எழுத்தாளன் என்பவன்,எப்பொழுதும் ஒரு சமூக சீர்திருத்தவாதியாக இருக்கவேண்டுமே ஒழிய,அந்தப் பாழாய்ப்போன சமூகத்துடனும்,அவற்றின் ஒன்றுக்கும் உதவாத பிற்ப்போக்குத்தனமான வாழ்வியலோடும் ஒன்றிப் போய்விடக்கூடாது என்று திட்டவட்டமாய் நம்புபவன் நான்.இன்றளவும் சில தமிழ் புரட்சிகர  எழுத்தாளர்கள் தம் நிழல் உலகத்தில் சமூகத்தின் விழுமியங்களை பற்றி சாட்டை…சாட்டையாக கட்டுரைகளையும்,கவிதைகளை எழுதி குவித்திருந்தாலும்,தம் நிஜ உலகில் பெரும் பிற்போக்குவாதிகளாக வாழ்ந்து கொண்டிருப்பதினை பார்த்திருக்கின்றேன்.அண்மையில் கூட இந்தியாவில் ஒரு தமிழ் எழுத்தாளர்.பெயர் சாரு நிவேதிதா.பெரும்பாலும் இவர் தன் புத்தகங்களில் தன்னை ஒரு முற்போக்குவாதி எனவும்,சமூகத்தில் நிலவும் பழமைவாதக்கொள்கைகளை அடியோடு வெறுக்கின்ற ஒரு சீர்திருத்தவாதி எனவும்   காட்டிக்கொண்டாலும்,உண்மையில் இவர் பெண்களின் மீது ஒரு வக்கிரபுத்தி கொண்ட,பெண்களை இழிவாகப் பேசும் ஒரு ஆணாதிக்கவாதி.

 

