ஓ,,,தாவீது ராஜாவே!

முதலில், அது மீன்தானா…! என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த இரவு நேரத்தில் சுறாக்களும் அலைந்துகொண்டிருக்கும். முன்னொரு தடவையும் இப்படித்தான் நிகழ்ந்தது. மீனென்று நினைத்து வலையை ஒரு திட்டமிடலின்றி இழுத்திருக்கின்றார். சுறா இவரைநோக்கி பாய்வதற்குச் சரியாக இரண்டு வினாடிகளுக்கு முன்புதான் வரவிருக்கும் ஆபத்துப்பற்றிச் சிந்தித்தார். தன்னை நோக்கிப் பாய்ந்து வந்த சுறாவின் முகத்தை இரண்டு கைகளினாலும் தள்ளிவிட்டு குபீரென்று அப்பாற் பாய்ந்தார். அந்தச் சின்னப் படகின் பின்பக்கத்தில் விழுந்த சுறா, ஒரு விபரிக்க முடியாத மூர்க்கத் தனத்தோடு எம்பியெம்பிக் குதித்துக் கொண்டிருந்தது. முதலில் அச்சமடைந்த தாவீது பிற்பாடு ஒரு நிலைக்கு வந்தார். பலத்தில் தன்னைவிட சுறாவே பெரியது என்று தெரிந்திருந்தும் அவர் பயப்படவில்லை. சண்டைபோடும் தோரணையோடு கைகள் இரண்டையும் முன்னுக்கு நீட்டிக்கொண்டு திமிறிக்கொண்டிருக்கும் சுறாவையே பார்த்துக் கொண்டிருந்தார். சுறாவின் துடிப்பில் படகு கவிழ்ந்து விடுமோ என்று நினைத்தார். Continue reading

Advertisements

சராஹா

மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்போதுதான் முகப்புத்தகத்தை மறுபடியும் ரீஆக்டிவேட் செய்திருந்தார் சயந்தன். இன்றுதான் “சரஹாவும்” வந்தார். பாவித்து சிலமணிநேரத்திலேயே மறுபடியும் முகப்புத்தகத்தை டீஆக்டிவேட் செய்துவிட்டார். என்னவாகயிருக்கும்? யாரும் கேட்கக் கூடாததைக் கேட்டு விட்டார்களோ?

யதார்த்தன்: >> நான் சயந்தன்ர அந்தரங்க காரியதரிசி எண்டு எப்ப சொன்னனான். <<

அகநாழிகையில் வெளிவந்த உங்களின் மிக ரகசிய இயக்கம் படித்தேன். புனைபெயரில் எழுதியிருந்தாலும் மொழியின் லாவகத்தை வைத்து நீங்கள்தானெனக் கண்டுபிடித்தேன். அருமை தொடர்ந்து எழுதுங்கள்.

யதார்த்தன்: >> மன்னிக்கவும்… அது தர்முபிரசாத் எழுதிய கதை. << Continue reading

விமர்சனம்.

மிகவும் நல்ல கதை. பல இடங்களில் கத்தரி போட்டிருந்தால், இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும். இந்தக் கத்தரி கூட பொருத்தமான வார்த்தையல்ல. இது எனது பார்வை மட்டுந்தானே. வேணுமானால்ச் சீர்மைப்படுத்தல் என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் வார்த்தைகளை அபரிமிதமாகப் பயன்படுத்துபவர் என்பதை உங்கள் தலைப்பே வாசகனுக்குக் காட்டிக் கொடுத்துவிடும். அதைத் -தொலைந்துபோன சிறிய பைபிள்- என்பதோடேயே நிறுத்தியிருக்கலாம். ரஷ்யப் பெயர்கள் “விளாடிமிர்” என்றுதான் இருக்கும். நீங்கள் “விளாடிமின்” என்று எழுதுவது பொருத்தமாயில்லை. “மவுண்ட் பேட்டன்”, “ஐன்ஸ்டைன்” இவர்களது மொழிகள் படைப்புடன் தேவையில்லை. எதுக்கு சப்போர்ட்டுக்கா? Continue reading

கத்னா.

சுவிஸர்லாந்தின் சூரிச் நகரில் இம்மாதம் (மே) 7ந் திகதி நடைபெற்ற 33வது பெண்கள் சந்திப்பில் ஆக்காட்டி வெளியிட்டிருந்த ‘கத்னா’ குறித்த நேர்காணல், சிறுகதை, கட்டுரை மற்றும் ஃபேஸ்புக் பதிவுகளின் தொகுப்பாக வழங்கப்பட்ட பிரசுரத்தின் PDF வடிவத்தைக் கீழ்வரும் இணைப்பில் பதிவிறக்கிக் கொள்ளலாம்.

கத்னா.

