்பம் என்பதால்,முதுகு தண்டு ஏகத்துக்கும் செமையாக வலிக்கின்றது.கோப்பைகளை தேய்த்து தேய்த்து கைகள் சிலநேரங்களில் உதறத் தொடங்கிவிடும்.ஒரு வேலை முடிந்துவிட்டால்..அப்பாடா என்று இருந்து விட முடியாது அதற்குள் வேறு வேலை வந்து விடும்.அதைசெய்,இதைசெய் என்று ரேச்டோரந்த் உரிமையாளர் எதாவது ஒரு வேலையை சொல்லிவிடுவார்.வேலையை ஒழுங்காக செய்யாவிட்டால் சிலநேரங்களில் திட்டுக்கூட கிடைக்கும்.எனக்கு பிரெஞ்சு சுத்தமாகத் தெரியாது என்பதால் அவர் என்ன திட்டுகின்றார்,ஏன் திட்டுகின்றார் என்பதே பல சமயங்களில் புரிவதில்லை.சிதம்பரச்சக்கரத்தை பேய் பார்த்தமாதிரி பார்த்துக்கொண்டு இருப்பேன்.இருந்தாலும் அவருக்கு என்னை பிடித்திருக்கின்றது என்பது மட்டும் எனக்கு தெளிவாகத் தெரிந்து விட்டது.சற்சமயங்களில் அவர் என்னிடம் வந்து எப்படி இருக்கின்றாய்?…உடம்பிற்கு வலிக்கின்றதா?என்று கேட்டு குடிப்பதிற்கு எதாவது ஒரு பானத்தை கொண்டு வந்து தருவார். வேலை தெரியவிட்டாலும் சொல்லித் தருவார்.காலை பத்தரை மணிக்கு வேலை தொடங்கினால் ராத்திரி பன்னிரண்டு அல்லது பன்னிரண்டரை மணி வரை வேலை நீளும்.இடையில் இரண்டு மணித்தியாலம் brake தருவார்கள்.வீட்டுக்கு போய்விட்டு வரலாம்தான்,ஆனால் எதற்காக டிக்கெட்டை வெஸ்ட் செய்யவேண்டும் என்று கடையிலேயே இருந்து ஒரு ஓரமாகப்போய் நான் வழமையாகக் கொண்டுசெல்கின்ற புத்தகங்களில் ஒன்றை எடுத்து புரட்ட ஆரம்பித்து விடுவேன்.

கடைக்குள் நுழைந்ததுமே….முதல் வேலையாக தும்புத்தடியை எடுத்து கடை முழுவதையும் கூட்டவேண்டும். ஒரு கஞ்சல் கீழே இருக்ககூடாது.இருந்தால் முதலாளி திட்டுவார்.கூட்டி முடித்தபின் மோப் பண்ண வேண்டும்.கக்குஸ் உட்பட.கடையைக்கூட ஒரு நாளைக்கு ஒரு தடவைதான் மோப் செய்கின்றேன்.ஆனால் கக்கூசை இரண்டு தடவை மோப் செய்கின்றேன்.ம்ம்ம்….என்ன செய்வது,வெளிநாடு என்று வந்து விட்டேன்…..இனி கக்குஸ் ஓட்டைக்குள் கையை விட்டு கழுவு என்று சொன்னாலும்…..கழுவித் தான் ஆகவேண்டும்.(சிறிலங்காவில் இருக்கும் போது பட்டத்து ராஜா மாதிரி காசாளர் பட்டறையில் இருந்தேன்.