சமயங்களில்,கடவுள் என்பவன் யார்?அவன் என்கிருக்கின்றான்?அவன் எப்படிப்பட்டவன்?என்றெல்லாம் யோசித்துப்பார்ப்பேன்.படிப்பறிவோடும்,பகுத்தறிவோடும் அந்த விஷயத்தை யோசித்து பார்க்கும்பொழுது கடவுள் என்பவன் ஒரு மூடத்தனத்தின் சிருஸ்டி எனவும்,அறியாமையின் கனவு எனவுமே நினைக்கத் தோன்றுகின்றது.இதற்காக சுஜாதாவின்,”கடவுள் இருக்கின்றார்” என்கின்ற ஒரு கடவுள் ஆய்வு புத்தகத்தினை வாசித்துப் பார்த்தேன்.இருந்தாலும் அந்த புத்தகம் கடவுள் பற்றிய என்னுடைய சந்தேகங்களை முழுமையாக நிவர்த்தி செய்யவில்லை.மாறாக ஒரு குழப்ப நிலையையே எனக்கு அனுபவமாகத் தந்தது.பொதுவாக நான்,”நான் கடவுளை நம்புகின்றேன்.அவரின் தண்டனைகளுக்கு பயந்தவன்.என் ஒவ்வொரு செயல்களையும் கடவுளை தொழுது விட்டே ஆரம்பிக்கின்றேன்.”என்றெல்லாம் “புருடா”விடும் ஆசாமிகளை நம்பியதே கிடையாது.ஏன் என்றால் “கடவுள் இல்லை “என்று கூறிக்கொண்டு அலைகின்ற சில நாத்திகவாதிகளை விட…இந்தமாதிரி சில ஆத்திகவாதிகள் தான் கொடும் செயலை செய்யும் பாதகர்களாகவும்,எந்தவிதமான பழிபாவத்துக்கும் அஞ்சாத துர்மனநிலை கொண்ட கயவர்களாகவும் வாழ்வதினை பார்த்திருக்கின்றேன்.அதிலும் சில(மன்னிக்கவும் பல என்றே எடுத்துக்கொள்ளவும்)இஸ்லாமிய மதத்தினரை சார்ந்த ஆத்திகவாதிகளை பற்றி சொல்லவே வேண்டாம்.நாளொன்றுக்கு ஆயிரம் தடவை “இன்ஷா அல்லா “என்று சொல்லிக்கொண்டு,காலையில் தொடங்கி….ராத்திரி தூங்கப்போகும் வரை அவர்கள் செய்யும் அத்தனை செயல்களும் குள்ளனரித்தனங்களாகவே இருக்கும்.நான் கடையில் இருக்கும் பொது சந்தித்த அந்த இஸ்லாமிய வாடிக்கையாளர்களை இப்போது நினைத்தாலும் ஆத்திரம் பொத்திக்கொண்டு வருகின்றது.பத்தாததிற்கு“துரை…நீங்க எங்கள சந்தேகப்பட வேணாம் துர..நாம முஸ்லிமூ….நாம அப்படி ஒரு நாளும் செய்ய மாட்டோம்.அந்தமாதிரி செய்யா அல்லா நம்மல சும்மா விடமாட்டாரு.ஒரு நாளைக்கு நாலு வேள தொளுவுரம் துர …..இன்ஷா அல்லா “என்கின்ற தத்துவம் வேறு.எப்படி இவர்களால் தங்களை தாமே கடவுள் விருப்பு கொண்ட மனிதர்களாக சித்தரித்துக் கொண்டு இந்த மாதிரியெல்லாம் செய்யமுடிகின்றது.இவர்களுக்குள்ளும் எத்தனையோ படித்தவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்.கடவுள் பற்றிய புத்தகங்களையும்,இதிகாசங்களையும் படித்து தானே இருப்பார்கள்.இருந்தும் எதற்காக இவர்கள் ஒரு பொய்யான வாழ்வுக்குள் தங்களை ஈஷித்துக் கொள்கின்றார்கள்.இஸ்லாமியர்கள் இப்படி என்றால் சில இந்துதத்துவவாதிகளின் நிலைமையே வேறு…..குறிப்பாக மலையக மக்கள்.அப்பப்பா இவர்களெல்லாம் மனிதர்களின் யோனியில் இருந்து பிறந்தவர்களா என்கின்ற சந்தேகமே அவ்வப்பொழுது எழுகின்றது.குறிப்பாக நான் வேலை செய்த கடையில் கணக்குப்பிள்ளையாக இருந்தகனராஜா,தர்மலிங்கம்,மணி,கணபதி,போன்றவர்களை என்னால் மறக்கவே முடியாது.இதில் என்னை மிகவும் பாதித்தது,அந்த மாதிரி மனிதர்களெல்லாம்…..சந்தனம்,குங்குமம்,விபூதி போன்ற கடவுளுக்கே உரித்தான மத அடையாளங்களுடன் திரிவதுதான்.இந்த லட்சணத்தில்,“கேஷியர்….நீங்க ஏன் கோவிலுக்கு போவதில்லை.நெத்தியில ஏன் குங்குமம் வைப்பதில்லை?” போன்ற கேள்விகள் வேறு. இவர்களுடன் ஒப்பிடும் பொது சில நாத்திகவாதிகள் சிறந்தவர்கள் என்றே தோன்றுகின்றது. மனசாட்சிக்கு பயந்தவர்களாகவும்,சத்தமில்லாமல் பிறருக்கு உதவி செய்பவர்களாகவும் இருகின்றனர்.