 

புத்தரின் இசை, மற்றும் குற்றவுணர்வு.

சில வருடங்களுக்கு முன்னர், நண்பர்கள் சிலருடன் இமயமலையின் அடிவாரத்தில் தங்கியிருந்தேன். அப்போது ஒரு பௌத்த துறவியைச் சந்திக்க நேர்ந்தது. உண்மையில் அப்போது எனக்கு பௌத்தம்  குறித்து எந்தவொரு ஈடுபாடும் கிடையாது. சித்தார்த்தன் குறித்த தகவல்களே எனக்குள் பல கேள்விகளை எழுப்பியிருந்தன. ஒரு மிகப்பெரும் செல்வந்தர் ஒரே நொடியில் எல்லாவற்றையும் துறந்துவிட்டு துறவியாக மாறிவிட முடியுமா? எது அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது? இப்படி எண்ணற்ற கேள்விகள்.

ஆனால், இவற்றுக்கெல்லாம் பதில் கிடைத்தாற்போல் இருந்தது நான் இமயமலையில் சந்திக்க நேர்ந்த அந்தத் துறவியின் சந்திப்பு. “ சித்தத்தின் நிலைகளுக்கெல்லாம் மனமே முன்னோடி. அவை மனத்திலிருந்து உண்டானவை. மனமே எல்லாவற்றுக்கும் மேலாக நிற்கிறது. தீய எண்ணத்தோடு ஒருவன் பேசினாலென்ன, செயல்புரிந்தாலென்ன வண்டிச் சக்கரம் மாட்டின் அடியைத் தொடர்ந்து செல்வது போலத் துன்பம் அவனைத் தொடர்ந்து செல்லும்.” என்று கூறும் அவர், உலகெங்கும் சென்று தம்ம பதத்தினைப் பற்றி விளக்கிக் கூறுகின்றார். அவர் எந்த நாடுகளுக்குச் செல்கின்றாரோ அந்த நாடுகளிருந்து மட்டுமில்லாமல் பக்கத்து நாடுகளிலிருந்தும் அவரின் உரையைக் கேட்பதற்காக மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து விடுகின்றார்கள். மலேசியாவில் பிறந்து, லண்டன் கல்லூரியொன்றில் கல்வி கற்றவரான அவருக்கு எட்டு மொழிகளில் பரிச்சியம். தமிழ் உட்பட. Continue reading

நீலப் பறவை. 

என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.

ஆனால், நான் மிகவும் கடுமையானவொரு தொனியில்

அப்பறவைக்குக் கூறினேன்.

நீ இங்கேயேயிரு; ஏனெனில், மற்றவர் உன்னைப்பார்க்க

நான் ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை.
என் இதயத்திலிருந்து

ஒரு நீலப்பறவை வெளியேற முயல்கிறது.
ஆனால் நானோ அதன்மீது மதுவினை ஊற்றுகின்றேன்.  Continue reading

குழந்தைகள் பயங்கரமானவர்கள்.(கட்டுரை)

மேதகு முசேவெனி !

நீ உருவாக்கிவிட்ட ஆயிரமாயிரம் குழந்தைப் போராளிகளில்

ஒருத்தியான ஷைனா கெய்ட்ரசி பேசுகின்றேன்.

என்னைக் கண்ணாடியில் பார்க்கும்போது ,அங்கே உனது முகம்தான் எனக்குத் தெரிகின்றது.

எனது கனவுகளில் நீ எனது துப்பாக்கியை ஏந்தியபடியே என்னிடம் வருகின்றாய் .

எனது கனவுகளில் இன்றும் உனது வசீகரக் குரல் கேட்கிறது.

உனது அழகிய வசனங்கள் உனக்காக என்னை இரத்தம் சிந்த வைக்கின்றன.

நான் உனது விளையாட்டை, விதிமுறைகளை அறியாமலேயே விளையாடினேன். அப்போது உனது முகம் ஒளிர, ஒளிர எனது ஆன்மா இருண்டு கொண்டே போயிற்று.

நீ என் கைகளில் திணித்த துப்பாக்கியின் கனம் என்னை நிலைகுலைய வைத்தது.

நாங்கள் உனக்காக இரத்தத்தில் மூழ்கினோம்.

குண்டு துளைக்காத ஆடைக்குள் நீ பதுங்கியிருக்கின்றாய். ஆனால் அங்கே எங்களுக்கு இடமில்லை.

எனது ஆன்மா கேள்விகளை எழுப்பினால் நீ புன்னகைத்துக் கொண்டே என்னைத் தட்டுவதற்கு கட்டளையிடுவாய்.

ஏனெனில் நீ கேள்விகளைக் கண்டு அஞ்சுகின்றாய்!

நீ என்னை எனது நிலத்திலிருந்து துரத்தினாய்! Continue reading