அங்கே எனக்கு சாப்பாடு வாங்கித்தரவென்றே ஐந்தாறு பேர் இருந்தார்கள்.அதையெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தாலும் கண்கள் கொஞ்சம் நனையத்தான் செய்கின்றது.)அதை கழுவி முடித்த பின்,எதாவது கீரைகள்,கரட்டுகள்,தக்காளிகள் என்பவற்றை நறுக்கி வைக்க வேண்டும்.அதன் பின்னர் தான் தொடங்குகின்றது என் கோப்பை கழுவும் வேலை.கழுவ ஆரம்பித்தால் கழுவு…….கழுவு ……கழுவு …….கழுவு ……..கழுவு ……….கழுவு ……..என்று கழுவிக் கொண்டே இருக்க வேண்டும்.நின்று கொண்டே கழுவ வேண்டும் என்பதால் கால்கள் பயங்கரமாய்….வலிக்க ஆரம்பிக்கும்.அங்கே….இங்கே ..என்று நடந்து கொண்டிருந்தாலும் கால் வலி பெரிதாகத் தெரியாது.இது அப்படி இல்லை.ஒரே இடத்தில் தொடர்ந்து நிற்க வேண்டும்.வலி காலிலிருந்து அப்படியே சுர்ரென்று…..முதுகிற்கு ஏறும்.கை மூட்டுகள் எல்லாம் பயங்கர அவஸ்தை கொடுக்கும்.எப்படா…வேலை முடியும்,வீட்டுக்குப் போய் பெட்ஷீட்டை போர்த்தி தூங்கலாம் என்று நினைக்கும் அளவிற்கு கடுப்பாக இருக்கும் .மணியை பார்த்தால்,அன்று  ஏதோ காய்ச்சல் வந்த மாதிரி ரொம்ப மெது….மெதுவாகத் சுத்திக் கொண்டு இருக்கும்.ஒருகணம் தூக்கி அப்படியே உடைத்து விடலாமா…..என்று தோன்றும்.இவற்றை எல்லாம் செய்து விட்டு நடுநிசி வரும் போது,அய்யய்யோ….டைம் ஆகிவிட்டதே,சீக்கிரமாக முடித்தால் தானே….ட்ரைன் பிடிக்கலாம் என்று எல்லா வற்றையும் அவசரம் அவசரமாக செய்தால்….கை தவறியோ…அல்லது தட்டுப்பட்டோ எதாவது ஒரு பொருள் கீழே விழுந்து உடைந்து விடும்.நாசமாப் போக……….என்று வாயில் வந்தபடி எனக்குள் நானே திட்டி விட்டு,தலையில் அடித்து நொந்து விட்டு…..சிதறிப் போய் இருந்த கண்ணாடி துண்டுகளை கூட்டி,குப்பைத் தொட்டியில் போட்டு விட்டு,கடகட …..என்று மோப் செய்து விட்டு….. டைம் பார்த்தால்…பன்னிரண்டு தாண்டி இருக்கும்.பின் நட நட என்று நடந்து ட்ரைன் ஸ்டேஷன் சென்றால்,பல நேரங்களில் ட்ரைன் கிடைக்காது.நேரம் ஒன்றை தாண்டி விட்டால்,நைட் பஸ்தான் எடுக்க வேண்டும்.

