இன்றோடு நான்கு மாதங்கள் ஆகிவிட்டது நான் பாரிஸ் வந்து.அதைப்பற்றி சொல்லலாம் என்றுதான் முதலில் யோசித்தேன்.ஆனால் அதைப்பற்றி சொல்லாமல் முதலில் நான் மூன்று மாத பப்பி(விசா) எடுத்ததைப் பற்றி சொல்லுகின்றேன். திங்கட்க்கிழமை முந்தின இரவே சொல்லிவிட்டார் நாளைக்கு ஒரு ஐந்து மணிபோல் எழும்பு என்று.சிவனே என்று நொந்து விட்டு எப்படியோ சமாளித்துக்கொண்டு திட்டமிட்டபடியே அலாரம் வைத்து ஐந்து மணிக்கெல்லாம் எழும்பி விட்டேன்.குளிர் தண்ணியில் முகத்தை அலம்பிவிட்டு பல் துலக்காமல்(கவனிக்க:பல் துலக்காமல்)தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் எழும்பி விடாமல் பூனை போல் மெதுவாக சப்பாத்தையும் கோர்ட்டையும் மாட்டிக்கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்து ஒரு நான்கு நிமிடம் நடந்து ட்ராம் கோல்ட் சென்று ட்ராம்மிற்காக காத்திருந்து அது வந்தவுடன் அதில் ஏறியபோது மணி 5 : 45 தாண்டி இருந்தது.பப்பி என்பது இந்த நாட்டின் சட்டத்தின் பிரகாரம் ஒரு வெளிநாட்டுப்பிரஜை தனக்கு ஒரு உண்மையான வதிவிட வசதியை குறிப்பிட்ட நாடு வழங்கும் முன்னர் அது சம்பந்தமான குறிப்பிட்ட ஒரு சில தனி மனித சுகந்திரத்திற்காக பெற்றுக்கொள்ளும் ஒரு ஆவணம்.பெயர் பிறந்த ஆண்டு பிறந்த நாடு போட்டோ எல்லாம் போட்டு தருவார்கள்.அதை எடுத்துக் கொண்டுதான் வெளியில் செல்ல வேண்டும்.மாட்டினால் கம்பி என்னும் ஒரு மகத்தான வேலை கிடைக்கும்.

 டிராமில் போவதே ஒரு அலாதியான அனுபவம்தான்.  ஒரு மிகப்பெரிய தெருவிற்க்கு நடுவில் ஒரு புகையிரதப் பாதை போல் அமைத்து அதன் மேல்  இரண்டு பஸ்களை இணைத்தது போல் ஓடவிட்டு இருப்பார்கள்.வளைந்து நெளிந்து அதுபட்டு அது போய்க் கொண்டே இருக்கும்.ஒரு தடவை நாம் டிராம்மில் போவதென்றால் இரண்டு யூரோ காசு கொடுக்க வேண்டும்.(நம்ம ஊர் காசுப்படி 250 ருபீஸ்)கொஞ்ச தூரம் தானே போகப் போகின்றோம்.அதற்கு எதற்க்கு 2 யூரோ கொடுக்க வேண்டும் என்று நினைத்து டிக்கெட் எடுக்காமலும் போகலாம்.ஆனால் பிடிபட்டால் தலைக்கு 40 யூரோ கட்ட வேண்டும்.அதற்கு இரண்டு யூரோ செலவளிப்பது உத்தமம்.

 பொபிணி.எனக்கான போலீஸ்.இவர்களிடம் என் பப்பி விஷயமாக வந்து இருக்கின்றேன்.இப்போதே இருநூறு முன்னூறு பேர் லைனில் நின்று கொண்டு இருந்தார்கள்.திக் கென்று இருந்தது.பப்பி கிடைப்பது சந்தேகம்தான்.மனழ வேறு லேசாகத் தூறிக்கொண்டு இருந்தது.சரி இருந்துதான் பார்ப்போமே என்று நின்று கொண்டே இருந்தேன்.   போலீஸ் ஸ்டேஷன் நீலக் கலரில் பெயிண்ட் அடிக்கப் பட்டு அட்டகாசமாக இருந்தது.நேரம் எட்டை தாண்டி விட்டிருந்த போது லேசாக பின்னால் திரும்பி பார்த்தேன்.இப்போது எனக்கு பின்னால் ஒரு நூறு பேர் சேர்ந்துவிட்டு இருந்தார்கள்.கறுப்பர்கள்,ஈரானியர்கள்,ஆப்கான் தேசத்தவர்கள்,இந்தியர்கள்,வியட்னாமியர்கள் என பல்வேறுபட்ட மக்கள் தங்களின் வதிவிட உரிமையை பெற்றுக் கொள்ள நின்றார்கள்.8:30 க்கு டொக்கென் கொடுக்கப்பட்டது.நான் எதிர்பார்த்தது தான்.டொக்கென் கிடைக்கவில்லை.அன்று நூற்றி எழுபது பேருக்கு தான் டொக்கென் கொடுக்கப்பட்டது.நான் இருநூறாவது ஆள்.

திரும்பவும் விதியே என்று நொந்து விட்டு அடுத்தநாள் காலையில் திரும்பவும் அதே மாதிரி வந்து நின்றேன்.அன்றைக்கு கொடுக்கப்பட்ட டொக்கெனின் எண்ணிக்கை நூற்றி தொண்ணூறு.நான் இருநூற்றி பத்தாவது ஆசாமி.திரும்பவும் விதியை நொந்து கொண்டேன்.ஆனால் மறு நாள் காலையில் வரவில்லை.அன்றைக்கே இரவு 12:00 மணிபோல் அங்கே போய் நின்று கொண்டேன்.பதினெட்டாவது ஆள் .அடுத்தநாள் காலை ஒரு 10:00 மணி போல் பப்பி கிடைத்தது.இதில் அன்றிரவு நான் பட்ட கஷ்டத்தை மட்டும் ஒரு பந்தி வரக்கூடிய அளவுக்கு எழுதலாம்.

பாரிஸ்…….பாரிஸ் என்று இதோ பாரிஸ் வந்தாகிவிட்டது.நான்கு மாதங்கள். இன்னும் ஒரு உருப்படியான வேலை கிடைக்க வில்லை.ஈஃபீல் டவர் ஏறி பார்ப்பதற்க்கு கூட கையில் நயா… பைசா இல்லை. அண்ணனை கேட்டால் பீர் குடித்து விடுவேன் என்ற பயத்தில் ஒரு பைசா கூட தருவதில்லை.வாழ்க்கை அதுபாட்டுக்கு போய்க் கொண்டு இருக்கின்றது.இந்த ஊர் தமிழ் பெண்களை பார்க்கும் போது சந்தோசமாகத்தானிருக்கின்றது.இன்னும் 90 சதவீதமான பெண்கள் நம் கலாச்சாரத்தை மறக்கவில்லை.கோவில் போகின்றார்கள் .தாவணி உடுத்துகின்றார்கள்,விரதம் இருக்கின்றார்கள்.என்ன தமிழை கொஞ்சம் சவட்டி சவட்டி பேசுகின்றார்கள்.அவ்வளவுதான்.மற்றபடி தமிழ் பெண்கள் தமிழ் பெண்கள் தான்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s