நான் பெலருசில் இருக்கும் சமயம் ஒருதடவை என் அக்கா முறையுள்ள ஒரு பெண்ணிடம் 500$ கடனாக கேட்டிருந்தேன் .அதற்கு அவர் “காசு என்ன மரத்திலா காய்க்கிறது என்று கேட்டார் “அதன் பிறகு நானும் கேட்க்கவில்லை .அவரும் அனுப்பவில்லை .நேற்று எனக்கு திருமணநாள் .அவரும் வந்திருந்தார் .எனக்கு ஒரு பவுணில் ஒரு மோதிரமும் ,என் மனைவிற்கு ஒரு பவுணில் ஒரு சங்கிலியும் போட்டிருந்தார் .இரண்டுக்கும் எப்படியும் ஒரு 800 $ முடிந்து இருக்கும் .ஆனால் காசு எப்படி வந்தது என்பது மட்டும் தான் எனக்கு புரியவே இல்லை .சிலநேரம் மரத்தில் காய்த்து இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டேன் .

Advertisements

2 thoughts on “அக்கா

  1. நீங்கள் வாங்கோ என்று அழைத்து விட்டு இப்படி சொல்வது தப்பு . நீங்கள் கிட்ட நேரம் அவாட்டை காசு இல்லாமல் இருக்கும் இப்ப வேலை பார்த்து வைத்திருப்பா ..

    1. வணக்கம் அஞ்சு .நான் இதை ஒரு பிரஞ்சு நூலகத்தில் இருந்து எழுதுகின்றேன் .நீங்கள் இப்பொழுது முகப்புத்தகத்தில் இருகின்றீர்கள் .என்னால் உங்களுடன் சாட் செய்ய முடியாது .காரணம்.இது நூலகம் என்பதால் இங்கு அரட்டை வசதியினை முகப்புத்தகத்தில் இருந்து மறைத்து விட்டார்கள் .அக்கா என்கின்ற என்னுடைய பதிவிற்கு நீங்கள் எதிர்வினை ஆற்றி இருந்தீர்கள் .அதற்கு என்னுடைய எதிர்வினை இது .நான் அக்கா என்று குறிபிட்டது என்னுடைய ஒன்றுவிட்ட சகோதரி ஒருவரை .அவரிடம் நான் ஐந்நூறு டொலர் கடனாக கேட்டிருந்தேன் .அதற்கு அவர் காசு என்ன மரத்திலா காய்கின்றது என்று கேட்டு இருந்தார் .இந்த இடத்தில் நாம் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளவேண்டும் அஞ்சு .காசு இப்பொழுது கைவசம் இல்லை என்பதற்கும் .காசு என்ன மரத்திலா காய்கின்றது என்று கேட்பதற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது .இவ்விரு வாக்கியங்களும் ஒருவனுக்குள் ஏற்படுத்தும் உளவியல் தாக்கங்களிற்க்குள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை.தவிர, நான் பத்துதடவை அவரிடம் கடன் கேட்டு அவரும் பத்துதடவை பணம் அனுப்பி ,பதினோராவது தடவை நான் திருப்பியும் அவரிடம் கடன் கேட்டும் பொழுது அவர் எரிச்சல் பட்டு ” மேற்கண்டவாறு” கூறியதில் நியாயம் இருக்கிறது . ஆனால் உண்மை அப்படியல்ல .நான் அப்பொழுதுதான் அவரிடம் முதல்முறையாக கடன் கேட்டு இருந்தேன் .அவர்கள் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை என்களைபோன்றவர்களிற்காக தராமல் விடுவதினை நான் தவறென்று வாதாட வரவில்லை .இருந்தாலும் ஒருவன் கஷ்டப்படும் பொழுது உதவி செய்ய மறுப்பதினைத்தான் தவறு என்று முன் வைக்க வருகின்றேன் .

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s