இதில்,இங்கே நான் எனக்கு சம்பளம் கொடுக்கும் என் முதலாளியை பற்றி கொஞ்சம் சொல்லியே ஆகவேண்டும்.இப்படி ஒரு முதலாளியை நான் இது வரை பார்த்ததில்லை. இவர்தான் குக்.கிச்சனில் முழு வேலைகளையும் இவர்தான் செய்வார்.பிட்சா போடுவதிலிருந்து தொடங்கி,கடைசி அடுப்பு கழுவும் வரை எல்லா வேலைகளையும் இவர்தான் செய்வார்.மற்றவர்கள் வந்து…..விடுங்கள் நான் செய்கின்றேன் என்று சொன்னாலும்,இல்லை……என்னுடைய வேலைகளை நான் தான் பார்க்க வேண்டும் என்று கூறிவிட்டு,தொடர்ந்து போய்க்கொண்டே இருப்பார்.எனக்கு சரி இரண்டு மணித்தியாலம் ஓய்வு.ஆனால் அவர் அப்படி இல்லை ஓய்வே எடுக்க மாட்டார்.காலை பத்து மணிக்கு கடைக்கு வந்து வேலையை ஆரம்பித்தார் …….என்றால் அப்படியே தொடர்ச்சியாக பன்னிரண்டு மணிவரை வேலை செய்து கொண்டே இருப்பார்.கேட்டால் என் கடையில் நான் செய்யாமல் வேறு யார்… செய்வது என்பர்.  எழுவது சதவீதமான வேலைக்கு தன்னையும் தன் பலத்தையும் மட்டுமே நம்பி இருக்கின்றார்.மீதி முப்பது சதவீதமான வேலைகளுக்கு மட்டுமே தொழிலாளிகளை நம்பி இருகின்றார்.(இதே சிறிலங்காவில் என்றால் முதலாளி என்பவன் அடுப்பறை பக்கமே வரமாட்டான்.வந்தால் அவன் கு……………..தொடக்கம் முகம் வரை புகை அப்பி விடுமாம்.)அவரிடம் நான் கற்றுக் கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கின்றது.அவர் என்னை பார்க்காதபோது,அடிக்கடி அவரைப் பார்த்து அவர் செய்யும் வேலைகளையும்,அதில் தெரியும் சுத்தத்தையும் பார்த்து வியந்து கொள்வேன்.இத்தனைக்கும் அவருக்கு எத்தனை வயது என்று நினைகின்றீர்கள்.கல்யாணம் கட்டி ஆறு வயதில் ஒரு பெண்குழந்தை இருக்கின்றது.கணவர் கடைப்பக்கம் அடிக்கடி வர மாட்டார்.எப்போதாவது வருவார்.ஆம்……… என் கடை முதலாளி முப்பத்தைந்து வயதை தாண்டிய ஒரு பெண்.

பெரும்பாலான….பாரிஸ் மனிதர்களிடம் நான் இனத்துவேசம் என்பதை கண்டதே இல்லை.அவர்கள் எல்லா மனிதகளையும்,எல்லா மதத்தினரையும் சமமாகவே பார்க்கின்றனர்.மதிக்கின்றனர்.(ஒரு சில பதின் வயதை உடைய இளைய சமுதாயத்தினரே இதற்க்கு விதி விலக்காக உள்ளனர்.)இதே நம் சிறிலங்காவில் இனத்துவேசம் என்பது வெறும் செயல் வடிவில் மட்டுமல்லாது,அது தொலைக்காட்சி விளம்பரத்தில் கூட அப்பட்டமாக தெரிகின்றது.உதாரணத்திற்கு சமிபத்தில்(நான் சிறிலங்காவில் இருக்கும் போது)ஒரு தொ.விளம்பரத்தை பார்த்தேன்.அது இப்படி வருகின்றது.ஒரு வணிக ஸ்தாபனம்.அதில்,ஒரு சிங்கள முதலாளியிடம் தான் கொடுத்த பொருளுக்கான காசோலையை பெற்றுகொள்ள வருகின்றார் ஒரு வணிகர் .அந்த குறிபிட்ட சிங்கள முதலாளி ஒரு பங்கின் காசோலையை எடுத்து கொடுக்கின்றார் .பக்கத்தில் ஒரு தொழிலாளி கிழிந்த பனியனையும் போட்டுகொண்டு …..தொடை தெரிய கலுசானையும் போட்டுக் கொண்டு ஒரு கோமாளியைப் போல் தோற்றம் தருகின்றார்.பத்தாதற்கு நெற்றியில் விபுதியும் வைத்து இருகின்றார் .