இப்போது பாரிசிற்கு வருகின்றேன்.என் வேலையில் இப்போது என்னுடைய மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை லீவு நாள் போய்க்கொண்டு இருகின்றது.நாள் பூராவும் வேலை…வேலை …வேலை என்றே போய்விட்டது.கணினியையே இன்று தான் திறந்து பார்க்கின்றேன்.பிட்சா…பிட்சா என்று சாப்பிட்டு நாக்கு செத்துப்போய்விட்டது.இன்றைக்கு மட்டும் தான் வீட்டு சாப்பாடு சாப்பிட முடிகின்றது.வேலை கிடைத்த தினத்திலிருந்து லா சப்பல் பக்கமே எட்டிப் பார்க்க வில்லை.(லா சப்பல் என்பது தமிழர்கள் வியாபாரம் செய்யும் பகுதி.)வாழ்க்கை இயந்திரத்தனமாய் ஓடிக்கொண்டு இருக்கிறது.கிடைக்கும் இப்படிப்பட்ட நேரத்தில் கட்டுரைகளை எழுதிக்கொண்டு இருகின்றேன்.போகட்டும்….இனி இதுதானே வாழ்க்கை .சகிப்புத்தன்மை என்பதை பழகித்தான் ஆகவேண்டும்.பாரிஸ் என்பது நிலமேல்தட்டில் இயங்குவதை விட,கிழதட்டு என்கின்ற பாதாள உலகத்திற்க்குலேயே அதிகமாக இயங்குகின்றது.நகரத்தில் பாதி ஜனத்தொகை தங்களது நேரத்தை மெட்ரோ என்கின்ற சாதனத்துக்கு உள்ளேயே தங்களை அறியாமல் தம் நேரத்தினை பெரும்பாலும் செலவழித்துக் கொண்டு இருகின்றனர்.பாதிப்பேர் டிக்கெட்டே எடுப்பதில்லை.நாம் டிக்கெட்டை மெஷினுக்குள் ஓட்டி உள்ளே போகும்போது நம்மை அனைத்துக் கொண்டே நம் பின்னால் வருவார்கள்.நானும் இப்படித்தான்.ஒருநாள்  டிக்கெட் எடுக்காமல் என் அண்ணனிற்கு பின்னால் அவரை அனைத்துக் கொண்டே சென்றேன். கொன்றோலர் பெண் கண்டு பிடித்து விட்டாள்.தலைக்கு 72 யூரோ எழுதி விட்டாள்.அதற்க்கு பின்னர் டிக்கெட் எடுக்காமல் மெட்ரோ பிடித்ததாக நினைவு இல்லை.பெரும்பாலான பாரிஸ் மனிதர்கள் துவேசம் என்பதை அறியாதவர்களாகவே இருகின்றனர்.தாம் உண்டு…தம் பாடு உண்டு என்றே இருக்கின்றனர்.ஒரு சில கறுப்பின இளைஞர்களும்,கலப்பினத்தவர்களுமே இனவெறி பிடித்தவர்களாக இருகின்றனர்.அத்தோடு அவர்களில் கள்வர்களும் உண்டு.ராத்திரி நேரத்தில் தனியாக வர முடியாது.வந்து அவர்களிடம் மாட்டுப்பட்டால்,மூக்கை குறிபார்த்து ஓங்கி ஒரு அடிகொடுத்து விட்டு ஓடிவிடுவார்கள்.கொஞ்ச நேரத்திற்கு ஒன்றுமே தெரியாமல் நம் தலையை குருவிகள் சுற்றுவது போல் இருக்கும்.சுற்றி முடித்த பின்…..சுய நினைவு வந்து பார்த்தால்…போன் உட்பட எல்லாமே களவு போய் இருக்கும்.இதிலும் நான் இருக்கும் பகுதி ரொம்பவும் பயங்கரமான பகுதி தமிழர்களின் வாழ்விடப் பகுதி என்பதால் கள்வர்களின் எண்ணிக்கையும் சற்று கூடுதல்.பெண்கள்,வயது போன பாட்டிமார் என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள் அடித்து விட்டுத்தான் பறித்துக் கொண்டு ஓடுவார்கள்.கண்ணிமைக்கும் நேரத்திற்குள் எல்லாமே நடந்து விடும்.போலீசில் புகார் கொடுத்தால் அங்கே இருப்பவர்களும் கருப்பர்கள்.எழுதிகொடுத்து விட்டு வரவேண்டியதுதான்.எந்த பிரயோசனமும் இருக்காது.இப்படித்தான் எனக்கு தெரிந்த நண்பர் ஒருவர்.பெயர் காண்டீபன்.கறுப்பர்களின் போன் ஆசையால் பாதிக்கப்பட்டு காது,மூக்கு,வாய் என்பவற்றால் இரத்தம் வர மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.(அவர் கூடிய சீக்கிரமே சுகம் பெற்று வீடு திரும்ப வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிகொள்கின்றேன்)

பின் குறிப்பு:கடவுள் சார்ந்த எனது பந்தியில் இஸ்லாமியர்களை பற்றியும்,மலையக தமிழர்களை பற்றியும் எழுதி இருந்தேன்.ஈழத் தமிழர்களைப் பற்றி எழுத வில்லை.காரணம்,கடவுளின் பெயரால் அவர்கள் செய்யும் அட்டுழியங்களை எழுத ஆயிரம் பக்கங்கள் வேண்டும்.தன் சொந்த தங்கையின் குடும்பம் நல்லா இருக்ககூடாது என்று கடவுளிடமே போய் நேர்த்திக்கடன் செய்யும் எத்தனையோ அக்காமார்களை பார்த்திருக்கின்றேன்.கடவுள் ஏதோ அவர்களின் எதிர்த்த வீட்டுக்காரன் தானே……..அடுத்தவர்களின் குடும்பம் நாசமாப்போக என்று நேர்த்திக்கடன் வைக்க.

மற்றுமொரு பின் குறிப்பு :என் உயிரினும் மேலான என் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு என்னுடைய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s