ஒருகாலத்தில்,தென்கிழக்கு ஆசியாவின் முத்து,வைரம் என்றெல்லாம் புகழப்பட்ட நாட்டில் வாழ்ந்து வந்த நான்இன்று வந்தேறுகுடிகளின் மூலம் நசுக்கப்பட்டு வாழ வழிஇல்லாமல் பிரான்ஸ் என்கின்ற இந்த நாட்டுக்கு பிழைப்பதற்காக தஞ்சம் புகுந்து விட்டேன்.இத்தோடு ஏழு மாதங்கள்.அரசாங்கம் தருகின்ற சொச்சக் காசை எடுத்துக் கொண்டு வாழ்க்கையை ஓட்டிக் கொண்டு இருக்கின்றேன் .இன்னும் வேலை கிடைக்கவில்லை.பிரான்ஸ் என்றால் ஏதோ சொர்க்கம் என்று நினைத்து வந்த எனக்கு இன்று ஏன்டா………இந்த நரத்திற்க்கு வந்தோம் என்றெல்லாம் யோசிக்க தோன்றுகின்றது.பேசாமல் அங்கேயே இருந்து இருக்கலாம்.என் நண்பர்கள் எத்தனையோ பேர் சொன்னார்கள்…….இங்கே வராதடா…….இங்கே வராதடா …….என்று கேட்டால்தானே.இவர்கள் ஏதோ கடுப்பில் சொல்லுகின்றார்கள் என்று நினைத்து ஆப்ரிக்கா தேசம் எல்லாம் சென்று குண்டி கழுவுவதற்கு கூட தண்ணீர் இல்லாமல் கஷ்டப்பட்டு இங்கே வந்தால்,நமக்காக காத்திருப்பதோ வேறொன்று…..!சரி…..ஏதோ வந்து விட்டோம்.இனி நடப்பது நடக்கட்டும்.கஷ்டப்பட்டு உழைத்தாவது வந்த கடனையாவது கொடுத்து விடுவோம்..என்று வேலை தேடினால், ம்ம்ம்ம் ……. கக்குஸ் கழுவுற வேலை கூட கிடைக்க வில்லை .இப்படியே இன்னும் எத்தனை நாளைக்குத்தான்…..இருபத்தி நான்கு வயதாகி விட்டது எப்போது வேலை கிடைத்து…..எப்போது சம்பாதித்து …….எப்போது கடன் காசையெல்லாம் கொடுத்து……..தங்கைக்கு சீதனம் கொடுத்து ……..எப்போது கல்யாணம் கட்டி …..எப்போது பிள்ளை பெற்று ……?நடக்கின்ற காரியமா ?கொஞ்சம் அழகாய் பிறந்திருந்தால் கூட ஒரு பாரிஸ் தமிழ்பெண்ணாகப் பார்த்து கல்யாணம் கட்டி விசா எடுத்திருக்கலாம்.கடவுள் விட்டால்தானே…..?நாசமாப்போற கடவுள்…அதையாவது கொடுத்திருக்கலாம்.

சுய புராணம் போதும் என்று நினைகின்றேன்.கொஞ்சம் பாரிஸ் பற்றி சொல்லுகின்றேன்.ஐரோப்பாவின் இரண்டாவது மிகப் பெரிய பலம் பொருந்திய நாடு என்று சொல்லுமளவிற்கு…..இங்கே வசதிகள் குவிந்து கிடக்கின்றன…!இல்லாத வசதிகளே இல்லை என்று சொல்லலாம்.உதாரணத்திற்கு ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னால் மக்கள் போக்குவரத்திற்கு என்றே இங்கே பல வசதிகள் உள்ளன.பஸ்,மெட்ரோ(புகையிரத நிலையத்தை இங்கே மெட்ரோ என்றுதான் சொல்லுகின்றார்கள்) ட்ரம்(ட்ரம் என்றால் …..என்ன என்று புரியாதவர்கள்..என்னுடைய பாரிஸ் …பாரிஸ் ……பாரிஸ் ….பாகம் ஒன்றை படித்துப்பார்க்கவும்.)என்று ஏகப்பட வசதிகள்.இதே ஸ்ரீலங்காவில் என்றால், இருக்கும் வசதிகளையும் அடுத்து வரப்போகின்ற அரசியல் வாதிகள் பிடிங்கிக் கொள்ளத்தான் முனைவார்கள். சபிக்கப்பட பூமியின் மேல் நாம் எவ்வளவுதான் பச்சாதாபம் கொண்டாலும் அது மாறுவது கடினம் என்றே தோன்றுகின்றது.இந்தியாவிலிருந்த பிழைக்க வசதி இல்லாமல் எங்கள் நாட்டுக்கு மீன் பிடித்து வாழ வந்த பறையர்கள் எல்லாம் எம்மை பார்த்து (நாம் யாழ்ப்பாணமாக இருந்தால் ) பனங் கொட்டை என்று சொல்லுகின்றார்கள்.ஆனால் இங்கு பாரிசிலோ,நாம் அவர்களைப் பார்த்து கிண்டல் அடித்தாலும் அவர்கள் எங்களை பதிலுக்கு கிண்டல் அடிக்க மாட்டார்கள்.மாறாக எங்கள் மீது ஐயோ …..பாவம் அகதிகள் என்று ஒருவித இரக்கமே கொள்வார்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s