பாருங்கள் ….எப்படி இருகின்றது விளம்பரம் .சிங்களவர்களுக்கு தன் விளம்பரத்தில் உண்மைத்தன்மை இருக்கின்றதா ?இல்லையா …என்பது பற்றி கவலையே கிடையாது .தமிழர்களை இழிவு படுத்த வேண்டும் என்றே கங்கணம் கட்டிக் கொண்டு திரிகின்றார்கள் .நான் இந்த விளம்பரத்தை எடுத்த விளம்பர நிறுவனத்திடம் ஒரு கேள்வி கேட்கின்றேன் .கொழும்பில் எங்கே ஐயா சிங்களவன் மொத்த வியாபாரம் செய்கின்றான்.அதுவும் கோட்டையில் .இருக்கின்றார்கள் தான் நான் இல்லை என்று சொல்லவில்லை.ஆனால் நுற்றுக்கு ஒரு சதவீதத்தினரே கடை வைத்து இருகின்றனர் .அதில் தமிழர்கள் யாருமே தொழிலாளிகளாக இருக்க மாட்டார்கள் .தமிழ் முதலாளி மாரின் கடைகளில் தான் எக்கச்சக்கம் சிங்கள தொழிலாளிகள் அதுவும் அன்றாடம் காச்சிகளாக இருகின்றனர் .உதாரணத்திற்கு நாட்டாமையை எடுத்துக் கொள்ளுங்கள் .(நாட்டாமை என்றவுடன் யாரும் இந்தியாவில் இருகின்ற எட்டுப்படி ராஜாக்களை நினைத்து விட வேண்டாம் .சிறிலங்காவில் நாட்டாமை என்றால் மூட்டை தூக்குபவர்களை குறிக்கின்றது )உண்மை இப்படி இருக்கும் பொழுது ஏன் உங்கள் சுய இன்பத்திற்காக ,உங்களின் மிதமிஞ்சிய துவேசத்திற்காக பொய்யான ஒரு கற்பனை விளம்பரத்தை புனைகின்றிர்கள். அதுசரி ….. புனைவு என்பதுதான் உங்களுக்கு கைவந்த கலை ஆயிற்றே……..இந்தியாவிலிருந்து வந்து ,எங்களின் நாட்டை அபகரித்து விட்டு இது சிங்களவர்களின் தேசம் என்று தம்பட்டம் அடித்தவர்கள் தானே ……உங்களுக்கு விளம்பரதிரிப்பு என்பது ஒரு பெரிய விஷயமே இல்லை .

பாரிஸில் நான் பார்த்து வியந்த மற்றொரு விஷயம்,அவர்களின் சுத்தமும் ஒழுங்கும் .நேரம் என்பது இவர்களுக்கு முக்கியம் .நம்மைப் போல் இதை நாளை செய்வோம்,அல்லது பிறகு செய்வோம் என்று இருந்து விட மாட்டார்கள்.அன்றைய தின வேலையை அன்றைக்கே செய்து விட வேண்டும் என்பது இவர்களின் இயல்பு .குறிப்பிட்ட பஸ் இந்த நேரத்திற்கு வரும் என்றால் வந்தே தீரும்.ஒரு நிமிஷம் கூட முந்தியோ……பிந்தியோ வந்து நான் பார்த்ததில்லை .சாலை விபத்து என்பது இங்கே மிகமிக குறைவு.ஒரு சில இளம் பருவ சமுதாயத்தினரால் மட்டுமே சிறிய விபத்துக்கள் நடக்கின்றன. கடைசியாக நடந்த ஒரு மிகப்பெரிய சாலை விபத்து என்று சொன்னால் அது லண்டன் இளவரசி டயானாவின் மரண சம்பவம்தான்.அதன் பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு மிகப்பெரிய சாலை விபத்தும் நடக்க வில்லை.அந்த அளவிற்கு பாரிஸ் மக்கள் படித்தவர்களாகவும் திறமை மிகவர்களாகவும் உள்ளனர் .இதே சிறிலங்காவில் என்றால் ஒருநாளைக்கு குறைந்தது ஒரு முப்பது சாலை விபத்துக்களாவது நடந்து விடும் .படித்தவர்களை வேலைக்கு அமர்த்தினால் தானே ……….சிங்களவர்களையும் துவேசம் பிடித்த கயவர்களையும் வேலைக்குப் போட்டால் இப்படித்தானே …நடக்கும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s